அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

கேடிஎம் நிறுவனம் ட்யூக் 200 பைக்கில் கணிசமான அப்டேட்டை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

இந்திய இளைஞர்கள் மத்தியில் மவுசு நிறைந்த பைக்குகளில் ஒன்றாக கேடிஎம் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் இருக்கின்றன.

இந்த நிறுவனத்தின் பைக்குகள் அனைத்தும் பெரும்பாலும் இளைஞர்களைக் கவருகின்ற வகையிலான ஸ்டைலில் தயாரிக்கப்படுகின்றது. அந்தவகையில், ஸ்போர்ட் மற்றும் பிரிமியம் தரத்தில் அவை காட்சியளிக்கின்றன.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

அதுமட்டுமின்றி, சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் மற்ற ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளின் விலைக்கு போட்டியளிக்கும் வகையில் கேடிஎம் பைக்குகளின் விலை சற்று மலிவாக காணப்படுகின்றது. இதுவும், இந்த பைக்கிற்கு நல்ல வரவேற்பு நிலவ முக்கிய காரணமாக இருக்கின்றது.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

இந்நிலையில், கேடிஎம் நிறுவனம் அதன் ட்யூக் 200 மாடல் பைக்கை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை மோட்டார்பீம் ஆங்கில தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் முதல் முறை கால் தடம் பதித்தபோது ட்யூக் 200 பைக்கைதான் முதன் மாடலாக அறிமுகம் செய்தது. இதற்கு இந்திய இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிட்டியது.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

இதைத்தொடர்ந்து, பல்வேறு மாடலிலான பைக்குகளை அது அறிமுகம் செய்தது. அதில், ட்யூக் போர்ட்ஃபோலியோவில் மட்டும் 8 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த மாடலில் இருக்கும் பைக்குகள் மட்டும் கடந்த ஆண்டு 50 யூனிட்டுகளுக்கும் மேலாக விற்பனையாகின.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

ஆகையால், சந்தையில் நிலவி வரும் இந்த வரவேற்பினை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் ட்யூக் 200 மாடல் பைக்கை எதிர்கால டிசைன் தாத்பரியங்களுக்கு ஏற்பவாறு அப்டேட் செய்ய கேடிஎம் திட்டமிட்டுள்ளது.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

அதேசமயம், கேடிஎம் ட்யூக் 200 என்ன மாதிரியான அப்டேட்டுகளைப் பெறவிருக்கின்றது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அது ட்யூக் 250 மற்றும் ட்யூக் 390 பைக்கில் உள்ள சில அம்சங்களைப் பெறலாம் என தெரிகின்றது. இந்த புதிய அப்டேட்டினைப் பெறும் கேடிஎம் ட்யூக் 200 பைக் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

தொடர்ந்து, அறிமுகத்திற்கு பின்னர் கேடிஎம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 200 மாடல் பைக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளியை முழுமைப் படுத்தும் விதமாக ட்யூக் 200 பைக் நிலை நிறுத்தப்பட உள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் கேடிஎம் ட்யூக் 200 ரூ. 1.62 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த விலை அப்டேட்டிற்கு பின்னர் சற்று உயர்த்தப்படலாம் என தெரிகின்றது.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

மேலும், அப்டேட் செய்யப்பட்ட பைக் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இதன் அறிமுகத்திற்கு பின்னர், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் 250, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி மற்றும் பஜாஜ் பல்சர் என்எஸ் 200 உள்ளிட்ட பைக்குகளுடன் போட்டியிடும்.

அப்டேட்டிற்கு தயாராகுங்கள்... விரைவில் ட்யூக் 200 பைக்கில் அரங்கேற உள்ள மாற்றம்...

கேடிஎம் நிறுவனம், அண்மையில்தான் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த ட்யூக் 790 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பைக்தான் தற்போது இந்தியாவில் விற்பனையாகும் அதிக சக்தியுடைய கேடிஎம் பைக்குகளிலேயே முதன்மையான பைக்காக உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
மேலும்... #கேடிஎம் #ktm
English summary
KTM Duke 200 Will Get Update By 2020. Read In Tamil.
Story first published: Wednesday, September 25, 2019, 17:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X