70's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்தியாவில் வாகனங்களுக்கான ரசிகர்கள் மிக அதிகம் பொதுவாக இந்தியாவில் ஒரு காலத்தில் ரிலீஸ் ஆன பைக்குகள் எல்லாம் காலத்தை கடந்து மக்கள் மனதில் நின்று வருகின்றன. அந்த வகையில் புல்லட் என்ற பைக்கை அறிமுகப்ப

By Balasubramanian

இந்தியாவில் வாகனங்களுக்கான ரசிகர்கள் மிக அதிகம் பொதுவாக இந்தியாவில் ஒரு காலத்தில் ரிலீஸ் ஆன பைக்குகள் எல்லாம் காலத்தை கடந்து மக்கள் மனதில் நின்று வருகின்றன. அந்த வகையில் புல்லட் என்ற பைக்கை அறிமுகப்படுத்திய ராயல் என்பீல்டு நிறுவனம் இன்று வரை பைக் விற்பனையில் ஒரு கிங்காக இருந்து வருகிறது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

பொதுவாக இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பைக் மீது தான் மக்கள் விருப்பம் கொள்ளுவார்கள். அதை தான் சிறந்த பைக் என்றும் மக்கள் எண்ணுவார்கள். ஆனால் அந்த நிலைமையை முற்றிலுமாக மாற்றி பெர்மாபமென்ஸ் பைக்கையும் மக்கள் விரும்புவார்கள் என நமக்கு நிருபித்த பைக் யமஹா ஆர்டி 350

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த யமஹா ஆர்டி350யை மக்கள் ராஜ்டூட் 350 என்று அழைப்பார்கள் இது தான் இந்தியாவில் முதல் பெர்பாமென்ஸ் பைக் இந்த பைக் 1983 முதல் 1989 வரை விற்பனையில் இருந்தது. இந்தியாவில் விற்பனையான முதல் பெர்பாமன்ஸ் பைக் என்பதால் அந்த கால இந்திய இளைஞர்களை சுட்டி இழுத்தது இந்த பைக்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த ஆர்டி 350 பைக் எஸ்காட்ஸ் குரூப் என்ற இந்திய நிறுவனம் யமஹா மற்றும் ராஜ்டூட் நிறுவனத்துடன் கைகோர்த்து தயாரித்தது. இந்த பைக் அறிமுகப்படுத்தப்படும் போது அதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ 18,000 ஆயிரம்

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

வரலாறு

யமஹாவின் ஆர்டி மாடல் சீரீஸ் பெர்மாமென்ஸ் பைக்குகள் 20ம் நூற்றாண்டில் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இதில் ஆர்டி என்ற சொல்லிற்கு ரேஸ் டிரைவ்டு, மற்றும் ரேஸ் டெவலெப்மெண்ட் ஆகிய அர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்பட்டன. ஆனால் இந்த ஆர்டி என்பது தற்போது உள்ள ஆர்எக்ஸ் என்பது போல பெருக்கு முன்பாக சேர்க்கப்பட்டது தான்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

ஆர்டி 350 பைக் தான் ஆர்டி சீரீஸில் முதல் பைக் என பலர் பேசி வருகின்றனர். ஆனால் 1961ல் வெளியான ஆடி48, 1963ல் வெளியான ஆர்டி 56, 1965ல் வெளியான ஆர்டி05 ஆகிய பைக்குகள் ஆர்டி 350க்கு முன்பாகவே வெளியாகிவிட்டது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

சிலர் ஆர்டியை ரோடு என்பதன் சுறுக்க சொல் எனவும் ரேஸ் பைக்கின் ரோடு வெர்ஷன் என்பதை இது குறிக்கிறது எனவும், சிலர் இந்த ஆர்டிக்கு ஆர்த்தம் ராஜ்டூட் என்றும் எதையாவதை ஒன்றை கிளம்பி விட்டு கொண்டிருந்தனர். ஆனால் எல்லாம் அவர்கள் கற்பனை

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

யமஹா நிறுவனம் இரண்டு ஸ்டோக் இன்ஜினில் பெர்பாமென்ஸ் பைக்கை முன் முதலாக உலகிற்கு அறிமுகம் செய்தனர். முதன் முதலாக யமஹா ஒய்ஆர்3 1969, ஏர் கூலண்டு, பேரலல், டுவின் இரண்டு ஸ்டோக் பைக் ரேஸிங்கிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

ஒய் ஆர்டி பின்னர் யமஹாஆர்5 என 1970ம் ஆண்டு மாற்றப்பட்டது. அந்த பைக் தான். 1973ல் ஆர்டி 350 என்று பெயர் மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. ஆர்5 பைக்கிற்கும் ஆர்டி பைக்கிற் உள்ள வித்தியாசமே போர்ட் இன்டக்ஷன் இருப்பது தான்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

1970களில் யமஹா, சுஸூகி, கவாஸகி ஆகிய நிறுவனங்கள் இரண்டு ஸ்டோக் இன்ஜின் பைக்குகளில் கவனம் செலுத்தினர், ஹோண்டா நிறுவனம் மட்டும் 4 ஸ்டோக் இன்ஜின்களில் கவனம் செலு்த்தினர். அதற்கு முக்கிய காரணம் ஹோண்டா நிறுவனம் சோய்சிரோ ஹோண்டா விற்கு இரண்டு ஸ்டோக் இன்ஜின்கள் பிடிக்காதாம் இது தான் முக்கியமான காரணம்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

சுஸூகி நிறுவனம் பெரிய அளவிலான வாட்டர் கூலண்டு இன்ஜினை தயாரித்தது ஜிடி 750 என்ற பைக்கை வெளியிட்டது. கவாஸகியை நிறுவனம் எச்2 750 மெச் 4 என்ற பைக்கை அந்த காலகட்டத்தில் வெளியிட்டது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இரண்டு ஸ்டோக் இன்ஜினில் பெர்பாமென்ஸிற்கு முற்க்கிய காரணம் பவர் பேண்ட் தான். இந்த பைக்குகள் 4000-7000 ஆர்.பிஎம்மில் சிறப்பான பெர்பாமென்ஸை வழங்குகிறது. ஒரு நல்ல ரைடர் இரண்டு ஸ்டோக் இன்ஜினை பைக் ஓட்டும் போது இந்த ஆர்.பி.எம்மில் தான் மெயின்டெயின் செய்வார்கள்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

யமஹா ஆர்.டி350 பைக் 347 சிசி இரண்டு ஸ்டோக், டுவின் சிலிண்டர் இன்ஜின் கொண்டது. இந்த பைக் எச்டி (ஹை டார்க்), மற்றும் எல்டி (லோ டார்க்) ஆகிய இரண்டு வேரியன்ட்களில் வெளியாகிறது. இந்த பைக் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மேலும் இதில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உம் பொருத்தப்பட்டுள்ளது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

முதற்கட்டமாக இந்த பைக்கின எச் டில வேரியன்ட் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் 1985ல் தான் விற்பனையை அதிகரிக்க எல்டி என்ற வேரியண்ட் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

ஜப்பானில் தயார் செய்யப்படும் யமஹா ஆர்டி 350 பைக் 40 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் இந்த பைக் இந்தியாவில் தயார் செய்யப்படும் போது அதன் பவர் குறைக்கப்பபட்டது அதற்கு முக்கிய காரணம் பெட்ரோலில் உள்ள தரம் தான். இந்தியாவில் நல்ல தரமான பெட்ரோல்கள் கிடைப்பதில்லை.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

மேலும் இந்தியர்களுக்கு மைலேஜ்

மீது அதிக கவனம் செலுத்தியதாலும் இதன் பவர் குறைக்கப்பட்டது. இந்த பைக் லிட்டருக்கு 25 கி.மீ. முதல் 10 கி.மீ வரை ஒவ்வொரு பைக்கும் ஒவ்வொரு ரைடிங் கண்டிஷனை பொருத்து மைலேஜ் கிடைக்கிறது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்தியர்களுக்கு பெர்மாமென்ஸ் குறித்த ஆர்வம் பெரிய அளவில் இல்லை. ஆர்டி பைக்கை வாங்கியபின் தான் பலர் பெர்மாமென்ஸ் குறித்து உணர துவங்கினர்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த ஆர்டி 350 பைக் 6 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை தொட்டு விடும். மேலும் இந்த பைக் 150 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடியது. இந்த பைக்கை வாங்கும் எல்லோராலும் இதன் பெர்பாமென்ஸை கண்ட்ரோல் செய்ய முடியாது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

அதன் காரணமாகவே இந்த பைக் வாங்கி பலர் ஓட்ட தெரியாமல் ஓட்டி விபத்தில் சிக்கினர். சிலர் இந்த பைக்கில் உள்ள ஆர்டி க்கு ரேப்பிட் டெத் என்று அர்த்தம் என்று கிண்டலாக பேச துவங்கி விட்டனர்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த ஆர்டி 350 பைக்கில் டிஸ்க் பிரேக் கிடையாது. ஆனால் ஜப்பானில் ரிலீஸ் செய்த மாடலில் டிஸ்க் பிரேக் இருக்கிறது. இந்தியாவில் ரிலீஸ் செய்த பைக்கில் 150 மிமீ டிரம் பிரேக் முன்பக்கம் மற்றும் பின் பக்கத்தின் உளள்ளது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக்கின் டயர்கள் அகலமாக இல்லை இதனால் அதிக பவருடன் பைக் செல்ல உதவியாக இருந்தது. இதனால் வேகமாக செல்லும் பைக்கை கையாளவும் ரைடர்களுக்கு வசதியாக இருந்தது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த ஆர்டி 350 பைக் வீலிங் செய்ய சிறந்த பைக்காக திகழ்ந்தது. முன் பக்க கிளட்சை வேகமாக ரிலீஸ் செய்தால் சுலபமாக வீலிங் செய்து விடலாம். நீங்கள் இந்த பைக்கில் வீலிங் செய்ய முயற்சிக்காதீர்கள் இது வெறும் தகவல் மட்டுமே. முறையான பயிற்சி இன்றி வீலிங் செய்தால் பலத்த காயங்கள் ஏற்படலாம்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக் ஒரு காலத்தில் போலீசாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதில் வேகமாக சென்று குற்றவாளிகளை எளிதாக பிடிக்க முடிந்தது. ராயல் என்பீல்டு, புல்லட் போன்ற ஹெவி பைக்குகளை கையாண்டவர்களால் கூட இந்த ஆர்டி350 பைக்கை கையாள முடியவில்லை. அதன் காரணமாவே பல விபத்துக்கள் நடந்தது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக் பார்க்க சாதாரண பைக் போல இருந்தாலும், ஆனால் இதன் பெர்பாமென்ஸை வைத்து பார்க்கும் போது மற்ற பைக்குகளுடன் பேட்டியே போடமுடியாத நிலையில் இருந்தது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த ஆர்டி 350 பைக்கில் பல புதிய வசதிகளை பைக் உலகிற்கு அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். இந்த பைக்கில் யமஹாவின் டார்க் இன்டக்ஷன் டெக்னாலஜி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக்கில் டுவின் கார்பரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டெக்னோ மீட்டர் பொருத்தப்பட்ட ஒரே பைக் இது தான். இது தான் ஆர்.டி350 பைக் மக்கள் மத்தியில் அதிகமாக போய் சேர்ந்ததற்கு மிக முக்கியமான காரணம்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக்கை ஒரு சிறந்த மெக்கானிக்கால் 65 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் பைக்காக மாற்ற முடியும். இவ்வாறாக மாற்றியமைக்கப்பட்ட ஆடி350 எஸ் பைகை பலர் ரேஸ் 350 எஸ் பைக் என கூறினர் இதை பல ரேஸ்களில் பார்க்க முடியும். இந்த பைக் உடன் பேட்டி போட மற்ற பைக் வைத்திருப்பபவர்கள் பயப்படுவார்கள்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இந்த பைக் தயாரிப்பு நிறுத்தப்பட்ட பின்பு பெரும்பாலான ஆர்டி பைக்குகள் எல்லாம் ரேஸ் டிராக்கிற்கு வந்தன. இன்று பல ரேஸ் ஓட்டுபவர்கள் ஆடி 350 பைக்கை வாங்க தேடி கொண்டிருக்கிறார்கள்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

யமஹா ஆடி350 பைக் எல்லா வகையிலும் சிறந்த பைக்காக இருந்தாலும் அந்த கால மார்கெட்டிற்கு ஏற்ற பைக் அது இல்லை. மேலும் இந்த பைக்கிற்கான பராமரிப்பு செலவு உதிரிபாக்ங்கள் செலவு எல்லாம் விலை அதிகம் என்பதாலும் மக்கள் இதை வாங்க தயங்கினர்.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

அதே போல இந்த பைக்கிற்கான சர்வீஸ் வழங்குவதிலும் எஸ்காட்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்படவில்லை. எல்லாவற்கும் மேலாக இந்த பைக் அதிக விபத்தில் சிக்கய காரணத்தாலேயே பலர் இதை வாங்கவில்லை.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

1990ம் ஆண்டு யமஹா ஆர்டி 350 பைக் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. யூனிக் சவுண்ட் , சிறந்த பெர்பாமென்ஸ், 2டி ஆயில் ஸ்மோக், ஆகியன இந்த பைக் ரசிகர்களை பெரிதும் மயக்கிய விஷயம் அதன் பின் ஆர்டியின் இடத்தை நிரப்ப ஆர்எக்ஸ் 100 மற்றும் ஆர்எக்ஸ் 135 ஆகிய பைக்குகள் வந்தன.

80's கிட்ஸ் ரசித்த யமஹா ஆர்டி350 பைக்கில் இவ்வளவு அம்சங்களா?

இன்றைய புகை உமிழ்வு கட்டுப்பாட்டில் இரண்டு ஸ்டோக் இன்ஜின்கள் தயாரிக்கப்படாது. தற்போது ஆர்டி 350 பைக் வைத்திருப்பவர்களுக்கான கிளப்புகள் கூட இன்றும் செயல்பட்டு வருகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ அவர்கள் சந்தித்து கொண்டு தங்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுவார்கள்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

  1. புதிய வால்வோ எக்ஸ்சி90 டி8 எஸ்யூவியின் குறைவான விலை மாடல் அறிமுகம்!!
Most Read Articles
மேலும்... #யமஹா #yamaha
English summary
The Yamaha RD350 — The Motorcycle Which Time Has Forgotten But Enthusiasts Never Will. Read in tamil
Story first published: Thursday, June 28, 2018, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X