ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் கிடைத்து வரும் விலை குறைவான அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு ஹிமாலயன் திகழ்ந்து வருகிறது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாகவும் ராயல் என்பீல்டு ஹிமாலயனை குறிப்பிடலாம்.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ஹிமாலயன் பைக்கின் பிஎஸ்-6 வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அப்போது புதிய வண்ண தேர்வுகள் உடன், ஒரு சில புதிய வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்பட்டன. இந்த அப்டேட்கள் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு விற்பனையில் உதவி செய்துள்ளதை போல் தெரிகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு நவம்பர் மாதம் 1,550 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 793 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 95 சதவீத வளர்ச்சியை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பதிவு செய்துள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

இந்தியாவில் தற்போது அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள்கள் நாளுக்கு நாள் பிரபலமாகி கொண்டே வருகின்றன. ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை அதிகரித்திருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில், 411 சிசி ஏர் கூல்டு சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

இந்த இன்ஜின், 6,500 ஆர்பிஎம்மில் 24.3 பிஎஸ் பவரையும், 4000-4500 ஆர்பிஎம்மில் 32 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் இந்த மோட்டார்சைக்கிளில் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனம் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை இன்னும் மேம்படுத்தி அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடலில், ட்ரிப்பர் நேவிகேஷன் போன்ற புதிய வசதிகளும், புதிய வண்ண தேர்வுகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

புதிய ஹிமாலயன் மட்டுமல்லாது, இன்டர்செப்டார் 350 மற்றும் புதிய தலைமுறை கிளாசிக் 350 உள்ளிட்ட பைக்குகளையும் ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி க்ரூஸர் பைக் ஒன்றும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விற்பனை கிடுகிடுவென உயர்வு... காரணம் என்னனு தெரியுமா?

அட்வென்ஜர் டூரர் மோட்டார்சைக்கிள்களை பொறுத்தவரை கேடிஎம் நிறுவனத்தின் 790 அட்வென்ஜர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. 390 அட்வென்ஜர் மற்றும் 250 அட்வென்ஜர் பைக்குகளின் வரிசையில், 790 அட்வென்ஜர் பைக்கையும் கேடிஎம் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan Sales Increased By 95 Per cent In November 2020 - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X