Just In
- 3 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 4 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 6 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட சூப்பரு.. 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிலும் இந்த புது வசதியா!! விலை உயருமா?
அடுத்த 2021ஆம் ஆண்டில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிலும் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. என்ன மாதிரியான வசதி இது? தொடர்ந்து பார்ப்போம்.

சமீபத்தில் ராயல் என்பீல்டு ஹிமாலயனின் சோதனை மாதிரி ஒன்று சென்னையில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பான ஸ்பை படங்களில் பைக்கில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் எதையும் பெரிய அளவில் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

ஆனால் சில ப்ரீமியம் தரத்திலான வசதிகளுடன் புதிய ஹிமாலயனில் சிறிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வசதிகளில் முக்கியமானதாக புதிய ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகின்றன.

ராயல் என்பீல்டின் சமீபத்திய மீட்டியோர் 350 பைக்கின் மூலமாக அறிமுகமான இந்த நாவிகேஷன் வசதி ஆனது பைக்கில் வழங்கப்படும் சிறிய டிஎஃப்டி திரையை ப்ளுடூத் உதவியுடன் ஸ்மார்ட்போன் உடன் இணைக்கும்.

பிறகு பயன்பாட்டாளர் ராயல் என்பீல்டு செயலி வழியாக பயணம் நிறைவடையும் பகுதியை தேர்வு செய்தால், ஒவ்வொரு திருப்பத்தின்போது வழிக்காட்டுதல் கிடைக்கும். இது தொலைத்தூர பயணங்களின் போது மிகவும் உதவியாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

மேலும் இந்த வசதியை மற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு கொண்டுவரவும் ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் ட்ரிப்பர் நாவிகேஷன் வசதி சென்னையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் மலிவான அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயனில் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த நாவிகேஷன் வசதி மட்டுமின்றி 2021ஆம் ஆண்டிற்காக ஹிமாலயனில் வேறு சில மாற்றங்களும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஸ்மார்ட்போன் யுஎஸ்பி சார்ஜ் துளை மற்றும் பெயிண்ட் தேர்வுகளில் மாற்றம் ஏற்படுத்தப்படலாம்.

ஆனால் பைக்கின் என்ஜின் அமைப்பு உள்பட மற்ற பாகங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்பில்லை. ஹிமாலயனில் அதிகப்பட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 411சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், எஸ்ஒஎச்சி என்ஜின் வழங்கப்படுகிறது.

பிஎஸ்6 தரத்தில் வழங்கப்படுகின்ற இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அட்டேட் செய்யப்பட்ட ஹிமாலயன் 2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகலாம். இதன் விலையும் தற்போதைய விலையான ரூ.1.91- ரூ.1.96 லட்சத்திற்கும் அதிகமாக நிர்ணயிக்கப்படவே வாய்ப்புள்ளது.