மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வரும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

புதுப்பொலிவுடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் சாகசப் பயண ரக மோட்டார்சைக்கிள் மாடல்களில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரியான விலையில் கனகச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடலாக பெயர் பெற்றுவிட்டது. விற்பனையிலும் இந்த மோட்டார்சைக்கிள் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

ஆரம்பத்தில் இந்த மோட்டார்சைக்கிளில் உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலும் குறைபாடுகள் இருந்ததை வாடிக்கையாளர்கள் சுட்டி காட்டி வந்தனர். அந்த குறைகளை அவ்வப்போது ராயல் என்ஃபீல்டு நிவர்த்தி செய்து வருகிறது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

இதற்கு கை மேல் பலனாக ஹிமாலயன் பைக்குறைகள் வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்கள் பொறுத்தும், சந்தைப் போட்டியை மனதில் வைத்தும் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், சில மாற்றங்களுடன் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் 2021 மாடலாக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருப்பது குறித்து தொடர்ந்து ஸ்பை படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இந்த மோட்டார்சைக்கிளில் இடம்பெறும் சில முக்கிய அம்சங்கள் குறித்த விபரங்களும் ஆட்டோகார் இந்தியா தளம் வாயிலாக கசிந்துள்ளன.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

அதன்படி, புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டா்சைக்கிளில் பைன் க்ரீன் என்ற பச்சை வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதேபோன்று, தற்போது விற்பனையில் உள்ள வெள்ளை வண்ணத் தேர்வு நீக்கப்பட உள்ளது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

மேலும், மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட வண்ணத் தேர்வுகளிலும், இரட்டை வண்ணங்களிலும் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் வர இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிளில் முக்கிய மாற்றமாக டிரிப்பர் டர்ன் - பை - டர்ன் நேவிகேஷன் வசதியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மீட்டியோர் 350 மோட்டார்சைக்கிளில் அண்மையில் வழங்கப்பட்ட இந்த வசதி புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிளிலும் வர இருக்கிறது.

புதுப்பொலிவுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்... மாற்றங்கள் என்னென்ன?

தற்போது ரூ.1.91 லட்சம் முதல் ரூ.1.96 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய மாற்றங்கள், கூடுதல் வசதிகளுடன் வரும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் சற்றே கூடுதல் விலையில் வரும் என்று நம்பலாம். இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Royal Enfield is all set to launch Himalayan facelift model in India very soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X