ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

Written By:

ஆண்டு கடைசி நெருங்கி வரும் நிலையில், இருப்பு இருக்கும் கார்களை விற்று தீர்க்கும் விதமாக கார் நிறுவனங்கள் டிசம்பர் மாதத்தில் அதிகபட்ச சலுகைகளை வழங்கும். அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் க்விட் காருக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

ஆரம்ப விலை கார் மார்க்கெட்டில் மாருதி ஆல்ட்டோ கார் மாடல்களுக்கு அடுத்து ரெனோ க்விட் கார் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த நிலையில், ஆஃபரில் பட்ஜெட் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களை கவர்ந்திழுக்கும் விதமாக சிறப்பு சேமிப்புச் சலுகைகளை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

அதன்படி, ரெனோ க்விட் காரின் அனைத்து ஏஎம்டி வேரியண்ட்டுகளுக்கும் 7.99 சதவீதம் என்ற மிக குறைவான வட்டி வீதத்தில் சிறப்பு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ரூ.10,000 மதிப்புடைய ஆக்சஸெரீகள் இலவசமாக பெற முடியும்.

ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

க்விட் காரின் க்ளைம்பர் ஏஎம்டி கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளுக்கு ரூ.15,000 மதிப்புடைய ஆக்சஸெரீகளும், 7.99 சதவீத வட்டி வீதத்தில் கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

இந்த சிறப்பு கடன் திட்டம் ரெனோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு கடன் திட்டங்கள் க்விட் கார் வாங்குவதற்கு காத்திருப்பவர்களுக்கு மிகச் சிறந்த சேமிப்புகளை அளிக்கும் என கருதலாம்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Datsun redi-GO 1.0 Litre Launched In India - DriveSpark
ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

வரும் டிசம்பர் 31ந் தேதி வரை இந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர் பெற முடியும். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள ரெனோ கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்களை அணுகலாம்.

ரெனோ க்விட் காருக்கு டிசம்பர் ஆஃபர் அறிவிப்பு: முழு விபரம்!

ரெனோ க்விட் கார் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எஸ்யூவி போன்ற ஸ்டைலான தோற்றம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும்... #ரெனோ #renault
English summary
Regarding the Renault Kwid December offers, this deal is valid only on retails carried out between December 1 to 31, 2017.
Story first published: Tuesday, December 5, 2017, 16:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark