Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) அதன் மின்சார ஸ்கூட்டரை புக் செய்திருக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கக் கூடிய ஓர் தகவலை வெளியிட்டிருக்கின்றது. அது என்ன என்பதை இப்பதிவில் காணலாம், வாங்க.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

கால் டாக்சி சேவை நிறுவனமாக அறிமுகமாகி தற்போது மின் வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்திருக்கின்றது, ஓலா. ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய இரு விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறுவனம் நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டிற்கும் நாட்டில் அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

மிக தெளிவாக கூற வேண்டுமானால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன் பதிவுகள் தொடங்கிய ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) ஒரு லட்சம் ஓலா இ-ஸ்கூட்டர்களுக்கான புக்கிங்குகள் கிடைத்தன. கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி நிறுவனம் ரூ. 1,200 கோடி மதிப்பிலான புக்கிங்குகளைப் பெற்றதாக தெரிவித்தது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

இவ்வாறு மிக அபரீதமான வரவேற்பை ஓலா இ-வாகனங்கள் இந்தியாவில் பெற்று வருகின்றது. தற்போது, இதன் வாடிக்கையாளர்கள் மற்றும் மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் நிறுவனம் எப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்கும் என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருக்கின்றது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

இந்த கேள்விக்கும் எதிர்பார்ப்பிற்கும் முற்று புள்ளி வைக்கக் கூடிய தகவலே தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் அதன் மின்சார ஸ்கூட்டர்களை இந்த மாதமே டெலிவரி செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் டெலிவரி கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

வரிசை எண் அடிப்படையில் முதலில் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதமும், தொடர்ந்து, டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி என பகுதி பகுதியாக இ-ஸ்கூட்டர்கள் டெலிவரி கொடுக்கப்பட இருக்கின்றன. இதுகுறித்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி வருண் துபே கூறியதாவது, "செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் மீண்டும் புக்கிங் பணிகள் தொடங்கின.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

அந்த நேரத்திலேயே டெலிவரி பணிகள் எப்போது தொடங்கப்பட இருக்கின்றது என்பதை நாங்கள் தெரிவித்தோம். சிலருக்கு நவம்பரில், சிலருக்கு டிசம்பரில், சிலருக்கு ஜனவரியில், மற்றவர்களுக்கு பிப்ரவரியில் ஸ்கூட்டர் டெலிவரி கொடுக்கப்படும்" என்றார்.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 99,999 என்ற விலையும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1,29,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை நிறுவனம் ஒவ்வொரு நகரமாக தொடங்கி வருகின்றது. அண்மையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இப்பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

ஓலா நிறுவனம் பிற நிறுவனங்களைப் போன்று விற்பனையகங்களை உருவாக்கி அவற்றின் வாயிலாக இ-ஸ்கூட்டர்களை விற்பனைச் செய்யப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டன. இருசக்கர வாகனத்தை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஆன்-லைன் வாயிலாக புக் செய்து, அவற்றை நேரடியாாக வீட்டிற்கே டெலிவரி பெறும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கின்றது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

இதேபோல் இருசக்கர வாகனத்திற்கான சர்வீஸ் மற்றும் கோளாறுகளை சரி செய்யும் பணிகளும் ஆன்லைன் வாயிலாகவே புக் செய்யப்பட்டு, வீடு தேடி வந்து சரி செய்யப்பட இருக்கின்றது. ஓலா எஸ்1 அதிக மணிக்கு 90 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 121 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில், நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படும். இதனைக் காட்டிலும் பல மடங்கு அதிக திறன் வெளிப்படுத்தும் தேர்வாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

இது மணிக்கு 115 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. வெறும் 3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை இது எட்டிவிடும். இதன் உச்சபட்ச ரேஞ்ஜ் 181 கிமீ ஆகும். ஒட்டுமொத்தமாக பத்து நிற தேர்வுகளில் இத்தேர்வு விற்பனைக்குக் கிடைக்கும். இதில், நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைபர் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளது. இரு தேர்விலும் 8.5 கிலோவாட் திறன் மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Ola இ-ஸ்கூட்டர் புக் பண்ணியிருக்கீங்களா? இதோ உங்களுக்கான மகிழ்ச்சியளிக்கும் செய்தி!

ETAuto

ஓலா நிறுவனத்தின் இந்த இ-ஸ்கூட்டர்கள் சற்றே அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், இதைவிட பல மடங்கு விலைக் குறைவான எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அது, தற்போது விற்பனையில் இருக்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரைக் காட்டிலும் விலைக் குறைவானதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சமீபத்தில் வெளியாகிய தகவலை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

ஓலா இ-ஸ்கூட்டரை அண்மையில் ரிவியூ செய்து பார்த்தோம். அதுகுறித்த வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles
English summary
Ola revealed electric scooter delivery timeline
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X