புல்லட் புக்கிங் செய்தால் உடனடி டெலிவிரி: எப்போது தெரியுமா?

தன்டர்பேர்டு 500
அடுத்த ஆண்டு மார்ச் முதல் புல்லட் கிளாசிக், தண்டர்பேர்டு உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களின் காத்திருப்பு காலம் கணிசமாக குறையும்," என ராயல் என்பீல்டு தலைவர் வெங்கி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளுக்கான டிமான்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில், ராயல் என்பீல்டின் தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்களுக்கு ஒருவித தனி ஈர்ப்பு இருக்கிறது. ஆனால், இந்த மோட்டார்சைக்கிளுக்கு இருக்கும் காத்திருப்பு காலம்தான் வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்குகிறது.

இந்த நிலையில், ராயல் என்பீல்டு தயாரிப்புகளின் காத்திருப்பு காலம் இன்னும் சில மாதங்களில் கணிசமாக குறையும் என அந்நிறுவனத்தின் தலைவர் வெங்கி பத்மநாபன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்," அதிகரித்து வரும் தேவையை கருத்தில்க்கொண்டு சென்னை அருகே ஒரகடத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு 1. 5 லட்சம் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த புதிய ஆலையில் வரும் மார்ச் மாதம் முதல் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு கிளாசிக் மற்றும் தன்டர்பேர்டு மோட்டார்சைக்கிள்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்," என்று கூறினார்.

இதனிடையே, கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தன்டர்பேர்டு 500 மோட்டார்சைக்கிளை புக்கிங் செய்தால் உடனடியாக டெலிவிரி கொடுக்கப்படும் என்று ராயல் என்பீல்டு தெரிவித்திருப்பது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Iconic motorcycle manufacturer Royal Enfield has revealed waiting period for its bikes would come down from present from March 2013.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X