பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கிபோடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடியால் மக்கள் மகிழ்ச்சி...

காசை கரியாக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை தூக்கி போடக்கூடிய நேரம் இப்போது வந்திருக்கு. இதுகுறித்து ஆம்பியர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வரும் பிரபல ஆம்பியர் நிறுவனம், சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தின் அடிப்படையில் புதிய மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்க இருப்பதாக அது அறிவித்துள்ளது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

தனது புதிய மின்சார இருசக்கர வாகனங்களின் பக்கம் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்கு இந்த அறிவிப்பை ஆம்பியர் வெளியிட்டுள்ளது. இதற்காக கிரெட்ஆர் (CredR) எனும் நிறுவனத்துடன் ஆம்பியர் கைக் கோர்த்துள்ளது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

இந்த இரு நிறுவனங்களும் இணைந்தே பழைய ஸ்கூட்டர்களை எக்ஸ்சேஞ்ஜ் செய்து புதிய ஆம்பியர் மின்சார இருசக்கர வாகனத்தை வழங்க இருக்கின்றன. ஹோண்டா ஆக்டிவா முதல் டிவிஎஸ் ஜுபிடர் வரையிலான அனைத்து விதமான ஸ்கூட்டர்களை மட்டுமே இந்த நிறுவனங்கள் எக்ஸ்சேஞ்ஜில் ஏற்க இருக்கின்றன.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

மிக சமீபத்தில்தான் பிரபல ஏத்தர் மின்சார இருசக்கர வாகன நிறுவனமும் இதுமாதிரியான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையிலேயே ஆம்பியர் நிறுவனம் தொடர்ச்சியாக எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

கிரெட்ஆர் நிறுவனம், எக்ஸ்சேஞ்ஜிற்கு விண்ணப்பிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரின் தரம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்யும். இதன்பின்னரே, பழைய ஸ்கூட்டருக்கு உரிய மதிப்பு வழங்கப்பட்டு அது எக்ஸ்சேஞ்ஜிற்கு ஏற்கப்படுகின்றது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

இதைத்தொடர்ந்து, வாடிக்கையாளர் வாங்க விரும்பும் புதிய ஆம்பியர் ஸ்கூட்டரின் மதிப்பு மற்றும் எக்ஸ்சேஞ்ஜ் செய்யப்பட்ட பழைய ஸ்கூட்டரின் மதிப்பு உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு, கழிவுகள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் கணிசமான லாபத்தை வாடிக்கையாளரால் ஈட்ட முடியும்.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

ஆம்பியர் கொண்டு வந்திருக்கும் இந்த சிறப்பு எக்ஸ்சேஞ்ஜ் திட்டம் முதல்கட்டமாக புது டெல்லி, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டின் பிற நகரங்களிலும் இந்ச சிறப்பு சேவைத் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் பூஜ்ஜியம் மாசு என்ற நிலையை உருவாக்கும் விதமாக ஆம்பியர் நிறுவனம் எக்ஸ்சேஞ்ஜ் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது. இந்த நிறுவனம், க்ரீவ்ஸ் காட்டன் எனும் நிறுவனத்துடன் இணைந்தே இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

கொரோனா வைரசால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர் தற்போது விற்பனை மற்றும் உற்பத்தி பணிகளை அது தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இதன் ஒரு பங்காகவே தற்போது எக்ஸ்சேஞ்ஜ் திட்டத்தை அது தொடங்கியிருக்கின்றது. முன்னதாக கவர்ச்சிகரமான மாதத் தவணை திட்டத்தை ஆம்பியர் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. மாதத் தணை திட்டம் பற்றிய கூடுதல் தகவலை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பழைய இத்துபோன ஸ்கூட்டர்களை தூக்கி போடும் நேரம் வந்தாச்சு... ஆம்பியர் அதிரடி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

இந்தியாவில் தற்போது அதிகளவில் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வரும் நிறுவனங்களில் ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் 60 ஆயிரத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்கள் இதுவரை விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என அந்நிறுவனம் நம்புகின்றது. மேலும், இந்த நம்பிக்கையை நனவாக்கும் விதமாகவே பல்வேறு சிறப்பு சலுகைகளை அது வெளியிட்டு வருகின்றது.

Most Read Articles

English summary
Ampere Reveals Exchange Scheme For Old Scooter. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X