அசத்தலான கருப்பு & சிவப்பு நிற கலவையில் ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வருகின்ற புதிய ஹிமாலயன் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் இந்த ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தேர்வில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் இதற்கு முன்பும் சில முறை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டப்போது கண்டறியப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை இந்த பிஎஸ்6 பைக் டீலர்ஷிப்களிடம் சென்றடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கிற்கான முன்பதிவுகளை நாடு முழுவதும் டீலர்ஷிப்கள் ஏற்று வருகின்றனர்.

இந்த பைக்கிற்கான முன்பதிவு ரூ.10,000ல் இருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. முன்னதாக ஹிமாலயன் பிஎஸ்6 பைக் ராக்கி ரெட், ஏரியின் நீலம் மற்றும் க்ராவெல் க்ரே என மூன்று புதிய நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்படவுள்ளதாக நமது தளத்தில் கூறியிருந்தோம்.

இந்த பிஎஸ்6 பைக் மேற்கூறப்பட்ட மூன்று நிறத்தேர்வுகளில் கடந்த ஆண்டு மிலனில் நடைபெற்ற ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக்கை பற்றி கூறவேண்மென்றால், இந்த பைக்கில் 411சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்/ஆயில்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பிஎஸ்4-க்கு இணக்கமான என்ஜினுடன் எலக்ட்ரானிக் எரிபொருள் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது. பிஎஸ்6 அப்டேட்டாக இதன் என்ஜின் இசியூ ட்விக்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேட்டலிடிக் கன்வெர்ட்டர் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது.

மற்றப்படி இந்த பைக்கில் தற்போதைய பிஎஸ்4 பைக்கிற்கு வழங்கப்படுகின்ற 24.5 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறன் உள்ளிட்ட என்ஜின் ஆற்றல் அளவுகளில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போதைய பைக்கிற்கு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்றுள்ள இந்த சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இந்த பைக்கில் சிறிய அளவிலான ஸ்போக் சக்கரம், எம்ஆர்எஃப் ட்யூல்-பர்பஸ் டயர்கள் மற்றும் கவனிக்கத்தக்க வகையில் அப்டேட் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை வழங்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

இவற்றுடன் சிறந்த ஆப்-ரோடு பயணத்திற்காக ட்யூல்-சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பையும் எதிர்பார்க்கலாம். இதனால் ஹிமாலயனின் பிஎஸ்6 வெர்சன் பைக் ரூ.10,000-ல் இருந்து ரூ.12,000 வரையில் விலை அதிகரிப்பை பெறவுள்ளது. கேடிஎம் 390 அட்வென்ஜெர் மாடலுடன் போட்டியிடுவதற்காக மிக அதிக விலையை இந்த புதிய பிஎஸ்6 பைக் பெற்றாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பைக் தற்சமயம் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.79 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விலை உயர்த்தப்பட்ட பின்பும் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் கேடிஎம் 390 அட்வென்ஜெருடன் சந்தையில் போட்டியிடும் வாய்ப்பை மயிரிழையில் இழந்துவிடும் என்றே கூறப்படுகிறது.

ஹிமாலயன் பிஎஸ்6 பைக்குடன் கிளாசிக் 350 பிஎஸ்6 பைக்கும் அறிமுகமாகவுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மாற்றப்பட்டுள்ள கிளாசிக் 350 மாடலில் இஎஃப்ஐ, கூடுதல் கேட்டலிடிக் கன்வெர்ட்டர் மற்றும் புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ள செய்தியை ஏற்கனவே கூறியிருந்தோம்.

Image Courtesy: virnaka/Instagram

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan BS6 Red and Black – Spied in India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X