Just In
- 18 min ago
இது நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல! ஸ்கூட்டர்களின் விலையை பெருமளவில் உயர்த்திய யமஹா... மனச திடப்படுத்திக்கோங்க
- 41 min ago
எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் காருக்கான முன்பதிவுகள் துவக்கம்!! இந்தியாவின் முதல் செயல்திறன்மிக்க பிஎம்டபிள்யூ கார்..!
- 1 hr ago
பிஎஸ்-6 எஞ்சினுடன் விரைவில் வருகிறது ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி... முக்கிய விபரங்கள் வெளியானது
- 2 hrs ago
18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்... கூட்ட நெரிசலை தவிர்க்க மத்திய அரசு அதிரடி!
Don't Miss!
- Sports
900 விக்கெட்டுகளை பூர்த்தி செஞ்சிருக்காரு ஆண்டர்சன்... மெக்கிராத்,அக்ரம் வரிசையில் 3வது வீரராக சாதனை
- Movies
சட்டையைக் கழற்றி .. சும்மா தெறிக்க விட்ட ஷிவானி.. செம கெட்டப்!
- News
பாஜக பிரமுகர் "கோட்டைக்குள்" களமிறங்கும் மமதா பானர்ஜி.. நந்திகிராமில் போட்டி.. அதிரடி அறிவிப்பு
- Lifestyle
சிவனின் முழு அருளும் கிடைக்கணுமா? அப்ப உங்க ராசிக்கு ஏற்ற சிவ மந்திரத்தை சொல்லுங்க...
- Finance
மார்ச் 31க்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்..!
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட்டகாசமான தோற்றம், புதிய அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகமானது 2021 ராயல் என்பீஃல்டு ஹிமாலயன்... முழு விபரம்!
2021 ராயல் என்பீஃல்டு ஹிமாலயன் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இப்பைக் பற்றிய கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்பைப் பெரிதும் தூண்டி வந்த 2021 ராயல் என்பீஃல்டு ஹிமாலயன் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ரூ. 2.01 லட்சம் என்ற விலையில் இது விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த புதிய மாடல் பழைய ஹிமாலயன் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

மூன்று புதிய நிறத் தேர்வுகள் மற்றும் கவர்ச்சியான தொழில்நுட்ப வசதி என கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் இப்பைக் விற்பனைக்கு வந்துள்ளது. இநத் அறிமுகத்தைத் தொடர்ந்து 2021 ஹிமாலயன் பைக்கிற்கான புக்கிங் நடைபெற தொடங்கியிருக்கின்றது. இணையதளம் மற்றும் டீலர்கள் வாயிலாக புக்கிங் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், விரைவில் இப்பைக்கின் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காஸ்மெட்டிக் மாற்றங்கள்:
புதிய ராயல் என்பீஃல்டு ஹிமாலயன் பைக்கில் பல்வேறு புதிய அணிகலன்கள் புகுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், அதிக மிருதுவான அமைப்புடைய இருக்கை, புதிய மெட்டல் ஃப்ரேம், சற்று உயரமான வின்ட்ஸ்கிரீன் மற்றும் ஓட்டுவதை மேலும் ருசீகரமானதாக்கக் கூடிய எக்ஸ்ட்ரா உடற்கூறுகள் என பல்வேறு புதிய அம்சங்களை 2021 ஹிமாலயன் பைக்கில் காண முடிகின்றது.

இத்துடன், பைன் பச்சை, கிரானைட் கருப்பு மற்றும் மிராஜ் சில்வர் ஆகிய மூன்று புதி நிற தேர்வுகளும் இப்பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. முன்னதாக கிராவல் க்ரே, ராக் ரெட் மற்றும் லேக் ப்ளூ ஆகிய நிற தேர்வில் மட்டுமே ஹிமாலயன் பைக் கிடைத்து வந்தது. இந்த நிலையிலேயே மேலும் மூன்று கூடுதல் நிற தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, ட்ரிப்பர் நேவிகேஷன் எனும் புதிய தொழில்நுட்ப வசதி இப்பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது, வழக்கமான மேப் நேவிகேஷனைக் காட்டிலும் மிக சிறப்பாக வழியைக் காண்பிக்க உதவும். இதற்காக நடுத்தர டிஜிட்டல் திறன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுவே, கூகுள் மேப் வசதியுடன் இணைந்து பாதை பற்றிய தகவலை வழங்க இருக்கின்றது.

இத்துடன், ஸ்மார்ட்போனை இணைக்கக் கூடிய ப்ளூடூத் இணைப்பு வசதியும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக பிரத்யேக ஆப் ஒன்றையும் ராயல் என்பீஃல்டு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ஆப்பினைக் கொண்டு செல்போன் மற்றும் பைக்கினை இணைக்கும்போது பல்வேறு தகவல்களை செல்போன் மற்றும் பைக்கின் திரை வாயிலாக அதன் உரிமையாளரால் பெற முடியும்.

தொடர்ந்து, மேக் இட் யூர்ஸ் (Make-it-Yours) எனும் திட்டத்தின் வாயிலாக ஸ்பெஷல் கஸ்டமைசேஷனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதன் மூலம் பைக்கின் லுக்கை லேசாக நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

2021 ராயல் என்பீஃல்டு ஹிமாலயன் பைக்கில் பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 411சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஸ்ஓஎச்சி ஏர் கூல்டு மோட்டாராகும். இது அதிகபட்சமாக 24.3 பிஎச்பியையும், 32 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே எஞ்ஜினைதான் பழைய வெர்ஷன் ஹிமாலயனும் பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதே பழைய சஸ்பென்ஷன் அமைப்பையே தற்போதைய ஹிமாலயன் பைக்கிள் வழங்கியிருக்கின்றது ராயல் என்பீஃல்டு. ஆகையால், 41 மிமீ அளவுள்ள டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனையை இப்பைக்கின் முன் பக்கத்திலும், மோனோஷாக் அப்சார்பரை பின் பக்கத்திலும் காண முடிகின்றது. தொடர்ந்து, அதே பழைய ஸ்டைலிலான 17 இன்ச் ஸ்போக் வீல் பின் பக்கத்திலும், 21 இன்ச் ஸ்போக் வீல் முன் பக்கத்திலும் இடம் பெற்றிருக்கின்றன.

பிரேக்கிங் அமைப்பு, 300மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன்பக்க வீலிலும், 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின் பக்க வீலிலும் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதுதவிர சூப்பர் பிரேக்கிங் திறனுக்காக ட்யூவல் சேனல் ஏபிஎஸ் வசதியினையும் இப்பைக்கில் ராயல் என்பீஃல்டு வழங்கியிருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் கேடிஎம் 390 அட்வென்சர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறங்கியிருக்கின்றது.