2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் விற்பனை ஆன்லைனில் துவங்கியது!

Written By:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9ந் தேதியிலிருந்து 14ந் தேதி வரை டெல்லி அருகே இருக்கும் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த கண்காட்சியில் முன்னணி கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

இந்த நிலையில், இந்த கண்காட்சியை பார்வையிட விரும்புவோர் ஆன்லைனிலேயே டிக்கெட்டுகளை பதிவு செய்து பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. BookMyShow தளத்தின் மூலமாக, இந்த கண்காட்சிக்கு செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Recommended Video - Watch Now!
Driverless Auto Rickshaw On Indian Highway
 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

சாதாரண டிக்கெட் ரூ.350 என்றும், பிசினஸ் க்ளாஸ் டிக்கெட்டிற்கு ரூ.750 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. பிசினஸ் க்ளாஸ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோர் காலை 10 மணி முதல் 1 மணிவரை கண்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

சாதாரண வகுப்பு டிக்கெட்டில் செல்வோர் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை காணலாம். வார இறுதி நாட்களில் பிசினஸ் வகுப்பு டிக்கெட்டுகள் விற்பனைக்கு இல்லை. சாதாரண கட்டண டிக்கெட் மட்டுமே அனுமதிக்கப்படும்.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

அதேநேரத்தில், வார இறுதி நாட்களில் செல்வோருக்கு ரூ.475 என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். கடைசி நாளான பிப்ரவரி 14ந் தேதிக்கு ரூ.450 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

மூன்று அல்லது அதற்கு மேல் எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வோருக்கு வீட்டிலேயே வந்து டிக்கெட்டுகள் ஜனவரி 8 முதல் டெலிவிரி கொடுக்கப்படும். ஆட்டோ எக்ஸ்போவை காண விரும்புவோர் இப்போதே முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

மேலும், விமான டிக்கெட்டுகளையும் இப்போதே முன்பதிவு செய்தால், கட்டணம் சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அடடே, இந்த ஆட்டோ எக்ஸ்போவை நேரில் சென்று கண்டு களிக்க வாய்ப்பு இல்லையே என்ற ஆதங்கம் இருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டும்.

 2018 ஆட்டோ எக்ஸ்போ டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை துவங்கியது!

நீங்கள் இருந்த இடத்திலிருந்தே ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளையும், படங்கள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்பில் இருங்கள். வழக்கம்போல் இந்த ஆட்டோ எக்ஸ்போவையும் டிரைவ்ஸ்பார்க் தளம் சிறப்பான முறையில் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.

English summary
The Motor Show 2018 – Online Ticket Booking Details.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark