கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது

Written By:

கவாஸாகி நிறுவனம் தயாரித்து வழங்கும் இஆர்-6என் மோட்டார்சைக்கிள், இந்தியாவில் மாபெரும் தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

தள்ளுபடியுடன் வழங்கப்படு கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

கவாஸாகி இஆர்-6என்...

கவாஸாகி இஆர்-6என்...

ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் கவாஸாகி நிறுவனம், இந்த கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை இந்திய சந்தைகளில் வழங்கி வருகிறது.

இந்த கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள், கவாஸாகி நிஞ்ஜா 650 டூரிங் மோட்டார்சைக்கிளின் நேக்கட் வடிவம் (வெர்ஷன்) ஆகும்.

தள்ளுபடிக்கான காரணம்;

தள்ளுபடிக்கான காரணம்;

கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள், இந்திய வாகன சந்தைகளில் சொல்லும்படி ஹிட்டாகவில்லை.

இதனால், இந்த இஆர்-6என் மோட்டார்சைக்கிள் மீது பெரிய அளவிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேங்கி இருக்கும், இந்த கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளின் ஸ்டாக்குகளை கிளியர் செய்யவே இந்த தள்ளுபடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தள்ளுபடியானது, குறைந்த அளவிலும், ஸ்டாக்குகள் உள்ளவரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விவரம்;

விலை விவரம்;

கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளின் அசல் விலை, 5.37 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் மும்பை) ஆகும்.

இதன் மீது, தற்போது 25,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள், 649 சிசி, பேரலல் ட்வின்-சிலிண்டர், லிக்விட் கூல்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 71.1 பிஹெச்பியையும், 63.7 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாகும்.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளின் இஞ்ஜின், 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடேன் இணைக்கபட்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

துரதிர்ஷ்டவசமாக, இந்த கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வசதி வழங்கப்படவில்லை.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிள் மீது வழங்கப்படும் இந்த தள்ளுபடி, கட்டாயம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.

இந்த விலை குறைப்பு, இந்த மோட்டார்சைக்கிளுக்கு மதிப்பு கூட்டுவது போல் அமைந்துள்ளது. கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கவாஸாகி நிறுவனம், இந்த கவாஸாகி இஆர்-6என் மோட்டார்சைக்கிளை, இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்யுமா என உறுதியாக கூறமுடியாத நிலை உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக கவாஸாகியின் புதிய படைப்பு

கவாஸாகியின் இசட்எக்ஸ்-10ஆர், இசட்எக்ஸ்-14ஆர் சூப்பர் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்

கவாஸாகி தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Japan based Automobile manufacturer Kawasaki is offering an exuberant discount on their Kawasaki ER-6n Motorcycle in Indian market. The discount on particular model is being offered to clear existing stocks. Offer will be available only till stocks last and in limited numbers. ER-6n is the naked version of Kawasaki's Ninja 650 touring motorcycle. To know more, check here..

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark