2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது இந்த பைக் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 அப்டேட்டால் இந்த பைக் வெளிபுற தோற்றத்தில் மிக சிறிய அளவிலான மாற்றத்தையே கொண்டிருக்கிறது. குறிப்பாக பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் புதிய கிராபிக்ஸ் மாற்றமும், தற்போதைய மாடலை விட கூடுதலாக இரு லைட்களும் மற்றும் கூடுதல் ஸ்விட்ச்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இந்த கூடுதல் ஸ்விட்ச், ஆப்-ரோடில் செல்லும்போது ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பை ஆஃப் செய்வதற்கு பயன்படும். மேலும் இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் தற்போதைய மாடலை விட நீளமான விண்ட்-ஷீல்ட்டை இந்த பிஎஸ்6 பைக் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இவை தவிர இந்த புதிய பைக்கில் கவனிக்கத்தக்க வகையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. இதன் முந்தைய சோதனை ஓட்ட பைக்குகள் வெள்ளை-நீலம் என்ற இரு நிறங்களை கொண்டிருந்தது. இந்த பெயிண்ட் அமைப்பு மட்டுமின்றி ராக் சிவப்பு-சரளை சாம்பல் நிற தேர்விலும் இந்த பிஎஸ்6 பைக் அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளது.

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

தற்போதைய பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக இந்த பைக்கில் கொடுக்கப்படவுள்ளது. இந்த என்ஜின் தற்சமயம் பிஎஸ்4 தரத்தில் 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்துகிறது.

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இந்த வெளியிடப்படும் ஆற்றல் அளவு பிஎஸ்6 அப்டேட்டால் சிறிது வித்தியாசப்படலாம். ஆனால் இந்த அளவு கவனிக்கத்தக்க வகையில் இருக்குமா என்பது சந்தேகமே. சஸ்பென்ஷன் அமைப்பாக 41 மிமீ டெலிஸ்கோப் ஃபோர்க் முன்புறத்திலும் மோனோஷாக் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read:பாலியல் வீடியோவில் மட்டுமில்லைங்க மற்றொன்றிலும் சென்னை முதலிடம்... என்னனுதான் தெரிஞ்சிப்போமே..!

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

ஆப்-ரோட்டிற்கு ஏற்ற வகையில் 21 இன்ச் மற்றும் 90/90 செக்‌ஷனில் முன்புற டயரும், 17 இன்ச் மற்றும் 120/90 செக்‌ஷனில் பின்புற டயரும் இந்த புதிய பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. ப்ரேக்கிங் அமைப்பாக 2-பிஸ்டன் சுழலும் காலிபருடன் 300 மிமீ டிஸ்க் முன்புறத்திலும் சிங்கிள்-பிஸ்டன் சுழலக்கூடிய காலிபருடன் 240 மிமீ டிஸ்க் பின்புறத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

Most Read:இந்தியர்கள் தேவையே இல்லாமல் ஹாரன் அடிப்பது ஏன் தெரியுமா? இந்த காமெடி வேற எங்கயும் நடக்கவே நடக்காது

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

தற்சமயம் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை பிஎஸ்6 அப்டேட்டால் ரூ.5,000லிருந்து ரூ.7,000 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த பைக்குடன் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 390 அட்வென்ஜர் பைக் போட்டியிடவுள்ளது.

Most Read:வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி!

2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

கேடிஎம் 390 அட்வென்ஜர், ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கை விட என்ஜின் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை மிகவும் சிறந்த முறையில் கொண்டுள்ளது. இருப்பினும் ஹிமாலயன் பிஎஸ்6 மாடலுடன் போட்டியிடுவதற்காக 390 அட்வென்ஜரின் விலையை இந்த பைக்கின் விலைக்கு நெருக்கமாக கேடிஎம் நிறுவனம் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Team BHP

Most Read Articles

English summary
2020 Royal Enfield Himalayan spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X