மூடப்பட்ட செவர்லே டீலருக்கு விண்டேஜ் கார்களால் அடித்த ஜாக்பாட்!!

அமெரிக்காவில் மூடப்பட்ட செவர்லே டீலருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. விற்பனையாகாமல் அவர் வைத்திருந்த 500க்கும் மேற்பட்ட விண்டேஜ் கார்கள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.

அந்த கார்களுக்கு உண்மையான விலையை விட பல மடங்கு கூடுதல் விலை கிடைத்துள்ளது. பல ஆண்டு காலமாக பாதுகாத்து வந்த அந்த கார்கள் மூலம் அதன் உரிமையாளருக்கு புதையல் கிடைத்தது ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இதுகுறித்து கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

உலக மக்களை வாட்டி வதைக்கும் போக்குவரத்து நெரிசல்

 செவர்லே டீலர்

செவர்லே டீலர்

அமெரிக்காவிலுள்ள சிறிய நகரமான நெப்ராஸ்காவில் செவர்லேவின் டீலராக லேம்பரட் செயல்பட்டு வந்தது. வர்த்தகத்தில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 1996ல் இந்த ஷோரூமை உரிமையாளர் மூடினார்.

 500 கார்கள்

500 கார்கள்

50 ஆண்டு காலம் செவர்லே டீலராக இருந்து வந்த லேம்பரட் உரிமையாளர் தனது ஷோரூமில் விற்பனையாகாத புதிய கார்களை தனக்கு சொந்தமான பண்ணை நிலங்களிலும், இதர பகுதிகளிலும் நிறுத்திவிட்டார். இந்த நிலையில், ஷோரூமை மூடும்போது அவரிடம் இதுபோன்று மொத்தம் 500க்கும் மேற்பட்ட விற்பனையாகாத புதிய கார்கள் பராமரிப்பின்றி ஆங்காங்கே கிடந்ததன. பெரும்பாலான கார்கள் 20 கிமீ தூரமே ஓடியிருந்தன.

ஏலம்

ஏலம்

இந்த நிலையில் தன்னிடம் இருந்த கார்களை அவர் சமீபத்தில் ஏலத்தில் விட்டார். கடும் கிராக்கியுடன் நடந்த இந்த ஏலத்தில் விற்பனையாகாமல் அனாதையாக நின்ற சில கார்கள் உண்மையான விலையை விட 6 மடங்கு கூடுதலாக விலை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வம்

ஆர்வம்

இந்த ஏலத்தில் அமெரிக்கா, பிரேசில், தாய்லாந்து உள்பட 12 நாடுகளிலிருந்து 15,000 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். 2 நாட்களுக்கு இந்த ஏலம் நடந்தது. இதுதவிர, ஆன்லைன் மூலமும் 3,000க்கும் அதிகமானோர் ஏலத்தில் பங்கு பெற்றனர்.

சூடுபறந்த விற்பனை

சூடுபறந்த விற்பனை

முதல் நாள் விற்பனையில் 10 கார்கள் மட்டும் 6,76 லட்சம் டாலருக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது. இதில், 1958ம் ஆண்டு மாடல் கமாரோ பிக்கப் டிரக் 1.40 லட்சம் டாலருக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டது. 78ம் ஆண்டு கார்வெட் கார் 80,000 டாலருக்கு ஏலம் போயுள்ளது. இவை அனைத்தும் ஒரு சில கிலோமீட்டர் மட்டுமே ஓடியவை.

ஏல நிறுவனம்

ஏல நிறுவனம்

வான்டெர்பிரிங்க் நிறுவனம் இந்த ஏலத்தை ஏற்று நடத்தியது. ஏலத்தில் கார்கள் விற்பனையான முழுமையான விபரத்தை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. முதல் நாளில் மட்டும் 238 கார்கள் மற்றும் இதர வாகனங்கள் விற்பனையானதாக தெரிவிக்கப்பட்டது.

ஜாக்பாட்

ஜாக்பாட்

இரண்டு நாளில் மொத்தம் 28.41 லட்சம் டாலருக்கு வாகனங்கள் ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உரிமையாளர் பெருமிதம்

உரிமையாளர் பெருமிதம்

இந்த ஏலம் குறித்து லாம்பரெட் செவர்லே டீலரை நிறுவிய ரே மற்றும் மைல்டுரெட் லேம்பரேட்டின் மகள் ஜென்னி கூறுகையில்," இந்த கார்களை ஏலத்தில் விடுவது என்பது எனது தந்தையாரின் திட்டம். விற்பனையாகாத கார்களை எப்போதும் அவர் கைவிடுவதில்லை. அதனை பத்திரமாக நிறுத்தி பாதுகாக்க வேண்டும் என்று கூறுவார். நிச்சயம் ஒரு நாள் இந்த கார்களுக்கு பெரும் மதிப்பு கிடைக்கும் என்று கூறுவார். அதுபோன்றே, தற்போது பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது," என்றார்.

 விசுவாசம்

விசுவாசம்

ஜென்னியின் தந்தையார் விரும்பி சேகரித்த கார்கள் ஏலத்தில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Komonews

Most Read Articles
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X