புதிய 2018 மாருதி ஸ்விஃப்ட் Vs பழைய மாடல் ஸ்விஃப்ட்: ஒப்பீடு

புதிய 2018 மாருதி ஸ்விஃப்ட் Vs பழைய மாடல் ஸ்விஃப்ட்: ஒப்பீடு

Recommended Video

Ducati 959 Panigale Crashes Into Buffalo - DriveSpark

புதிய ஸ்விஃப்ட் காருக்கான பல்வேறு புதிய அப்பேட்டுகளை மாருதி சுஸுகி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

புத்தம் புதிய வடிவம், எளியதான கையாளும் திறன் கொண்ட புதிய ஸ்விஃப்ட் கார் இந்தாண்டின் ஹைலைட்டான அறிமுகம் என்றே சொல்லலாம்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

பல்வேறு கூடுதல் அம்சங்களுடன், புதிய உட்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்புகள் மற்றும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றுடன் கவனமீர்க்கிறது இந்த கார்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இரண்டாவது தலைமுறைக்கான ஸ்விஃப்ட் காரிலிருந்து பல்வேறு விதங்களில் மாறுபாடுகளை பெற்றுள்ளது இந்த கார். அந்த மாற்றங்கள் அனைத்தும் வெளிப்புறம் முதல் உட்புறங்கள் வரை பரவிக்கிடக்கின்றன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

3ம் தலைமுறைக்கான 2018 ஸ்விஃப்ட் மற்றும் தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்விஃப்ட் காருக்கான ஒப்பிட்டு தகவல்களை பார்க்கலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் முற்றிலும் புதிய வடிவமைப்பு முறைகள் காணப்படுகின்றன. இதை பழையை மாடலோடு ஒப்பிட்டு பார்க்கையில் நன்றாகவே தெரிகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

காரின் முன்பக்கத்தில் அருங்கோண வடிவிலான கிரில், புத்தம் புதிய முகப்பு விளக்குகள் மற்றும் எல்இடி உடன் கூடிய பகல் நேர ப்ரொஜக்டர் விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

புதுமையான முறையில் மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்த பம்பர் பகுதி அசரடிக்கிறது. இதுவே புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரை பழைய மாடலில்லிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

ஸ்விஃப்ட் கார்களுக்கே உரித்தான பாரம்பரிய வடிவமைப்பை தான் இராண்டாம் தலைமுறைக்கான கார் பெற்றிருந்தது.

புதிய காரோடு ஒப்பிட்டு பார்க்கையில் தற்போதைய ஸ்விஃப்ட் காரில் சிறியளவிலான ஃபாக் விளக்குகள் இடம்பெற்றுள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

ஸ்விஃப்ட் கார்களுக்கே உரித்தான சாய்வான வளைவு முறையில் தான் புதிய ஸ்விஃப்ட் மாடலின் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவற்றில் கூட ஃபிளோட்டிங் ரூஃப் டிசைன் மற்றும் கதவு செயல்பாடோடு பொறுந்திய ஜன்னல் கண்ணாடிகளின் இயக்கம் போன்ற புதிய வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

புதிய அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுயிருப்பதோடு, புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரின் பக்கவாட்டு பகுதிக்கான வடிவமைப்பில் பெரிய மாற்றமில்லை.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

காரின் ரியர் பக்கத்தில் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை மாருதி சுஸுகி மேற்கொண்டுள்ளது. அதன்படி புதிய எல்.இ.டி டெயில் விளக்குகளும் அடக்கம்.

தொடர்ந்து சீரமைக்கப்பட்ட பூட் பகுதி கொஞ்சம் அகலமாக உள்ளது. தவிர பம்பர் பகுதியும் பழைய மாடலோடு ஒப்பிடுகையில் மாற்றம் பெற்றுள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இந்த புதிய வடிவமைப்பால் முன்னர் காரின் நம்பர் பிளேட்டை பூட் பகுதியில் மாட்டப்படும். அதற்போது அதை விடுத்து பம்பரில் நம்பர் பிளேட்டை மாட்டிக்கொள்ளலாம்.

எஞ்சின் தேர்வுகள்

எஞ்சின் தேர்வுகள்

வடிவமைப்பு முறைகளில் தான் மாற்றமே தவிர எஞ்சின் தேர்வு, செயல்திறன் ஆகியவற்றில் பெரிய மாற்றங்கள் எதுவுமே இல்லை. இதுவும் மாருதி சுஸுகிக்கான ஸ்டைல் தான்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என இருவேறு தேர்வுகள் கொண்ட எஞ்சினில் இது வெளிவருகிறது. எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு 82 பிஎச்பி மற்றும் 74 பிஎச்பி ஆற்றலை இது வழங்கும்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இரண்டு எஞ்சின் தேர்வுகளுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. புதிய ஸ்விஃப்ட் கார் ஏஎம்டி தேவையிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

மாருதி சுஸுகி நிறுவனம் முன்னர் பலேனோ மற்றும் டிசையர் மாடல்களை தயாரித்த ஹார்டெக்ட் பிளாட்பாரமின் கீழ் தான் 2018 ஸ்விஃப்ட் காரை தயாரித்துள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தற்போதைய மாடலை விட மிகவும் குறைந்த எடையில் தயாராகியுள்ள இந்த கார், கையாள்வதில் எளிமையாக இருக்க காரின் பல்வேறு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

மாருதி டிசையர், பலேனோ மற்றும் வரக்கூடிய எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் கார்களில் காணப்படும் அதே சேசிஸ் அமைப்பை தான் இந்த ஸ்விஃப்ட் கார் பெற்றுள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. புதிய மாடலில் டேஷ்போர்டு அமைப்பு புதிது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்ப்டடு இருக்கிறது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தொடுதிரை வசதியுடன் கூடிய 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மிரர்லிங் கனெக்ட்டிவிட்டியை பெற்றுள்ளது.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிமோட் கன்ட்ரோல் என்ட்ரி, ஸ்டார்ட்- ஸ்டாப் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சாவி ஆகியவை இதிலுள்ள முக்கிய தொழில்நுட்ப வசதிகள்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகிியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் இசட் ப்ளஸ் என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் 15 அங்குலம் உடைய இரட்டை வண்ண அலாய் வீல்கள், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் கேமரா உள்ளிட்ட பல உயரிய வசதிகள் இடம்பெற்று இருக்கும்.

அளவுகோள்

அளவுகோள்

ஹார்டெக்ட் பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ள 2018 ஸ்விஃப்ட் கார் 40 மிமீ அகலம், கூடுதலாக 20 மிமீ வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் வசதியாக உட்கார முடியும்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

முன்னதாக இருந்த வந்த பழைய தலைமுறை கார்களில் காரின் பூட் 50 லிட்டர் வரை மட்டுமே விரிவுப்படுத்த முடியும். அனால் தற்போது 268 லிட்டர் கொண்டதாக உள்ளது.

விலை

விலை

இரண்டாம் தலைமுறை ஸ்விஃப்ட் கார் ரூ. 4.80 லட்சம் விலையில் தொடங்கிய அதனுடைய டாப் ஸ்பெக் ரூ.7.47 லட்சம் வரை விலை பெறும்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

தற்போதைய புதிய மாடலில் அனைத்து உள், வெளிப்புற கட்டமைப்புகள், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளதால் இது ரூ. 5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை விலை பெறலாம்.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

இந்திய சந்தையில் ஏற்கனவே இந்த காருக்கான முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. திட்டமிடப்பட்ட தயாரிப்பு பணிகளை விட மேலும் ஸ்விஃப்ட் காரின் தயாரிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பழைய ஸ்விஃப்ட் கார் Vs புதிய ஸ்விஃப்ட் கார்..!!

2018ம் ஆண்டில் இந்திய வாகன சந்தையில் நடக்கும் முதலாவது பெரிய கார் வெளியீடாக புதிய ஸ்விஃப்ட் காரின் அறிமுக விழா அமையும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது.

Most Read Articles
English summary
Read in Tamil: New Maruti Swift 2018 vs Old Swift: What Is The Difference. Click for Details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X