சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் ஹிமாலயனில் குறிப்பிடத்தக்க அப்டேட்களை வழங்கவுள்ளது. இந்த நிலையில் அத்தகைய அப்டேட் செய்யப்பட்ட ஹிமாலயன் பைக்கின் மாதிரி ஒன்று சென்னையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இந்த ஸ்பை படத்தில் பைக்கை முழுவதுமாக பார்க்க முடியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம், ஹிமாலயனின் இந்த அப்டேட் வெர்சனில் ராயல் என்பீல்டின் புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டம் வழங்கப்படும்.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

சமீபத்தில் அறிமுகமான ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கில் வழங்கப்பட்டு இருந்த இந்த தொழிற்நுட்பமானது பயணத்திற்கான வழிகாட்டுதல்களை இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மூலமாக ஓட்டுனருக்கு வழங்கும்.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

இதற்காகவே சிறிய வட்டவடிவ டயல் உடன் அப்டேட்டான இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஸ்மார்ட்போனை இணைக்கும் வசதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி மட்டுமில்லாமல் 2021 ஹிமாலயனில் புதிய நிறத்தேர்வுகளும் வழங்கப்படலாம்.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

மற்றப்படி ஹிமாலயனின் 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகப்பட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் சமீபத்தில்தான் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யப்பட்டிருந்தது.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

சென்னையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை ஓட்டத்தில் பைக்கை ஓட்டி வந்தவர் ஷூ, ஜாக்கெட், க்ளவ்ஸ் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றை ராயல் என்பீல்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்காக வழங்கும் கூடுதல் ஆக்ஸஸரீகளாக அணிந்துள்ளார்.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,550 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கேடிஎம் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான 250 அட்வென்ச்சர் சற்று அதிகமாக 1,590 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை சாலையில் காட்சிதந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்!! யாருக்கும் தெரியாமல் இரவில் சோதனை

இதனால் அப்கிரேட் செய்யப்பட்ட ஹிமாலயன் பைக் வருவதற்கு இது சரியான நேரமே. 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் இந்த 2021ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
2021 Royal Enfield Himalayan spied in Chennai.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X