யுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்

யுனிடெட் கிங்டமில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டின் இந்த அட்வென்ச்சர் எடிசனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

யுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்

இந்தியாவில் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் இங்கிலாந்து, நெதர்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து நாடுகளை அடக்கிய யுனிடெட் கிங்டமில் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்கு மோடோ ஜிபி என்ற அங்கிருக்கும் விநியோஸ்தர் உடன் கூட்டணியில் உள்ளது.

யுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்

இந்த கூட்டணியில் இருந்துதான் தற்போது ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொது சாலை மற்றும் ஆஃப்-ரோடு என இரு விதமான பயணங்களுக்கும் ஏற்ற விதத்தில் வழங்கப்படும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் மாடல் அட்வென்ச்சர் பயணத்திற்காக சில ஆக்ஸஸரீகளை கூடுதலாக பெற்றுள்ளது.

இந்த அட்வென்ச்சர் எடிசனில் கருப்பு நிற பாதுகாப்பான் உடன் அதே 411சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 6500 ஆர்பிஎம்-ல் 24.5 பிஎச்பி மற்றும் 4000- 4500 ஆர்பிஎம்-ல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

யுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்

என்ஜின் பாதுகாப்பான் மட்டுமின்றி க்னக்கிள் பாதுகாப்பான்களும் ஹிமாலயன் அட்வென்ச்சரில் வழங்கப்பட்டுள்ளன. ஹிமாலயன் அட்வென்ச்சரில் மிக பெரிய கூடுதல் ஆக்ஸஸரீ என்று பார்த்தால், இரு பக்கங்களிலும் வழங்கப்பட்டுள்ள அலுமினியத்திலான பெட்டகத்தை சொல்லலாம்.

இவை தவிர்த்து பைக்கில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஹிமாலயன் அட்வென்ச்சரின் ஆரம்ப விலை அங்கு 4,799 க்ரேட் பிரட்டன் பவுண்ட்டாக (ரூ.4.73 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஹிமாலயனின் விலையை காட்டிலும் 400 ஜி.டி.பி (ரூ.39,446) அதிகமாகும்.

யுகே-வில் விற்பனைக்குவந்த ராயல் என்பீல்டு ஹிமாலயனின் அட்வென்ச்சர் எடிசன்!! நாம கொடுத்து வெச்சது அவ்ளோதான்

யுகே சந்தையில் இந்த ஸ்பெஷல் எடிசனை லிமிடேட் எடிசனாக மிக குறைவான எண்ணிக்கையில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்யவுள்ளது. இந்தியாவை தாயகமாக கொண்ட ராயல் என்பீல்டு யுகே மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது.

இந்த வகையில் இந்திய சந்தையில் அறிமுகமான மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிள் நமது அண்டை நாடான தாய்லாந்திற்கு சென்றுள்ளது. அதனை தொடர்ந்து வேறு சில நாடுகளிலும் இந்த மலிவான விலை கொண்ட மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Royal Enfield Himalayan Adventure Edition announced in the UK
Story first published: Saturday, November 28, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X