Just In
- 11 min ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 25 min ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 41 min ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 3 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Sports
ஹர்திக் பாண்டியா தந்தை மாரடைப்பால் மரணம்.. எதிர்பாராத சோகம்!
- Movies
'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
- News
கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்!
ஜப்பான் நாட்டைச்சேர்ந்த சுஸுகி நிறுவனம், அதன் ஜிக்ஸெர் 250 மாடலை அப்கிரேட் செய்து இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் குறித்த சிறப்பு தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜிக்ஸெர் வரிசையில் இரண்டு புதிய மாடல் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. அந்த வகையில், ஜிக்ஸெர் 150 எஸ்எஃப் மற்றும் ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் ஆகிய இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில், ஏற்கனவே ஜிக்ஸெர் 150 எஸ்எஃப் பைக் குறித்த தகவலைப் பார்த்துவிட்டதால், தற்போது அதன் ஹை வேரியண்ட் மாடலான ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடல் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

சுஸுகி நிறுவனம், ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் மாடலை ரூ. 1.70 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. மேலும், இந்த பைக்கை பிரத்யேகமாக குவார்டர் லிட்டர் புராடெக்டாக அந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது களமிறக்கப்பட்டிருக்கும் சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மோட்டார்சைக்கிளில், அனைத்து பாகங்களும் புதுவிதான டிசைன்களைப் பெற்று ரம்மியமாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர் மற்றும் ஹயபூசா ஆகிய பைக்குகளின் ஸ்டைல் தாத்பரியங்கள் சிலவற்றை இந்த புதியு சுஸுகி ஜிக்ஸெர் 250 எஸ்எஃப் பைக் பெற்றுள்ளது.

இதனால், இந்த பைக் ஸ்போர்ட்டி லுக்கிற்கு எந்தவொரு குறைச்சலுமின்றி காட்சியைக் கொடுக்கின்றது. மேலும், இந்த பைக்கிற்கான பிரத்யேக டிசைன் வடிவமைப்பு பணியை ஐரோப்பாவின் டிரெண்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆகையால், இந்த ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் ஐரோப்பியர்களின் கை வண்ணத்திலான வடிவத்தைப் பெற்றிருக்கிறது.

ஆகையால், சுஸுகி ஜிக்ஸர் முந்தைய மாடலைக் காட்டிலும், தற்போது படு கவர்ச்சியான தோற்றத்தைப் பெற்றுள்ளது. அதற்கேற்ப, இந்த பைக்கின் ஷேப்கள் நுணுக்கமான முறையில் கட்டுமஸ்தான பாடி அமைப்பைப் பெற்றுள்ளது.

பைக்கின் முகப்பு பகுதியில் ட்யூவல் எக்சாஸ்ட் மப்ளர் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தான், பைக்கின் எல்இடி மின் விளக்கு, சைட் இன்டிகேட்டர் உள்ளிட்டவைப் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், கிளிப்-ஆன் ஹேண்டில் பார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சுஸுகி ஜிக்ஸெர் 250 பைக்கில், அந்த நிறுவனம் அண்மையில் உருவாக்கிய அதீத திறனை வெளிப்படுத்தக்கூடிய எஞ்ஜினை பொருத்தியுள்ளது. இது, 249 சிசி திறனை வெளிப்படுத்தும் தன்மைக் கொண்டது. இந்த எஞ்ஜின், ஆயில் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் அமைப்பைக் கொண்டதாகும். 9,000 ஆர்பிஎம்மில் 26.5 பிஎச்பி பவரையும், 7,500 ஆர்பிஎம்மில் 22.6 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இத்துடன், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரகத்திலான எஞ்ஜின், ஒரே சமயத்தில் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் எப்சியன்ஸியை பேலன்ஸ் செய்து இயங்கும் தன்மையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 38.5 கிமீ மைலேஜ் கொடுக்கும் என கூறப்படுகிறது. அதேசமயம், இது 12 லிட்டர் பெட்ரோலில் சுமார் 462 கிமீ தூரம் வரை செல்லக்கூடிய அளவிற்கு மைலேஜை வழங்கும்.

சொகுசான பயண அனுபவத்திற்காக, பைக்கின் முன் பக்கத்தில் ஸ்டாண்டர்டு டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் டைப் மோனோசாக் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குவார்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிளுக்கு 17-இன்ச் அளவிலான ட்யூப் லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன், பாதுகாப்பு வசதியாக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன், டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கின் கூடுதல் அழகிற்காக சிறப்பான கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வசதியாக ஃபுல்லி டிஜிட்டலைஸ்ட் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் இந்த பைக் ஸ்டைல் மற்றும் சக்தியில் ஓர் மிகப்பெரிய புரட்சியை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் ஏற்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.