ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

ஹீரோ நிறுவனம் அதன் விற்பனைக்கு பிந்தைய சேவையை அதகளப்படுத்தும் வகையில் வாட்ஸ்-ஆப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

நாட்டின் இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் அனைத்து விதமான மக்களையும் கவரும் வகையில் இருசக்கர வாகனங்களை விற்பனைச் செய்து வருகின்றது. அதாவது, தினசரி பயன்பாட்டை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப குறைந்த விலை இருசக்கர வாகனம் தொடங்கி மிக அதிக விலைக் கொண்ட பிரீமியம் தர இருசக்கர வாகனங்கள் வரை நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது விற்பனைக்கு பிந்தையை சேவையை விரிவாக்கம் செய்யும் வகையில் வாட்ஸ்-ஆப் சேவையை நிறுவனம் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, வாட்ஸ்-ஆப் மெசேஜ் வாயிலாகவே குறுப்பிட்ட சேவைகளை பெறும் வசதி வாய்ப்பினை நிறுவனம் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

என்னென்ன சேவைகள் வாட்ஸ்-ஆப் வாயிலாக பெற முடியும்?

 • வாகனத்தை சர்வீஸ் செய்வதற்கான நேரம்/காலத்தை புக் செய்தவது மற்றும் ரத்து செய்தவது
 • சர்வீஸ் விட்ட வாகனத்தின் ஸ்டேட்டஸ் அறிந்து கொள்ளலாம்.
 • நமக்கு மிக அருகாமையில் இருக்கும் சர்வீஸ் மற்றும் ஷோரூம்களை அறிந்து கொள்ள முடியும்.
 • ஜாப் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.
 • ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...
  • வாகனம் சார்ந்த கேள்விகள் மற்றும் புக் செய்யும் வசதி.
  • சர்வீஸ் மற்றும் மெயின்டனென்ஸை அட்டவணைப்படுத்தும் வசதி.
  • சர்வீஸ் மற்றும் பிற பில்களை டிஜிட்டல் ரசீதாக பெறும் வசதி.
  • மற்றும் வாகனங்களை பராமரிக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு குறித்த டிப்ஸ், புதிய மாடல்கள் குறித்த தகவல்கள் என எக்கசக்க சேவைகளை வாட்ஸ்-ஆப் சேவையின் வாயிலாக வழங்க ஹீரோ திட்டமிட்டுள்ளது.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   இந்த சேவையைப் பெற வேண்டுமானால் செல்போனில் உள்ள வாட்ஸ்-ஆப் செயலியின் வாயிலாக +91 83677 96950 என்ற எண்ணிற்கு அழைப்பு கொடுக்க வேண்டும். இதன் பின்னரே இச்சேவையை நம்மால் பெறுவதற்கான வழிமுறைகளைப் பெற முடியும். இத்துடன், தனது விற்பனையகங்களிலும் இதற்கான க்யூ-ஆர் கோட் வசதியை கொடுத்துள்ளது ஹீரோ.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   vஇதனை ஸ்கேன் செய்யும்பட்சத்தில் நேரடியாக ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவைக்கு அது நம்மை அழைத்துச் செல்லும். இதன் பின்னர் மேலே பார்த்த அனைத்து சேவைகளையும் நம்மால் எளிதில் நுகர முடியும். ஹீரோ நிறுவனம் இந்த வாட்ஸ் சேவையின் வாயிலாக அதன் புதிய தொலைக்காட்சி விளம்பரங்களையும் பரிமாற இருக்கின்றது.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   தொடர்ந்து, 24X7 இந்த வாட்ஸ்-ஆப் சேவையை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆகையால், எந்த நேரமாக இருந்தாலும், வாகனம் குறித்த எந்த மாதிரியான சந்தேகங்களையும் நம்மால் கேட்டு பெற்றுக் கொள்ள முடியும்.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   ஹீரோ நிறுவனம் நேற்றைய தினம் (ஏப்ரல் 15) மிக மிக மலிவு விலைக் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எச்எஃப் 100 எனும் மாடலையே நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இப்பைக்கிற்கு மிக குறைந்தபட்ச விலையாக ரூ. 49,400 என்ற விலையை நிறுவனம் நிர்ணயித்திருக்கின்றது.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   இந்த மிகக் குறைந்த விலையில் இப்பைக் இந்தியாவில் களமிறங்கியிருக்கின்ற காரணத்தினால் நாட்டின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக இது அமர்ந்துள்ளது. தினசரி மற்றும் கிராமப்புற மக்களைக் கவரும் நோக்கில் இந்த இருசக்கர வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

   ஹீரோவின் வாட்ஸ்-ஆப் சேவை... என்னென்ன சேவைகளை பெற முடியும்... முக்கிய தகவல்கள்...

   இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஹீரோ நிறுவனம் அதன் அனைத்து இருசக்கர வாகன தயாரிப்புகளின் விலையையும் கணிசமாக உயர்த்தியது. இந்த விலையுயர்வு தனது விற்பனையை பாதித்து விடக்கூடாது என்ற நோக்கில் இப்புதிய விலைக்குறைந்த பைக்கை நிறுவனம் நாட்டில் களமிறக்கியிருக்கின்றது. இப்பைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

English summary
Hero Motocorp Launches WhatsApp Service For After Sales Service. Read In Tamil.
Story first published: Friday, April 16, 2021, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X