புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் சிறப்பம்சங்கள், தொழில்நுட்ப விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

Recommended Video

Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிந்த விஷயம்தான். இந்த காருக்கான முன்பதிவும் டீலர்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் தொழில்நுட்பம் மற்றும் வசதிகள் குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது மாருதி.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வசதிகளை பொறுத்து பல்வேறு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல் மாடலானது LXi, VXi, VXi AMT, ZXi, ZXi AMT மற்றும் ZXi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

டீசல் மாடலானது LDi, VDi, VDi AMT, ZDi AMT மற்றும் ZDi+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. முதல்முறையாக மாருதி ஸ்விஃப்ட் காரில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் [ஆட்டோமேட்டிக்] மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்கள்தான் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 81.8 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

டீசல் மாடலில் இருக்கும் டிடிஐஎஸ் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் தவிர்த்து, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாருதி ஸ்விஃப்ட் கார் வருகிறது.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் வலிமையான ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதிக உறுதியான உயர் வகை உருக்கு சேஸீயில் கட்டமைப்பில் இந்த கார் வருகிறது. பழைய மாடல் 985 கிலோ எடை கொண்ட நிலையில், புதிய மாடல் 955 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாடல் 30 கிலோ வரை எடை குறைந்திருப்பதால் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தையும், அதிக செயல்திறன் கொண்ட மாடலாகவும் இருக்கும்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

பழைய மாடலில் பொருட்களை வைத்து எடுத்து செல்வதற்கான பூட் ரூம் இடவசதி மிக குறைவாக இருப்பது என்ற பெரிய குறை இருந்தது. அதனை களையும் விதமாக புதிய மாடலில் 268 லிட்டர் பூட் ரூம் இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

புதிய மாருதி மாருதி ஸ்விஃப்ட் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றிருக்கிறது.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

உட்புறத்திலும் பல்வேறு மாற்றங்களை சந்தித்து இருக்கிறது. புதிய மாடலில் டேஷ்போர்டு அமைப்பு புதிது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்ப்டடு இருக்கிறது. தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முற்றிலும் கருப்பு வண்ண இன்டீரியர் ஆகியவை முக்கிய அம்சங்கள்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிமோட் கன்ட்ரோல் என்ட்ரி, ஸ்டார்ட்- ஸ்டாப் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சாவி ஆகியவையும் முக்கிய தொழில்நுட்ப வசதிகள்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

இந்த காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகிியவை அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கும்.

 புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பற்றிய அதிகாரப்பூர்வ விபரங்கள் வெளியானது!

வடிவமைப்பு, வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் பல படிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 20, 2018, 10:37 [IST]
English summary
Maruti Suzuki is gearing up for the launch of new Swift in the country. Ahead of that the new third-gen Swift is listed on the official website with all the information such as specifications, variants, colours and features
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+