ஆட்டோ எக்ஸ்போ 2018, உலகளவில் வாகனதுறை ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாபெரும் வாகன திருவிழா இது.
SHOW FULL CONTENT இந்தாண்டிற்கான கண்காட்சி டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது.
சர்வதேச அளவிலிருந்து மொத்தம் 37 வாகன நிறுவனங்கள் தங்களது புதிய ரக பைக், கார்கள், பேருந்து மற்றும் டிரக் போன்ற கனரக வாகனங்கள், மின்சார திறன் பெற்ற வாகனங்கள் ஆகியவற்றை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்துகின்றன.
தொடர்ந்து இந்தியாவில் 14வது ஆண்டாக நடைபெறும் இந்த வாகன கண்காட்சி பிப்ரவரி 14ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
வாகன விற்பனையில் இந்தியாவின் சந்தை மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், 2018 ஆட்டோ எக்ஸ்போ மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
2018 ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார திறன் கொண்ட கான்செப்டில் உருவாக்கப்பட்ட வாகனங்கள் தான் முதன்மை பெறும் என்றாலும், புத்தம் புதிய கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ள வாகனங்களும் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படும்
இந்தியாவின் வாகன துறை ஆர்வலர்கள், ஆட்டோ எக்ஸ்போவை கூர்மையாக உற்றுநோக்கி வருகின்றனர். புத்தம் புதிய வாகன ரகங்களை பார்வையிடவும், குறிப்பாக 2018 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அறிமுகத்திற்காகவும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
14வது ஆண்டாக நடைபெறும் இந்த வாகன திருவிழாவை வாசகர்களுக்கு உடனுக்குடன் வழங்க டிரைவ்ஸ்பார்க் இணையதளும் உற்சாகமாக தயாராகி வருகிறது. அதற்கான கவரேஜ் விவரங்களை கீழ்வருமாறு...
கார்கள்- 2018 ஆட்டோ எக்ஸ்போவில் புத்தம் புதிய கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அவற்றில் மாருதி ஸ்விஃப்ட், டொயோட்டா வியோஸ், மஹிந்திரா டிவிலி, டாடா தயாரிக்கும் இரண்டு புதிய கார்கள்.
இவற்றுடன் தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி மோட்டார்ஸ் ஆகிய புத்தம் புதிய நிறுவனங்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் கால்பதிக்கின்றன.
பைக்குகள் & ஸ்கூட்டர்கள்- நான்கு சக்கரங்களுக்கு போட்டியாக பல புதிய இரண்டு சக்கர வகான மாடல்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் பெறுகின்றன.
அவற்றில் ஹீரோ எக்ஸ்பிளஸ், பிஎம்டபுள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ், 125சிசி திறன் பெற்ற சுஸுகியின் மேக்ஸி மற்றும் புர்க்மன் ஆகிய ஸ்கூட்டர்கள் முக்கிய அறிமுகங்களாக உள்ளன.
மேலும் ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ், ஹீரோ மற்றும் ஓகினாவா நிறுவனங்களின் மின்சார திறன் பெற்ற ஸ்கூட்டர்கள் ஆகியவையும் 2018 ஆட்டோ எக்ஸ்போ இருசக்கர வாகன பிரிவின் முக்கிய அறிமுகங்கள்.
மேலும் ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் யுஎம் மோட்டார் சைக்கிள்ஸ், ஹீரோ மற்றும் ஓகினாவா நிறுவனங்களின் மின்சார திறன் பெற்ற ஸ்கூட்டர்கள் ஆகியவையும் 2018 ஆட்டோ எக்ஸ்போ இருசக்கர வாகன பிரிவின் முக்கிய அறிமுகங்கள்.
கான்செப்டுகள்: முன்பே குறிப்பிட்டது போல இந்தாண்டு ஆட்டோ எக்ஸ்போவில் மின்சார திறன் பெற்ற மின்சார ஆற்றல் கொண்ட வாகனங்களின் படையெடுப்பு தான் அதிகமாக இருக்கும்.
அதேபோல தானியங்கி திறன் பெற்ற வாகனங்களும் இந்த கண்காட்சியில் அறிமுகமாகின்றன. இந்த பிரிவில் ரெனால்ட் ட்ரிசோர், சுஸுகி இ-சர்வைவர், ஹூண்டாய் கோனோ இ.வி போன்ற கார்கள் மின்சார வாகன பிரிவில் அதிக கவனம் ஈர்க்கும்.
SHOW LESS