ஒரு மணிநேரத்தில் ஆன்லைனில் ஸ்பெஷல் புல்லட்டுகள் விற்று தீர்ந்தன!

Written By:

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளின் டெஸ்பேட்ச் ரைடர் என்ற பெயரில் லிமிடேட் எடிசன் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும், ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவித்தபடியே, இன்று காலை 10 மணிக்கு இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு ஆன்லைனில் துவங்கியது. இந்த புதிய மாடலுக்கு ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். ஒரு மணிநேரத்தில் அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் முன்பதிவு முடிந்து போனது.

 ஸ்பெஷல் புல்லட்

ஸ்பெஷல் புல்லட்

கிளாசிக் 500 அடிப்படையிலான இந்த புதிய லிமிடேட் எடிசன் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்குவாட்ரான் புளூ மற்றும் டெசர்ட் ஸ்டார்ம் ஆகிய பெயர்களில் இவை விற்பனைக்கு வந்தன.

 லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

ஒவ்வொரு மாடலிலும் 100 மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருப்பதாக ராயல் என்ஃபீல்டு வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

 பிரத்யேக அம்சங்கள்

பிரத்யேக அம்சங்கள்

ஒவ்வொரு மோட்டார்சைக்கிளும் ஒன்றுக்கொன்று சிறிய வேறுபாடுகளையும், பிரத்யேக அம்சங்களையும் கொண்டிருக்கும் என்பதன் காரணமாக வாடிக்கையாளர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்தனர். இந்த பைக்குகளுக்காக ஸ்பெஷலான ஆக்சஸெரீகள் மற்றும் உடைகளையும் ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த மோட்டார்சைக்கிளில் 27.2 பிஎச்பி பவரை அளிக்கும் 500சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது.

விலை

விலை

கிளாசிக் 500 டெஸ்பேட்ச் எடிசன் மோட்டார்சைக்கிள் ரூ.2.16 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்குத்தான் மவுஸை பிடிச்சுக்கிட்டு இருங்கன்னு கடந்த வாரமே சொன்னோம். நினைவிருக்கிறதா!

 
English summary
Royal Enfield's Despatch edition Motorcycles sold out in the first hour.
Story first published: Wednesday, July 15, 2015, 16:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark