மஹிந்திரா எக்ஸ்யூவி500வுக்கு போட்டியாக புத்தம் புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா!

அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் 3 புத்தம் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

By Saravana Rajan

Recommended Video

Angry Bull Almost Rammed Into A Car - DriveSpark

அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் 3 புத்தம் புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. அதில், அந்த நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும், ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

இந்த 3 புதிய கார்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் 2.0 என்ற டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. இதில், டாடா க்யூ501 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புதிய 5 சீட்டர் எஸ்யூவி கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இது புதிய தலைமுறை டாடா சஃபாரி எஸ்யூவியாக நிலைநிறுத்தப்படும்.

அடுத்து, டாடா க்யூ502 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் 7 சீட்டர் எஸ்யூவி மாடலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜீப் காம்பஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

மூன்றாவதாக, டாடா எக்ஸ்451 என்ற பெயரில் குறிப்பிடப்படும் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

அடுத்த மாதம் 7ந் தேதி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்களின் அதிகாரப்பூர்வ பெயர்கள் வெளியிடப்படும். டாடா க்யூ501 குறியீட்டு பெயரிலான எஸ்யூவி டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு மாற்றாக வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

டாடா க்யூ502 என்ற 7 சீட்டர் எஸ்யூவி மாடல் டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்படும் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

எனவே, இந்த எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இலகு எடை கொண்ட மாடலாகவும், டிசைனில் மிக சிறப்பான மாடலாகவும் இருக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

மேற்கண்ட இரண்டு எஸ்யூவி மாடல்களும் மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் ஆலை அருகில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு எஸ்யூவி மாடல்களிலும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

மறுபுறத்தில் டாடா எக்ஸ்451 ஹேட்ச்பேக் கார் மாடல் புத்தம் புதிய பிளாட்ஃபார்மிில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பிரிமியம் ஹேட்ச்பேக் கார் செக்மென்ட்டில் மிக சிறப்பான இடவசதி, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் அதிக சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது புத்தம் புதிய டாடா எஸ்யூவி கார்!

இந்த மூன்று கார்கள் தவிர்த்து, டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல், டியாகோ காரின் மின்சார மாடல் ஆகியவையும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spy Images:The Automotive India

Most Read Articles
மேலும்... #auto expo 2018
English summary
Tata Motors Teases 3 Brand New Cars For 2018 Auto Expo.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X