ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

சென்னையை மைய இடமாக கொண்டு செயல்பட்டுவரும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் அடுத்த அறிமுக மோட்டார்சைக்கிளான ஹிமாலயன் பிஎஸ்6-ன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

'அனைத்து சாலைக்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது; சாலையே இல்லாததற்கும் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது' என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ள இந்த டீசர் வெவ்வேறான நிலப்பரப்பில் எடுக்கப்பட்ட வீடியோக்களின் தொகுப்பாக உள்ளது. முதலில் வேகமாக ஆரம்பிக்கும் இந்த வீடியோ, பின்பு வேகம் குறைந்து GIF ஆகவும், பல வண்ணக்காட்சியாகவும் ஓடுகிறது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

இந்த டீசரில் காட்டப்பட்டுள்ள 2020 ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 மாடல் ஏற்கனவே பல முறை சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்துள்ளோம். தற்போது இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களை மீண்டும் ஒரு முறை பார்ப்போம்.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

இந்த புதிய பிஎஸ்6 பைக்கில் ஹஸார்ட் லைட் ஸ்விட்ச், ஏழு டெல்-டேல் லைட்ஸ் (தற்போதைய ஹிமாலயன் மாடலில் ஐந்து தான் உள்ளது) தொழிற்நுட்பத்தை பெற்ற ரீ-டிசைனில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் எதிர்வரும் காற்றை தடுக்க பெரிய கண்ணாடி போன்றவற்றை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

தற்போதைய மாடலில் உள்ள கருப்பு நிற ரிம்களுக்கு பதிலாக க்ரோம் நிறத்தில் ரிம்கள் இந்த பிஎஸ்6 மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சியாட் நிறுவனத்தின் டயர்களுக்கு பதிலாக எம்ஆர்எஃப் மீட்டவர் டயர் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

பிளவுப்பட்ட க்ராடல் ஃப்ரேம், முன்புறத்தில் டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ், பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் போன்ற அமைப்புகளில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. ப்ரேக்கிங் அமைப்பாக வழக்கமான 300 மிமீ டிஸ்க் முன் சக்கரத்திலும், 240 மிமீ டிஸ்க் பின் சக்கரத்திலும் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

மேலும் புதிய ஹிமாலயன் பிஎஸ்6 பைக் சிறிய அளவிலான முன் சக்கரத்துடன் அறிமுகமாகவுள்ளதாகவும், ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் மாடலின் மற்றொரு புதிய வேரியண்ட் பைக்கையும் சந்தையில் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

தற்போதைய மாடல் முன்புறத்தில் 21 இன்ச்சில் சக்கரத்தை கொண்டுள்ளது. புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு கொண்டுவரும் திட்டம் இந்நிறுவனத்திடம் இருந்தாலும், அதன் அறிமுகம் இன்னும் சில மாதங்கள் கழித்துதான் நடைபெறும். சிறந்த ஹேண்டிலிங்கிற்காக சில பாகங்களை பைக்கில் இருந்து ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் நீக்கும் என தெரிகிறது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

தற்சமயம் விற்பனையாகி வரும் ஹிமாலயன் பைக் பிஎஸ்4 தரத்தில் 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினை பெற்றுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 24.5 பிஎச்பி பவரையும் 32 என்எம் டார்க் திறனையும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

இதே 411சிசி என்ஜினுடன் தான் 2020 பிஎஸ்6 மாடலும் அறிமுகமாகவிருந்தாலும், வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதேபோல் புதிய ஹிமாலயன் பிஎஸ்6 பைக், சிவப்பு-கருப்பு, க்ராவெல் க்ரே மற்றும் ஏரியின் நீளம் போன்ற கூடுதலான நிறத்தேர்வுகளையும் பெறவுள்ளது.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

இவற்றுடன் தற்போதைய பிஎஸ்4 மாடல் கொண்டுள்ள க்ரானைட், ஸ்னோ மற்றும் ஸ்லீட் போன்ற நிறங்களுடன் இந்த பிஎஸ்6 பைக் விற்பனையாகவுள்ளது. ராயல் எண்ட்பீல்ல்டு ஹிமாலயன் பைக் எந்த மாடலுடன் நேரடியாக போட்டியிடுவதில்லை. இதே நிலையில் இருந்து ஹிமாலயன் பிஎஸ்6 பைக் விற்பனையை தொடங்க வேண்டுமென்றால், இதன் விலை சிறிது அதிகமாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.

ராயல் எண்ட்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 பைக்கின் புதிய டீசர் வெளியீடு...

புதிய வீடியோவினால் சொல்லவில்லை, உண்மையில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் சிறந்த பயணத்திற்கு ஏற்ற பைக்காகும். மேலும் நமது ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்திற்கு ஹிமாலயன் பைக்கை இந்திய வடகிழக்கு பகுதியில் ரைடிங் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அதன்மூலம் கூறுகிறோம், ஹிமாலயன் பிஎஸ்6, கொடுக்கும் பணத்திற்கு தகுதியான வாகனம் தான்.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan BS6 Coming Soon: Company Drops New Video Teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X