உலகின் அதிக விலை மதிப்பு கொண்ட கார் கராஜ்கள்!

By Saravana

ஆசையோடு காரை வாங்குவதோடு மட்டுமில்லாமல் அவற்றை சிறப்பாக பராமரிப்பதும் ஒரு கலைதான். காரை வாங்கி தெரு ஓரத்தில் தவிக்கும் இன்றைய சூழலில் சிலர் கார்களை தங்களது உடன் பிறந்த உறவு போல் கருதி பாதுகாக்கின்றனர்.

அதிலும், சில கார் சேகரிப்பு ஆர்வர்களும், பெரும் செல்வந்தர்களும் தங்களது செல்வ வளத்தை காட்டுவதோடு, சிறப்பாக கார்களை பராமரிப்பதற்காக பல கோடி செலவில் கார் கராஜ்களை அமைத்து பாதுகாக்கின்றனர். தற்போது உலகில் அதிக விலை மதிப்பு கொண்ட சில கார் கராஜ்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பட்டியல்

பட்டியல்

உலகின் காஸ்ட்லி கார் கராஜ்கள் பட்டியைலை தொடர்ந்து அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

10.ஜெர்ரி சென்ஃபெல்டு

10.ஜெர்ரி சென்ஃபெல்டு

அமெரிக்க டிவி நடிகரான ஜெர்ரி சென்ஃபெல்டின் கார் கராஜும் உலகின் அதிக மதிப்பு கொண்டவைகளில் ஒன்றாகும். 3 அடுக்குகள் கொண்ட இந்த கார் கராஜில் 46 போர்ஷே கார்களும், இதர மாடல்களும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன. இந்த கார் கராஜில் சகல வசதிகளும் உண்டு. கார் பாதுகாப்பு மட்டுமின்றி, அலுவலகம், பில்லியர்ட்ஸ் டேபிள், சமையலறை, குளியலறை போன்ற வசதிகளும் உண்டு. வெளியில் வெப்ப நிலையை பொறுத்து இந்த கார் கராஜின் வெப்ப நிலை ஹைடெக் ஏசி யூனிட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த கராஜின் மதிப்பு 5 லட்சம் அமெரிக்க டாலர்களாக தெரிவிக்கப்படுகிறது.

2. இங்கிலாந்தில் ஓர் கராஜ்

2. இங்கிலாந்தில் ஓர் கராஜ்

இங்கிலாந்தின் நைட்பிரிட்ஜ் பகுதியின் ஹரோட்ஸ் வணிக வளாகத்தின் அருகிலிருக்கும் கார் கராஜ் ஒன்று 8.50 லட்சம் அமெரிக்க டாலர் விலை மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெறும் 6.4 மீட்டர் அகலமும், 4.75 மீட்டர் நீளமும் கொண்ட இந்த கார் கராஜில் வசதிகள் என்று எதுவும் கூற முடியாது. ஆனால், இதன் அமைவிடத்தால் இந்த கராஜ் அதிக விலை மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

8.மில்லியன் டாலர் கராஜ்

8.மில்லியன் டாலர் கராஜ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் 12 அடி நீளமும், 23 அடி அகலமும் கொண்ட வீட்டு கார் கராஜ் ஒரு மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது. நேரடியாக சாலையை இணைக்கும் விதமாக நகரத்தின் இதயப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கார் கராஜை வாங்குவதோடு, அதற்கு மாதாமாதம் பராமரிப்பு கட்டணமும் செலுத்த வேண்டும்.

7. பிரான்சிஸ் விஸ்னிஸ்கி கராஜ்

7. பிரான்சிஸ் விஸ்னிஸ்கி கராஜ்

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் பிரான்சிஸ் விஸ்னிஸ்கியின் கார் கராஜும் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்பு கொண்டது. 15,000 சதுர அடி பரப்பு கொண்ட அந்த கார் கராஜில் சிறிய கூடைப் பந்து மைதானம், சூதாட்ட அறை போன்றவை உள்ளன. லிஃப்ட்டுகள் பொருத்தப்பட்டு அதிக கார்களை நிறுத்தி வைக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் கராஜிற்கு மின்சாரம் மற்றும் விளக்குகள் பொருத்துவதற்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

6. க்ரேயிக் ஜாக்சன் கராஜ்

6. க்ரேயிக் ஜாக்சன் கராஜ்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த பிரபல கார் சேகரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான க்ரேயிக் ஜாக்சனின் கார் கராஜ் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது. சொகுசு கார்கள், அமெரிக்க மஸில் கார்களால் இந்த கார் கராஜின் மதிப்பு மேலும் அதிகரிக்கிறது. 3,600 சதுர அடி பரப்பு கொண்ட இந்த கார் கராஜை அமைக்க இரண்டு ஆண்டுகள் ஆனதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் கராஜ் கம்ப்யூட்டர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

5.டாம் கான்சேல்ஸ்

5.டாம் கான்சேல்ஸ்

அமெரிக்காவின் பிரபல சாப்ட்வேர் எஞ்சினியரான டாம் கான்சேல்ஸ் ஓய்வுக்கு பின்னர் தனது நிறுவனத்தை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தில் நெவடா பகுதியில் ஒரு இடத்தை வாங்கி பாதாள கார் கராஜை அமைத்தார். மோட்டார் இல்லம், கார்கள், மோட்டார்சைக்கிள் என தனது வாகன சேகரிப்பு அனைத்தையும் இந்த பாதாள கராஜில் வைத்து பாதுகாக்கிறார். ஒரு லிஃப்ட் மூலம் இந்த கார்களை கராஜில் இருந்து வெளியே கொண்டு வரப்படும். 6,000 சதுர அடி பரப்பு கொண்ட இந்த கார் கராஜ் கிளைமேட் கன்ட்ரோல் வசதி கொண்டது. 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த கார் கராஜ் அமைக்கப்பட்டுள்ளது.

4.ரால்ஃப் லாரன் டி.ஏ.டி கராஜ்

4.ரால்ஃப் லாரன் டி.ஏ.டி கராஜ்

அமெரிக்காவின் பேஷன் டிசைனரான ரால்ஃப் லாரன் தனது வாரிசுகளின் பெயரின் முதல் எழுத்தை வைத்து டி.ஏ.டி என்ற பெயரில் அமைத்திருக்கும் இந்த கார் கராஜ் பல மில்லியன் மதிப்பு கொண்டது. இந்த இரண்டடுக்கு கார் கராஜ் ஒரு மியூசியம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பலகை மேடைகளில், ஹாலஜன் விளக்கொளிகளில் கார்கள் நிறுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

3.ஜான் ட்ரவோல்ட்டா

3.ஜான் ட்ரவோல்ட்டா

நடிகர், பாடகர் என பன்முக திறமை கொண்ட ஜான் ட்ரவோல்ட்டாவின் கார் கராஜ் என்று குறிப்பிடுவது சரியாக இருக்காது. இந்த கராஜ் கார்கள் மட்டுமின்றி, போயிங் 707 விமானம், அதற்கு தேவையான ஓடுதள வசதியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவும் பல மில்லியன் அமெரிக்க டாலர் விலை மதிப்பில் கட்டப்பட்டது.

2.ஜே லெனோ

2.ஜே லெனோ

அமெரிக்காவை சேர்ந்த பிரபல காமெடி நடிகரான ஜெ லேனோ கார் சேகரிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர். இவரது 17,000 அடி சதுர அடி பரப்பு கொண்ட கராஜில் பல்வேறு வகையான கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த கராஜை சுற்றிப் பார்க்க 100 அமெரிக்க டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கராஜில் கார் பராமரிப்பு பணிமனையும் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டில் 4.5 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் சூரிய மின்சக்தி வசதி செய்யப்பட்டது.

1. எமிரேட்ஸ் தேசிய ஆட்டோ மியூசியம்

1. எமிரேட்ஸ் தேசிய ஆட்டோ மியூசியம்

உலகின் மிக அதிக விலை மதிப்பு கொண்ட கராஜில் முதன்மையானதாக குறிப்பிடப்படுகிறது. அரபு ஷேக் ஹமாத் பின் ஹம்தன் அல் நயானின் சேகரிப்புகளுக்காக அமைக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டிரக், ஜீப் போன்றவற்றுடன் பிரமிட் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் கிளைமேட் கன்ட்ரோல் வசதி கொண்டது. இந்த கார் கராஜில் 200க்கும் மேற்பட்ட அரிய மாடல் கார்கள் பராமரிக்கப்படுகின்றன.

இந்தியாவிலும்...

இந்தியாவிலும்...

இந்தியாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களும் இதுபோன்று பெரும் பொருட்செலவில் கார் கராஜ்களை அமைத்துள்ளனர். அதனை இன்னொரு செய்தித் தொகுப்பில் காணலாம்.

உலகின் டாப்-10 கார் சேகரிப்பாளர் செய்தித் தொகுப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Take a look at top 10 most expensive garages in the world.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X