அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

அர்ஜென்டினா போலீஸாரின் ரோந்து பணிகளுக்காக சில மாடிஃபை மாற்றங்களுடன் ஹிமாலயன் பைக்குகளை பளிச்சிடும் நீல நிறத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்டாக உள்ள ராயல் என்பீல்டு சென்னையில் உள்ள தனது தொழிற்சாலைகளின் மூலமாக நாடு முழுவதும் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

இதன் அடுத்த கட்டமாக விரைவில் அர்ஜெண்டாவிலும் புதிய தொழிற்சாலை ஒன்றை நிறுவ உள்ளதாக இந்நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலையில் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 உள்ளிட்ட பைக்குகள் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

இந்தியாவிற்கு வெளியே ராயல் என்பீல்டின் முதல் தொழிற்சாலையாகவும் இதுவும் அமையவுள்ளது. அர்ஜெண்டினாவின் தலைநகர் புவெனஸ் அயர்ஸில் அமையவுள்ள இந்த தொழிற்சாலை ராயல் என்பீல்டின் அர்ஜெண்டினா நாட்டு கூட்டணி நிறுவனமான க்ரூபோ சிம்பாவின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

க்ரூபோ சிம்பா, ராயல் என்பீல்டுடன் 2018ல் இருந்து கூட்டணியில் உள்ளது. அர்ஜெண்டினாவில் ராயல் என்பீல்டிற்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. எந்த அளவிற்கு என்றால் இந்நிறுவனத்தின் அர்ஜெண்டினா தொழிற்சாலை அறிவிப்பு நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் கலந்து கொண்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

இதற்கு மேலும் வலுச்சேர்ப்பது போல் போலீஸாரின் ரோந்து பணிக்காக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போலீஸாரின் பயன்பாட்டிற்காக சில மாடிஃபிகேஷன் மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த பைக்குகள் பளிபளிச்சிடும் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

கூடுதலாக போலீஸ் விளக்குகளை பெற்று வந்துள்ள இந்த ஹிமாலயன் பைக்குகளின் பெட்ரோல் டேங்கில் அர்ஜெண்டினா போலீஸ் என்பதை குறிக்கும் விதமாக பிஎஃப்ஏ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் இந்தியர்களாகிய நாம் பெருமைபடக்கூடிய விஷயமாகும்.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

இந்தியாவிலும் போலீஸாரின் பயன்பாட்டிற்காக ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட பெங்களூர் போலீஸாரின் 'பெண்களுக்காக நாம்’ என்ற விழிப்புணர்வு பேரணிக்காக இவை வழங்கப்பட்டு இருந்தன. இந்த பேரணியில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்தும் விழிப்புணர்வாக பெண் போலீஸார்கள் ஹிமாலயன் பைக்குகளை ஓட்டினர்.

அர்ஜென்டினாவிற்கு செல்லும் இந்தியாவின் ராயல் என்பீல்டு... புதிய தொழிற்சாலை உதயமாகுகிறது...

அர்ஜெண்டினா மட்டுமின்றி சீனாவிலும் ராயல் என்பீல்டு நிறுவனம் ஐந்து பிரத்யேகமான டீலர்ஷிப் ஷோரூம்களை கொண்டுள்ளது. இவற்றுடன் தென் அமெரிக்க நாடுகளிலும் இந்நிறுவனத்திற்கு 31 ஷோரூம்களும், 40 சில்லரை விற்பனை மையங்களும் உள்ளன. மொத்தமாக 60 நாடுகளில் ராயல் என்பீல்டு தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan in New Blue Livery for Argentinian Police
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X