நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ் மோட்டார்!

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க நார்ட்டன் பைக் நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் கையகப்படுத்தி உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தி இருப்பது  உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

இங்கிலாந்தை சேர்ந்த நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று நார்ட்டன். கடந்த 1898ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் லேண்ட்ஸ்டவுன் என்பவரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் தனது தனித்துவமான பைக் மாடல்கள் மூலமாக மேலை நாடுகளில் பிரபலமாக விளங்குகிறது.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

இந்தியாவிலும் கைனெட்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தை துவங்குவதற்கான பணிகளில் நார்ட்டன் ஈடுபட்டு இருந்தது. இந்த நிலையில், திடீர் டிவிஸ்ட்டாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நார்ட்டன் நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளது.

MOST READ: ஊரடங்கு உத்தரவை சீர்குலைத்த நீதிபதியின் மனைவி.. என்ன செய்தார் என தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

நார்ட்டன் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களை 16 மில்லியன் பவுண்ட்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.153 கோடி) விலை கொடுத்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்தியது குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு குறிப்பிடுகையில்,"நார்ட்டன் நிறுவனத்தின் அனைத்து பணியாளர்களையும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுத்த உள்ளோம்.

MOST READ: பாலத்தின் படிக்கட்டுகளில் காரை ஏற்றி, இறக்கிய சாகசம் செய்த டிரைவர்

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 21 நாடுகளில் ஏற்கனவே நார்ட்டன் பைக்குகள் விற்பனையில் உள்ளன. அந்த நாடுகளில் வர்த்தகத்தை வலுவாக்குவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவோம். மேலும், அதிக அளவில் ஆர்டர்களும் இந்த நாடுகளில் இருந்து உள்ளன. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விரைவில் டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கப்படும்.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

நார்ட்டன் நிறுவனத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். நார்ட்டன் நிறுவனத்தில் நிர்வாக பிரச்னைகள் இருந்தன. அவற்றையெல்லாம் சரிசெய்து, அடுத்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனத்தை சிறப்பான பாதைக்கு கொண்டு வருவோம்.

MOST READ: தரமான ஸ்டைலுக்கு மாறிய ராயல் என்பீல்டு கிளாசிக்

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

நார்ட்டன் நிறுவனத்திடம் 800சிசி மற்றும் அதற்கு மேலான ரக பைக் மாடல்கள் உள்ளன. வெவ்வேறு வாடிக்கையாளர் வட்டத்தை மனதில் வைத்து இந்த பைக்குகளை நிலைநிறுத்தி உள்ளோம். அதேநேரத்தில், பிஎம்டபிள்யூ நிறுவனத்துடனான கூட்டணி தொடர்ந்து வலுவாக இருக்கும். நார்ட்டன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வட்டத்திற்கும், பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்கள் வட்டமும் வெவ்வேறாக இருக்கின்றன," என்று கூறி இருக்கிறார்.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

புராஜெக்ட் 303 பிட்கோ லிமிடேட் என்ற சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட புதிய துணை நிறுவனத்தை டிவிஎஸ் மோட்டார் ஸ்தாபித்தது. இந்த நிறுவனத்தின் கீழ்தான் நார்ட்டன் நிறுவனம் முழுமையாக ரொக்கம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

MOST READ:2.0 ஊரடங்கு உத்தரவு: எட்டி பார்த்தாலே தடியடி நடத்தும் போலீஸ்.. வெளியே செல்ல என்ன வழி?

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

நார்ட்டன் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான நிதி ஆலோசனைகளை ரோத்ஸ்சைல்டு அண்ட் கோ நிறுவனமும், சட்ட ரீதியிலான வழிகாட்டுதல்களை கைட்டன் அண்ட் கோ மறஅறும் ஸ்லாட்டர் அண்ட் மே ஆகிய நிறுவனங்கள் வழங்கி இருக்கின்றன.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

இதனிடையே, நார்ட்டன் நிறுவனத்தின் கமாண்டோ, டாமினேட்டர், வி4 ஆர்ஆர் ஆகிய பிரிமீயம் பைக் மாடல்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்த பைக் மாடல்களுடன் சர்வதேச அளவில் தனது வர்த்தகத்தை ஸ்திரமாக கொண்டு செல்ல டிவிஎஸ் மோட்டார் திட்டம் போட்டுள்ளது.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

மேலும், நார்ட்டன் பைக்குகள் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்காக 500சிசி ரகத்திலான பைக் மாடல்களையும் அந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நார்ட்டன் பைக் நிறுவனத்தை கையகப்படுத்தியது டிவிஎஸ்!

ஏற்கனவே, பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் கூட்டணியில் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய பைக் மாடல்களையும், அதே பிளாட்ஃபார்மில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக் மாடல்களையும் ஓசூரில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles

மேலும்... #டிவிஎஸ் #tvs motor
English summary
Chennai based two-wheeler manufacturer, TVS Motor Company has acquired iconic British motorcycle brand Norton in an all-cash deal of GBP 16 million (around ₹ 153 crores in current exchange rates).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X