டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் ரெனோ க்விட் கார்!

Written By:

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், 7 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட க்விட் காரின் எம்பிவி மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

இந்தியர்களின் மனம் கவர்ந்த பட்ஜெட் விலை மாடலாக ரெனோ க்விட் கார் மாறி இருக்கிறது. மாருதியே கதி என்றிருந்தவர்களுக்கு மாற்றான சிறப்பான தேர்வாக இருக்கிறது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளில் இதுவரை 2 லட்சம் க்விட் கார்கள் விற்பனையாகி உள்ளன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

இந்த நிலையில், வர்த்தக வளர்ச்சிக்கு கூடுதலாக புதிய கார் மாடல்கள் தேவை என்பதை உணர்ந்து க்விட் அடிப்படையில் இரண்டு புத்தம் புதிய கார் மாடல்களை ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

இதுகுறித்து ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திடம் பேசிய ரெனோ- நிஸான் கூட்டணியின் உயர் அதிகாரி ஜெரார்டு டீட்டூர்பெட்," க்விட் உருவாக்கப்பட்ட CMF- A பிளாட்ஃபார்மானது ஒரு காருக்காக உருவாக்கப்பட்டது அல்ல. அதில், வேறு புதிய மாடல்களை உருவாக்கும் திட்டத்துடன் அந்த பிளாட்ஃபார்ம் உருவாக்கப்பட்டது.

Recommended Video - Watch Now!
[Malayalam] Datsun rediGO Gold 1.0-Litre Launched In India - DriveSpark
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

வெவ்வேறு பாடி ஸ்டைல்களில், மார்க்கெட் தேவைக்கு தக்கவாறு மாடல்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்," என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில், க்விட் கார் உருவாக்கப்பட்ட சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மில் ஒரு புதிய காம்பேக்ட் ரக செடான் காரும், 7 சீட்டர் எம்பிவி காரும் உருவாக்கப்பட்டு வருகிறதாம்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

இதில், க்விட் கார் அடிப்படையிலான 7 சீட்டர் எம்பிவி கார் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

ரெனோ கார் நிறுவனம் ஏற்கனவே 7 சீட்டர் ரகத்தில் டஸ்ட்டர் எஸ்யூவியையும், லாட்ஜி எம்பிவி காரையும் விற்பனை செய்து வருகிறது. எனவே, க்விட் அடிப்படையிலான மாடல் பட்ஜெட் ரகத்தில் வர இருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

ரெனோ- நிஸான் கூட்டணியில் ஏற்கனவே டட்சன் பிராண்டில் கோ ப்ளஸ் என்ற எம்பிவி கார் விற்பனையில் உள்ளது. இதேபோன்ற ரகத்தில் புதிய ரெனோ எம்பிவி கார் வர இருப்பதாக தெரிகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

மேலும், ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்த புதிய ரெனோ க்விட் எம்பிவி கார் வர இருப்பதாகவும் தெரிகிறது. க்விட் காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், அதன் 7 சீட்டர் மாடல் மிக குறைவான பட்ஜெட்டில் வர இருப்பதால் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது 7 சீட்டர் க்விட் கார்!

ஆண்டு கடைசி நெருங்குவதையடுத்து, இருப்பில் உள்ள ரெனோ க்விட் கார்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே க்ளிக் செய்க.

மேலும்... #ரெனோ #renault #auto expo 2018
English summary
Renault to launch Kwid Based MPV Car in India.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark