Just In
- 18 min ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 2 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 4 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 4 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ராயல் என்பீல்டு 650சிசி பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! இனி அவற்றின் விலை இவைதான்
ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 பைக்குகளின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் ரெட்ரோ-ஸ்டைல் மோட்டார்சைக்கிள் பிராண்டாக விளங்குகிறது. இந்திய சந்தையில் கிளாசிக் 350, ஹிமாலயன் போன்றவை இந்த நிறுவனத்தின் பிரபலமான மாடல்களாக விளங்குகின்றன.

ஆனால் வெளிநாட்டுகளில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 என்ற 650சிசி இரட்டை பைக்குகளின் மூலமாகவே ராயல் என்பீல்டு பிராண்ட் பிரபலமாகி வருகிறது.

இந்தியாவில் இந்த இரு 650சிசி பைக்குகளின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.2,66,755-ல் இருந்து ரூ.3,03,544 வரையில் இருந்தன. ஆனால் தற்போது இவற்றின் விலைகளில் ரூ.3,009-ல் இருந்து ரூ.3,379 வரையில் விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளன.
Model / Variant Colours | New Price | Old Price | Difference |
Interceptor 650 Mark Three/ Orange Crush/ Silver Spectre | Rs2,69,764 | Rs2,66,755 | Rs3,009 |
Interceptor 650 Ravishing Red/ Baker Express/ | Rs2,77,732 | Rs2,74,643 | Rs3,089 |
Interceptor 650 Glitter and Dust | Rs2,91,007 | Rs2,87,787 | Rs3,220 |
Continental GT 650 Ventura Blue/ Black Magic | Rs2,85,680 | Rs2,82,513 | Rs3,167 |
Continental GT 650 Ice Queen / Dr. Mayhem | Rs2,93,648 | Rs2,90,401 | Rs3,247 |
Continental GT 650 Mr. Clean | Rs3,06,923 | Rs3,03,544 | Rs3,379 |

இண்டர்செப்டர் 650 மார்க் த்ரீ, ஆரஞ்ச் க்ரஷ், சில்வர் ஸ்பெக்டர், ராவிஷிங் ரெட், பேக்கர் எக்ஸ்ப்ரஸ், க்ளிட்டர் மற்றும் டஸ்ட் என்ற நிறங்களிலும், இண்டர்செப்டர் ஜிடி 650 வெண்டுரா நீலம், ப்ளாக் மேஜிக், ஐஸ் குயின், டாக்டர்.மேஹீன், மிஸ்டர்.க்ளீன் என்ற நிறங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

இவை அனைத்திலும் பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், ராயல் என்பீல்டு 650 ட்வின் பைக்குகளின் விலைகள் கேடிஎம் 390 பைக்கின் விலை உடன் ஒப்பிடும்போது இப்போதும் குறைவே ஆகும்.

இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 என்ற இரு பைக்கிலும் ஒரே 649சிசி, ஏர்/கூல்டு-கூல்டு இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர்-க்ளட்ச் உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.