கோவாவை அதிர வைத்த இந்திய பைக் திருவிழா - டிரைவ்ஸ்பார்க் ஸ்பெஷல்!

Posted By:

கோவாவில், கடந்த வார இறுதியில் நடந்த இந்திய பைக் வீக் திருவிழா பைக் பிரியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்தது. நாடுமுழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான பைக் உரிமையாளர்களும், பைக் பிரியர்களும் இந்த திருவிழாவில் பங்கேற்க குவிந்திருந்தனர்.

இந்த பைக் திருவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை எனற வருத்தம் உங்களுக்கு வேண்டாம். இந்த பைக் வீக் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை உங்கள் கண் முன்னே வழங்குகிறோம். நேரில் சென்றிருந்தால் கூட சிலவற்றை நீங்கள் தவறவிட்டிருக்கலாம். ஆனால், இங்கே அனைத்துத் தகவல்களையும், படங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

1. இந்திய பைக் வீக்

1. இந்திய பைக் வீக்

பைக் பிரியர்களுக்காகவும், உரிமையாளர்களுக்காகவும் நடத்தப்படும் பிரத்யேக திருவிழா. கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் நடந்தது. நாடுமுழுவதும் இருந்து 12,000க்கும் அதிகமானோர் தங்களது பைக்குகளுடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.பைக் அணிவகுப்பு, கஸ்டமைஸ் பைக்குகள், கண்காட்சி, பைக் சாகசம், டிராக் ரேஸ், இசை நிகழ்ச்சிகள் என அமர்க்களப்பட்ட இந்த பைக் வீக் திருவிழா நிச்சயம் ஆண்டுக்கு ஆண்டு மெருகு கூடி வருகிறது. மூன்றாவது பைக் வீக் திருவிழா நிகழ்வுகளை அடுத்தடுத்த ஸ்லைடுகள் முதல் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் டீம்

டிரைவ்ஸ்பார்க் டீம்

இந்திய பைக் வீக் திருவிழாவின் நிகழ்வுகளை முழுமையாக வழங்கும் விதத்தில் எமது எடிட்டர் ஜோபோ குருவில்லா, ஆங்கில துணை ஆசிரியர்கள் அஜிங்கியா மற்றும் ராஜ்கமல் ஆகியோர் ஒருநாள் முன்னதாக கோவா சென்றடைந்தனர்.

பிரபலங்கள் பைக் அணிவகுப்பு

பிரபலங்கள் பைக் அணிவகுப்பு

கோவா பைக் வீக் திருவிழாவிற்கு பைக்குகளில் அணிவகுத்த பிரபலங்கள். படத்தில் டினோ மோரியா, கவுரவ் கில் ஆகியோர் பைக்குகளில் அணிவகுத்து வருவதை காணலாம்.

4. துவக்க நிகழ்ச்சி

4. துவக்க நிகழ்ச்சி

துவக்க நிகழ்ச்சியாக, பத்திரிக்கையாளர் சந்திப்பில் செவன்ட்டி இஎன்ஜி அமைப்பின் நிறுவனர் மற்றும் சிஇஓ., மார்ட்டின் டா கோஸ்ட்டா, ஹார்லி டேவிட்சன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இய்ககுனர் அனூப் பிரகாஷ், ஷெல் லூப்ரிகன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைமை அதிகாரி மணிஷ் திரிபாதி மற்றும் ஃபாக்ஸ் இன்டர்நேஷனல் சேனல்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கரன் தான்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5. பெனெல்லி பைக்

5. பெனெல்லி பைக்

இந்தியர்களின் கைகளில் தவழ தயார் நிலையில் நின்ற பெனெல்லி பைக்...

6. டிராக் ரேஸ் பைக்

6. டிராக் ரேஸ் பைக்

இந்திய பைக் வீக் திருவிழா மைதானத்தில் டிராக் ரேஸ் பைக் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும், பைக் கண்காட்சி நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கான டிராக் ரேஸ் பைக்குகளுக்கான ரேஸ் டிராக்கும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த டிராக் ரேஸ் டிராக் இந்திய மோட்டார் பந்தய அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது.

7. பைக் ஸ்டன்ட்

7. பைக் ஸ்டன்ட்

வெயிலின் தாக்கத்தால் சூடாகியிருந்த மூளையை மேலும் சூடாக்கிய பைக் ஸ்டன்ட்.

8.பரிசு பெற்ற அணி

8.பரிசு பெற்ற அணி

பைக் ஸ்டன்ட் போட்டியில் கோயபுத்தூரை சேர்ந்த த்ராட்லர்ஸ் அணி. ரூ.50,000 முதல் பரிசாக பெற்றனர்.

 9. கூடாரம்

9. கூடாரம்

பைக் பிரியர்களுக்கு அழுத்தமான நினைவுகளை தரும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள். கேம்பிங் நிறுவனம் இந்த கூடாரங்களை அமைத்திருந்தது.

10.இடைவிடாத பணி

10.இடைவிடாத பணி

வாசகர்களுக்கு நிகழ்வுகளை சிறப்பாக வழங்குவதற்காக தொடர் வேலைகளில் இருந்த எமது குழுவினர். இடமிருந்து டிரைவ்ஸ்பார்க் எடிட்டர் ஜோபோ குருவில்லா, ஏற்பாட்டாளர் மார்ட்டின் டா கோஸ்ட்டா, ஆங்கில துணை ஆசிரியர் அஜிங்கியா. புகைப்படத்தை எடுத்தவர் ஆங்கில துணை ஆசிரியர் ராஜ்கமல்.

 11.பைக்கில் உலகம் சுற்றும் ஹூபர்ட்

11.பைக்கில் உலகம் சுற்றும் ஹூபர்ட்

கடந்த 10 ஆண்டுகளாக தனது மோட்டார்சைக்கிளில் உலகை வலம் வந்துகொண்டிருக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஹூபர்ட் க்ரெய்கெல்லின் மோட்டார்சைக்கிளும் இந்திய பைக் வீக் திருவிழாவில் தரிசனம் தந்தது. அவர் சுற்றி வந்த நாடுகளின் பெயர்களை அவரது பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் சைடு காரில் குறிப்பிட்டுள்ளார்.

12. இது ட்ரையம்ஃப் அரங்கு

12. இது ட்ரையம்ஃப் அரங்கு

ட்ரையம்ஃப் பைக்கின் கம்பீரத்தை மென்மையாக எடுத்துரைக்கும் அழகியின் போஸ்.

13.அந்தி வரும் வேளை

13.அந்தி வரும் வேளை

யோசித்து யோசித்து சோர்ந்து போன மூளைக்கு புத்துணர்ச்சி கொடுக்க தயாராக இருந்த ரெட்புல் டூர் பஸ். சூரிய அஸ்தமனத்திற்கு பின் இனிய இசையை வழங்குவதற்காக தயாராகி கொண்டிருந்தது.

14. பீர்புலன்ஸ்

14. பீர்புலன்ஸ்

பத்திரிக்கையாளர்களின் தாகத்தை தணிக்க ஓடோடி வந்த பீர்புலன்ஸ்... அதிகம் சொல்லத் தேவையில்லை....

15. புத்துணர்ச்சி

15. புத்துணர்ச்சி

பீர்புலன்ஸ் புண்ணியத்தில் புத்துணர்வு பெற்று மீண்டும் அரங்குகளை கவரேஜ் செய்யும் பணித் துவங்கியது.

16. பேபிஹெட் இசை நிகழ்ச்சி

16. பேபிஹெட் இசை நிகழ்ச்சி

பேபிஹெட் குழுவினரின் பேண்ட் நிகழ்ச்சியுடன் இரவு கொண்டாட்டங்கள் களைகட்டின. ஆயிரக்கணக்கான பைக் பிரியர்களும், பார்வையாளர்களும் ஆடிப்பாடி கொண்டாடி களித்தனர்.

இந்தியன் என்றால் பெருமைதானே

இந்தியன் என்றால் பெருமைதானே

அலங்காரப் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் நின்றிருந்த இந்தியன் மோட்டார்சைக்கிள்.

18. இது இல்லாமலா...

18. இது இல்லாமலா...

கடந்த ஆண்டு மனதில் பதிந்த பிகினி கேர்ள்ஸ் நினைவுக்கு வரவே அங்கு சென்றோம். நீண்ட தூரத்திலிருந்து வந்த களைப்பை போக்கும் விதத்தில் பிகினி கேர்ள்ஸின் கைகளால் மசாஜ் பெற்ற மோட்டார்சைக்கிள்கள்.

19. தன்னம்பிக்கையின் மறு உருவம் தீபிகா மாலிக்

19. தன்னம்பிக்கையின் மறு உருவம் தீபிகா மாலிக்

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ்களில் முக்கியமானவர்களில் தீபிகா மாலிக்கும் ஒருவர். சிறு வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட தீபா மாலிக் இந்தியாவின் பிரபலமான மாற்றுத் திறனாளி பெண் பைக் ரேஸர் என்றால் நம்ப முடிகிறதா. பைக் ரேஸர் என்று இல்லை, தடகள வீராங்கனை, குண்டு எறிதல், நீச்சல், ஈட்டி எறிதல் என பன்முக திறமை கொண்டவர். வீல் சேர்தான் வாழ்க்கை என்று முடங்கிவிடாமல், லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையின் மறுபக்கத்தை காட்டி நிற்கும் தீபிகா மாலிக்கின் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்.

20. அய்யகோ

20. அய்யகோ

பார்ப்போரை பயமுறுத்திய பைக் ரைடரின் ஹெல்மெட்.

21.பரவாயில்லை

21.பரவாயில்லை

இதுவும் ஹெல்மெட்டுனு சொல்றாங்கோ.

22. அப்ரிலியா ஆர்எஸ்வி4

22. அப்ரிலியா ஆர்எஸ்வி4

ஏங்க வைத்த அப்ரிலியா ஆர்விஎஸ்4 சூப்பர் பைக்.

23.வசீகரித்த பெனெல்லி

23.வசீகரித்த பெனெல்லி

பைக்கை சொன்னேன்...

24. யூவி பைக்

24. யூவி பைக்

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்காக மாறுதல் செய்யப்பட்ட கேடிஎம் டியூக் 390 பைக். ஆட்டோலோக் நிறுவனம் வடிவமைத்த மாடல் இது. இந்த பைக்கிற்கு யுவராஜ் சிங்கும் ஆலோசனை வழங்கினாராம்.

25. யூவி பைக் எப்படியிருக்கு?

25. யூவி பைக் எப்படியிருக்கு?

உங்களுக்கு பிடித்திருக்கிறதா இந்த டிசைன்.

26. டைனோ டெஸ்ட்

26. டைனோ டெஸ்ட்

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்10ஆர் மற்றும் நின்ஜா இசட்எக்ஸ்14ஆர் பைக்குகளை டைனோ டெஸ்ட் செய்த இளைஞர்கள்.

27. கஸ்டமைஸ் கலை

27. கஸ்டமைஸ் கலை

ஸ்டாக் மாடல் பைக்குகளை பார்த்து அலுத்து போன கண்களுக்கு கண்காட்சியில் இருந்த கஸ்டமைஸ் மாடல்கள் வெகுவாக விருந்து படைத்தன. லூனா கஸ்டமைஸ் மாடலை படத்தில் காணலாம்.

28.கஸ்டமைஸ் பைக் வின்னர்

28.கஸ்டமைஸ் பைக் வின்னர்

கஸ்டமைஸ் பைக்குகளுக்கான போட்டியில் ஹைதராபாத்தை சேர்ந்த ரேஸா ஹூசைன் வடிவமைத்திருந்த ஹார்லி டேவிட்சன் கஸ்டமைஸ் பைக் மாடல் முதல் பரிசை தட்டிச்சென்றது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரேஸா ஹூசைனுக்கு முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கை ரூ.32 லட்சம் கொடுத்து வாங்குவதற்கு ஒருவர் ஆஃபர் கொடுத்ததாக செய்திகள் தெரிவித்தன.

29.சமிக்ஷா பாலி

29.சமிக்ஷா பாலி

பைக்குகள், பைக் பயணங்கள் ஆண்களுக்கானதாகவே இருந்த காலம் போய் தற்போது பெண்களும் ஆர்வமுடன் நீண்ட தூர பைக் பயணங்களை செல்கின்றனர். அவ்வாறு அதிக அளவில் பயணிக்கும் இந்திய பெண் பைக் ரைடர்தான் சமிக்ஷா பாலி.

30. அடுத்த தலைமுறை

30. அடுத்த தலைமுறை

அடுத்த தலைமுறை உருவாகிறது.

கவனத்தை ஈர்த்த கஸ்டமைஸ் மாடல்கள்

கவனத்தை ஈர்த்த கஸ்டமைஸ் மாடல்கள்

இந்த நிகழ்வில் பார்வையாளர்களின் கவனத்தை கஸ்டமைஸ் பைக் மாடல்கள் வெகுவாக ஈர்த்தது. குறிப்பாக, ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் கஸ்டமைஸ் மாடல்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.

இது நம்ம ஊரு வண்டி

இது நம்ம ஊரு வண்டி

கஸ்டமைஸ் செய்தால் ஹார்லி டேவிட்சன் மட்டுமல்ல, ராயல் என்ஃபீல்டும் அழகுதான், ஆச்சரியம்தான். ட்ரான்ஸ்ஃபிகர் கஸ்டம் ஹவுஸ் வடிவமைத்திருந்த மூன்று சக்கர ராயல் என்ஃபீல்டு பைக் ஏஸ் கஃபே வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

படங்களும், தகவல்களும் தொடரும்...

வெளிநாட்டு ரசிகர்கள்

வெளிநாட்டு ரசிகர்கள்

இந்த ஆண்டு இந்திய பைக் வீக் திருவிழாவிற்கு மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து ரசிகர்கள் வந்திருந்தனர். ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த ஆன்ட்ரூ என்பவர் இந்தியன் பைக் மீது அமர்ந்து ரசித்த காட்சி.

ஏஸ் கஃபே லண்டன்

ஏஸ் கஃபே லண்டன்

லண்டன் ஏஸ் கஃபே உரிமையாளரும், பைக் ஆர்வலருமான மார்க் வில்ஸ்மோர்(வலது ஓரம்) தனது அனுபவங்களை பைக் பிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

ஹார்லி பைக் அணிவகுப்பு

ஹார்லி பைக் அணிவகுப்பு

இந்திய பைக் வீக் திருவிழாவுடன் இணைந்ததாக ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்களுக்கான தேசிய ஹார்லி பைக் அணிவகுப்பு நடந்தது. இதில், 2,000 ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் பங்கேற்றனர். கோவாவையே ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் கலக்கினர். இந்திய பைக் வீக் திருவிழா மைதானத்தில் நுழையும் ஹார்லி டேவிட்சன் பைக் அணிவகுப்பு.

 சென்னை ஹார்லி குழு

சென்னை ஹார்லி குழு

சென்னையை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் கொரமன்டல் சாப்டர் குழுவினர் வருகை தந்திருந்தனர். சென்னையிலிருந்து 30க்கும் அதிகமான ஹார்லி டேவிட்சன் உரிமையாளர்கள் பைக்குகளில் வந்திருந்தனர்.

பார்ட்டி ஹால்

பார்ட்டி ஹால்

இரவு நேர இன்பத்தை ருசிக்க கூடிய பைக் பிரியர்களால் நிரம்பி வழிந்த பார்ட்டி ஹால்...

 இசை, ஆரவாரம்

இசை, ஆரவாரம்

ஆரவாரமான இசை பின்னணியில் திளைத்து நிற்கும் பைக் பிரியர்கள் மற்றும் பார்வையாளர்கள்...

ஹார்லி கஸ்டமைஸ் பைக்

ஹார்லி கஸ்டமைஸ் பைக்

ராஜ்புத்னா கஸ்டமைஸ் நிறுவனத்தின் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் கஸ்டமைஸ் பைக்.

பைக் பிரியை

பைக் பிரியை

வாட்டசாட்டமான பைக்கை தனது கைக்குள் அடக்கி ஆட்டிவிக்கும் பெண் ரைடர்.

பெங்களூர் பைக்கர் க்ளப்

பெங்களூர் பைக்கர் க்ளப்

அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் கலந்து கொண்ட பெங்களூர் பைக் உரிமையாளர்கள் குழு.

நீங்கா நினைவுகள்

நீங்கா நினைவுகள்

நீங்கா நினைவுகளுடன் நிறைவுறும் தருணத்தை பதிவு செய்யும் பைக் பிரியர்.

ரெட்புல் விளம்பர கார்

ரெட்புல் விளம்பர கார்

இந்திய பைக் வீக் திருவிழா அரங்கில் விளம்பரத்திற்காக வைக்கப்ப்டடு இருந்த ரெட்புல் மினி கார்.

டிஜே நியூக்லியா

டிஜே நியூக்லியா

நியூக்லியாவின் இசை நிகழ்ச்சியின்போது ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்.

புதுமொழி

புதுமொழி

தினசரி ஒரு ஆப்பிள் டாக்டர்களிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பதை மாற்றி, தினசரி பைக் ரைடிங் பிரச்னைகளை தவிர்க்க உதவும் என்ற ரசிகரின் புதுமொழி.

இந்திய பைக் வீக் பற்றி...

இந்திய பைக் வீக் பற்றி...

இந்திய பைக் வீக் பற்றி எழும் சந்தேகங்களும், அதற்கான விடைகளும்...

http://indiabikeweek.in/faqs/festivals/

கார் ஆன்ரோடு விலை

கார் ஆன்ரோடு விலை

அனைத்து பிராண்டு கார்களின் ஆன்ரோடு விலைக்கு க்ளிக் செய்க.

புதிய கார்கள் பற்றிய விபரத்திற்கு க்ளிக் செய்க.

 

English summary
India Bike Week 2015 was a massive event! There were loads of bikes, people, food, beer and bikes again. The event was held on the 20th and 21st of this month in Goa—A place where parties can carry on for days, or sometimes never end. Lets take a look at the hits, misses, wow’s and the ‘I don't know’ moments of this year’s event:

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more