சுஸுகி ஹயபுசா பைக்கின் லிமிடேட் எடிசன் இந்தியா வந்தது!

Written By:

புதிய சுஸுகி ஹயபுசா இசட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரத்யேக அம்சங்கள் கொண்ட இந்த புதிய பைக் மாடல் லிமிடேட் எடிசன் மாடலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய பைக் மாடலில் 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வழங்கும் 1,340சிசி 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

 

லிட்டருக்கு 11 கிமீ மைலேஜ் தரும் என சுஸுகி தெரிவிக்கிறது. சாதாரண மாடலுக்கும் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கும் தோற்றத்தில் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஸ்பெஷல் எடிசன் மாடலுக்கான பேட்ஜ் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு விதமான வண்ணக் கலவைகளில் கிடைக்கும். ரூ.16.20 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது.

English summary
Suzuki Motorcycles has now launched a limited edition of their Hayabusa superbike in India. They have christened it as the Hayabusa Z and will be available in limited editions. It will get a host of additional and special features that will be unique to the model.
Story first published: Saturday, February 7, 2015, 11:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark