புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

சமீபத்தில் புதிய பச்சை நிறத்தை தொடர்ந்து புதிய தலைமுறை ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் சில்வர் நிறத்தேர்வு குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த அப்டேட் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு பைக் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வந்தடைய துவங்கியுள்ளது.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இதனால் இதன் டெலிவிரி பணிகள் இன்னும் சில நாட்களில் துவங்கபட்டுவிடும் என எதிர்பார்க்கப்ப்டுகிறது. இதற்கிடையில் புதிய ஹிமாலயனின் ஸ்பை படங்கள் புதியதாக வழங்கப்படவுள்ள நிறங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களில் இருந்து வெளியாகி வருகின்றன.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இந்த வகையில் புதிய பைன் பச்சை நிற ஹிமாலயன் பைக்கின் படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்ததை தொடர்ந்து தற்போது கவர்ச்சிகர மிராஜ் சில்வர் நிறத்தில் இந்த பைக் காட்சி தந்துள்ளது. இதுகுறித்த படங்கள் @Bijit_Bk என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இந்த இரு நிறங்கள் மட்டுமின்றி கிரானைட் சில்வர் என்ற புதிய நிறத்திலும் வழங்கப்படவுள்ள 2021 ஹிமாலயன் பைக் தற்போதைய ஏரியின் நீலம், சரளைக்கல்லின் க்ரே மற்றும் ராக் ரெட் என்ற சில நிறங்களையும் தொடரும். புதிய நிறங்களுக்கு ஏற்ப பைக்கின் இருக்கையின் நிறமும் பளிச்சிடும் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இவற்றுடன் ராயல் என்பீல்டின் சமீபத்திய மீட்டியோர் 350 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ட்ரிப்பர் நாவிகேஷன் சிஸ்டத்தையும் பெற்றுவரவுள்ள புதிய ஹிமாலயனின் ஹெட்லைட் அமைப்பையும் எல்இடி டிஆர்எல் வளைவுகளுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் மாற்றியமைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

பைக்கின் தோற்றத்தை மெருக்கேற்றுவதற்காக பைக்கில் வழங்கப்படும் விண்ட்ஷீல்டின் உயரத்தையும் தயாரிப்பு நிறுவனம் அதிகரித்துள்ளது. இவை தவிர்த்து ஹிமாலயன் பைக்கின் மற்ற பாகங்கள் அனைத்தும் அதன் 2021 வெர்சனிலும் அப்படியே தொடரப்படவுள்ளன.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இதில் தற்போதைய 411சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின், சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேக்கிங் அமைப்புகளும் அடங்குகின்றன. ஹிமாலயனின் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,500 ஆர்பிஎம்-ல் 24.3 பிஎச்பி மற்றும் 4,000- 4,500 ஆர்பிஎம்-ல் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

புதிய சில்வர் நிறத்தில் 2021 ராயல்என்பீல்டு ஹிமாலயன் பைக் இப்படிதான் இருக்குமா?! பார்க்கும்போதே வாங்க தோணுதே..

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. 2021 ராயல் என்பீல்டு பைக்கின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை சற்று அதிகரிக்கப்பட்டு ரூ.2.51 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles

English summary
New Royal Enfield Himalayan Silver Fully Revealed Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X