TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
புதிய வால்வோ எக்ஸ்சி90 டி8 எஸ்யூவியின் குறைவான விலை மாடல் அறிமுகம்!!
வால்வோ எக்ஸ்சி90 டி8 எஸ்யூவியின் விலை குறைவான மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அனைத்து விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.
வால்வோ எக்ஸ்சி90 டி8 எஸ்யூவி வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் இந்தியாவின் மிக உயரிய மாடலாக இருந்து வருகிறது. இதுவரை எக்ஸ்சலன்ஸ் என்ற ஒரு வேரியண்ட்டில் மட்டும் இந்த சொகுசு
இந்த பிரம்மாண்டமான எஸ்யூவியில் 4 இருக்கைகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இரு்நதது. இந்த இருக்கைகளை வசதியாக சாய்த்துக் கொள்ளும் வசதிகள், ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனி டிவி ஸ்க்ரீன், ஃப்ரிட்ஜ் என்று மிக உயரிய வசதிகளை பெற்றிருந்தது.
இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் மனதை புரிந்து கொண்டு எக்ஸ்சி90 டி8 எஸ்யூவியின் விலை குறைவான மாடலை இப்போது வால்வோ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது வந்துள்ல மாடல் வால்வோ எக்ஸ்சி90 டி8 இன்ஸ்க்ரிப்ஷன் என்ற பெயரில் வந்துள்ளது. இந்த மாடல் 7 சீட்டர் மாடலாக வந்துள்ளது.
இந்த புதிய மாடல் ஹைப்ரிட் எரிபொருள் நுட்பத்தில் வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 320 எச்பி பவரையும், 407 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. மின் மோட்டார் 87 எச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் பவர் சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.
இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் இருக்கும் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் மூலமாக 40 கிமீ தூரம் பயணிக்க முடியும். எனவே, தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும்.
பனோரமிக் சன்ரூஃப், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 19 ஸ்பீக்கர்களுடன் கூடிய பவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம், ஏர் சஸ்பென்ஷன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.
இந்த மாடலில் 7 ஏர்பேக்குகள், மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், ரேடார் துணையுடன் இயங்கும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோ், சிட்டி பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் டீசல் மாடல்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகின்றன. ஆனால், பெட்ரோல் மற்றும் இந்த ஹைப்ரிட் மாடல்கள் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றன.
புதிய வால்வோ எக்ஸ்சி90 டி8 எக்ஸலன்ஸ் வேரியண்ட் ரூ.1.51 கோடி விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய இன்க்ரிப்ஷன் வேரியண்ட் ரூ.96.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. அதாவது, ரூ.34 லட்சம் வரை குறைவு. இது வாடிக்கையாளர்களை கவரும். மேலும், இந்த விலையில் கிடைக்கும் ஒரே ஹைப்ரிட் சொகுசு எஸ்யூவி மாடலும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.