2018 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா வெளியிடும் புதிய யாரிஸ் செடான் கார்... முழு விபரம்..!!

Written By:

இந்தியாவில் தனது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நடைபெறயிருக்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போவை சரியாக பயன்படுத்த உள்ளது டொயோட்டா.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

இதுப்பற்றி ஆட்டோ கார் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆட்டோ எக்ஸ்போவில் டொயோட்டா தனது புதிய யாரிஸ் செடான் மாடல் காரை வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

இந்த கண்காட்சியில் முகம் காட்டும் யாரிஸ் கார், 2018ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகும் என ஆட்டோ துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video - Watch Now!
Andhra Pradesh State Transport Bus Crashes Into Bike Showroom - DriveSpark
ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

பல்வேறு ஆசிய நாடுகளில் டொயோட்டா யாரிஸ் செடான் காரை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் வெளிவரும் மாடல், சிங்கப்பூர் மாடலை தழுவி உருவாக்காப்பட்டுள்ளது. 4 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார், மிட்-சைஸிடு செடானாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

டொயோட்டா யாரிஸ் காரின் முன்பக்கத்தில் பக்கவாட்டில் இருந்து வளைந்த தோற்றம் கொண்ட ப்ரொஜெக்டர் விளக்குடன் கூடிய ஹெட்-லேம்புகள் மற்றும் பம்பரில் பெரியளவிலான ஏர் டேம் இடம்பெற்றிருக்கும்.

Trending On DriveSpark Tamil:

ஹெல்மெட் அணியாத காரணத்தால் வாகன ஓட்டியை உயிரழக்கும் வரை தாக்கிய சாலை கண்காணிப்பு ஊழியர்கள்..!!

இந்தியாவின் டாப் -5 'ஆட்கொல்லி' நெடுஞ்சாலைகள்!

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

பகலிலும் எரியும் எல்.இ.டி விளக்கு ஏர் டேமின் மேற்புரத்தில் இருக்கும் மற்றும் ஆங்கில எழுத்தான 'வி' வடிவிலான பான்னட்டில் பிணைந்த கிரில் அமைப்பு உள்ளது. இது காருக்கு புதுவித தோற்றத்தை தருகிறது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

காரின் பக்கவாட்டில் அனைத்து ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பை பெற்றுள்ளன. அதன்படி பி பில்லர், வின்டோ ஃபிரேம் மற்றும் இன்டிகேட்டருடன் இணைக்கப்பட்ட ஓ.ஆர்.வி.எம் போன்றவை கார் பக்கவாட்டு பகுதியில் உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

டொயோட்டா யாரிஸ் காரின் ரியர் பகுதியில் பக்காவாட்டு பகுதியில் இருந்து நீளும் டெயில் விளக்குகள், சுறா மீனின் சிறகு போலான ஆண்டெனா உட்பட அனைத்து அம்சங்களும் அழகாக வடிவமைக்கப்பட்ட நிலையில் இடம்பெற்றுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

யாரிஸ் காரின் உட்புறத்தில் தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய எளிமையான டேஷ் ஃபோர்டு, வெள்ளி நிறம் தாங்கிய ஸ்டீயரிங் வீல் மற்றும் கிரோமினால் வட்டமைக்கப்பட்ட டயல்ஸ் ஆகியவை உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

டூயல்-டோன் நிறத்திலான கார் கேம்பினுக்கு ஏற்றவாறு மேலும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை யாரிஸ் காரில் டொயோட்டா மேற்கொண்டுள்ளது.

உட்புற அளவுகளை பொறுத்தவரை இந்த கார் பயணிகளுக்கு சிறந்த இடவசதியை அளிக்கும் வகையில் இந்திய சந்தைக்கு ஏற்றவாற்றான கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

இந்தியாவிற்கான டொயோடா யாரிஸ் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது 107 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும்.

தற்போது இந்த காரில் டீசல் மாடலை வெளியிடும் எண்ணமில்லை என்றும், 2020ம் ஆண்டிற்குள் யாரிஸ் டீசல் தேர்வில் வெளிவரலாம் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

அதேபோல எரிவாயு கொள்ளவை அதிகரிக்கும் பொருட்டு, டொயோட்டா யாரிஸ் மாடலில் கூடுதலாக ஹைஃபிரிட் வேரியண்டையும் டொயோட்டா வெளியிட அதிக வாய்ப்புள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

சாதாரணமாக எல்லா யாரிஸ் மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் காருக்கான டிரான்ஸ்மிஷன் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

ஆனால் தேர்வு செய்யும் விதத்தை பொறுத்து, இந்த கார் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் விற்பனைக்கு வெளிவரவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

ஒருவேளை டீசல் மாடல் யாரிஸ் காரை தயாரிப்பதை டொயோட்டா உறுதி செய்தால், அவை 1.4 லிட்டர் திறன் கொண்ட எஞ்சினை பெற்றிருக்கும்.

அது அதிகப்பட்சமாக 87 பிஎச்பி பவரை வழங்கும். எஞ்சின் சரியான செயல்பாட்டிற்காக அது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கூட்டணி அமைத்திருக்கும்.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

யாரிஸ் காரை இந்தியாவில் வெளியிடுவதன் மூலம், இந்திய சந்தையில் டொயோட்டா மிட்-சைஸ் செடான் செக்மென்டை குறிவைத்திருப்பது நமக்கு தெரியவந்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

இந்தியாவை பொறுத்தவரை மிட்-சைஸ் செடான் கார் சந்தையில் ஹூண்டாயின் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்கள் கொடிக்கட்டி பறக்கின்றன.

மேற்கூறிய கார்களுக்கு வலிமையான போட்டியை தரும் மாடலாக யாரிஸ் இருந்தாலும், அதற்குரிய விலையை டொயோட்டா நிர்ணயம் செய்யும் முடிவில் தான் நிஜ போட்டியே உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

தற்போதுள்ள நிலையில், டொயோட்டா யாரிஸ் காருக்கு ரூ.9 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்குள் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயம் செய்தால், நிச்சயம் இந்த மாடல் பெரிய போட்டியை இந்திய சந்தையில் உருவாக்கும்.

Trending On DriveSpark Tamil:

ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் இந்தியாவிற்கு உண்டா... இல்லையா..?? இழுத்தடிக்கும் யமஹா..!!

புதிய மாருதி ஸ்விஃப்ட் காருக்கு குவியும் முன்பதிவு... மலைக்க வைக்கும் வெயிட்டிங் பீரியட்!

ஆட்டோ எக்ஸ்போவில் வெளிவரும் டொயோட்டா யாரிஸ் செடான் கார்..!!

வடிவமைப்பு, எஞ்சின் தேர்வு, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சகலத்தையும் பூர்த்தி செய்யும் டொயோட்டா யாரிஸ் கார் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் உலக பார்வைக்கு வருகிறது.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

English summary
Read in Tamil: Auto Expo 2018, Toyota To Reveal Yaris Sedan. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark