இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்த்து வந்த 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் அறிமுகம் நாளை அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களில் ஹிமாலயன் பைக்கும் ஒன்று. இதன் 2021 மாடலையே நிறுவனம் விரைவில் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றது.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இந்த நிலையில் இப்பைக் நாளை அறிமுகமாக இருப்பதாக உறுதி வாய்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 11 பிப்ரவரி அன்று இப்பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. புதுப்பிக்கப்பட்ட மாடலாக வெளிவரும் இப்பைக்கில் பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற இருக்கின்றன.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

அந்தவகையில், புதிய நிற தேர்வு, ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் என சில ஸ்பெஷல் அம்சங்கள் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் இடம்பெற உள்ளன. இந்த நேவிகேஷன் அம்சமானது கூகுள் மேப் வசதியைக் கொண்டதாகும். நேரடியாக இருக்கும் இடத்தைக் காண்பிக்க மற்றும் ட்ராக் செய்ய இந்த கருவி உதவும்.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இதே சிறப்பு வசதியைக் கொண்ட நேவிகேஷன் அமைப்பைதான் சமீபத்திய அறிமுகமான மீட்டியோர் 350 பைக்கும் பெற்றிருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கும் 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கே நாளை நாட்டில் அறிமுகமாக இருக்கின்றது.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து ஏற்கனவே விற்பனையாளர்களின் யார்டுகளுக்கு பைக்குகள் வர தொடங்கியுள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்தநிலையிலேயே பைக்கின் அறிமுகம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இதனால், இந்திய இளைஞர்கள் சிலர் நாளைய நாளை எதிர்நோக்கி காக்கத் தொடங்கியிருக்கின்றனர். இப்பைக்கில் பிஎஸ்6 தரத்திலான 411சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 24.3 பிஎச்பி மற்றும் 32 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

அதேசமயம், இந்த புதுப்பிக்கப்பட்ட பைக்கில் பழைய மாடல் ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் இருந்த ஒரு சில அம்சங்கள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், சஸ்பென்ஷன்கள், ஸ்போக் வீல்கள் உள்ளிட்ட சில கூறுகள் பழைய ஹிமாலயன் பைக்கில் இருப்பதைப் போன்றே காட்சியளிக்கின்றன.

இந்திய இளைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2021 ராயல் என்பீல்டு ஹிமாலயன்... நாளை அறிமுகமாகிறது!!

இருப்பினும், இப்பைக்கில் கணிசமான புது அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்ற காரணத்தால் லேசான விலையுயர்வைப் பெற இருக்கின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் 1,91,591 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைவிட சற்று கூடுதல் விலையிலேயே 2021 ஹிமாலயன் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் விலை மற்றும் பிற பைக் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Royal Enfield Confirmed 2021 Himalayan Date Via Social Media; Here Is Date & Full Details. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X