உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

By Balasubramanian

விமானங்கள் எவ்வளவு ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்தோ அதே அளவிற்கு ஆபத்துக்களும் நிறைந்தது. இன்றளவும் விமான பயணங்களில் போது நடந்த சில சம்பவங்கள் மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் மாயமான மலேயசிய விமானம் பற்றி கூட நீங்கள் படித்திருப்பீர்கள்.இது உலகில் முதல் சம்பவம் இல்லை இப்படியாக உலகில் பல்வேறு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த செய்தியில் உலகில் நடந்த யாராலும் அவ்வளவு எளிதாக கண்டு பிடிக்க முடியாத விமான மர்மங்கள் பற்றி இங்கே பார்க்கலாம் வாருங்கள்

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

அமிலியா

அமிலியா என்பவர் அமெரிக்காவை சேர்ந்த விமானி, இவர் விமானங்களை ஓட்டி பயணிப்பதிலும், தன் பயண அனுபவத்தை புத்தகமாக எழுதுவதிலும் அலாதி பிரியம் கொண்டவர். இவர் விமான பயணம் குறித்த புத்தகமான நயன்டிநயன் என்ற புத்தகம் அதிக அளவில் விற்பனையானது. மேலும் அட்லாண்டிக் பெருங்கடலை ஒரே ஆளாக விமானத்தை ஓட்டி கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றவர் இவர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இவர் கடந்த 1937ம் ஆண்டு விமான பயணத்தின் போது மாயமாகியுள்ளார். இவர் சென்ற விமானம், இவருடன் சென்றவர்கள் என எல்லோரும் மாயமாகியுள்ளனர். சிலர் இவர் விமான விபத்தில் இறந்திருக்கலாம் என பலர் கூறுகின்றனர். சிலர் ஜப்பான் ராணுவத்தினர் இந்த குழுவை கைது செய்து வைத்திருந்தது எனவும் கூறுகின்றனர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

சமீபத்தில் இவர் ஜப்பான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் படியான புகைப்படங்கள் வெளியானது. ஆனால் சிலர் அதுவும் போலியான படங்கள் என கூறுகின்றனர். தற்போது அந்த படங்களை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆக மொத்தத்தில் அமிலியா உண்மையில் என்ன ஆனார்? அந்த விமான பயணத்தில் என்ன நடந்தது. என்பது எல்லாம் மர்மமாகவே உள்ளது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

பெர்முடா முக்கோணம்

இது குறித்து நீங்கள் அதிகம் கேள்வி பட்டிருப்பீர்கள் அமெரிக்காவின் மியாமி, பெர்முடா, ரிகோ ஆகிய பகுதிகளை இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண வடிவிலான பகுதிக்குள் செல்லும் விமானங்கள் கப்பல்கள் எல்லாம் காணாமல் போய் வருகிறது. அதற்குள் செல்லுபவை எல்லாம் என்ன ஆகிறது என்பதை அறிமுடியாத நிலை உள்ளது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

கடந்த 1945ம் ஆண்டு அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று அப்பகுதியில் காணாமல் போனது. அதை தேடி சென்ற மற்றொரு விமானமும் காணாமல் போனது. 1948ம் ஆண்டு 32 பயணிகளுடன் சென்ற விமானமும் அப்பகுதியில் செல்லும் போது மாயமானது. 1963 ம் ஆண்டு அமெரிக்க விமான படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் அப்பகுதியில் விபத்திற்குள்ளாகின. அதற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த இடம் பெரும் மர்மம் நிறைந்த இடமாவே பார்க்கப்படுகிறது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

டிபி கூப்பர்

1971ம் ஆண்டு அடையாளம் தெரியாத ஒருவர் அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான போர்ட்லாண்டில் இருந்து வாஷிங்டன்னிற்கு வரும் விமானத்தில் பயணித்தார். விமான பயணத்தின் போது, இவர் சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு பணத்தை சுருட்டி விட்டு பாராசூட் மூலம் விமானத்தின் பின்புற கேட் வழியாக வெளியாக குதித்து தப்பித்தார்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

ஆனால் அதன் பின் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கான எந்த அடையாளமும் யாரிடமும் இல்லை. விமானத்தில் இருந்து குதித்தவர் என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. இது ஏன் அவரது உண்மையான பெயர் என்ன என்பது கூட இன்றும் தெரியவில்லை. ஃஎப்பிஐ போலீஸ் இந்த வழக்கை விமானத்தில் இருந்து குதித்தவர் பிழைத்திருக்காமல் போயிருக்கலாம் என கருதி இந்த வழக்கை முடித்தனர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இந்த சம்பவத்திற்கு பின்பு கூப்பர் வேன்ஸ் என்ற கருவி விமானங்களில் பொருத்தப்பட்டது. அதாவது விமானத்தின் பின்புற கதவு அருகில் பொருத்தப்படும் இந்த கருவி விமானம் பறக்கும் போது காற்றின் அழுத்தத்தால் திசை மாறி கதவை திறக்காமல் மூடி கொள்ளும் வகையிலும், விமானம் தரையிறங்கியதும், காற்றின் அழுத்தம் குறைவு காரணமாக தானாக அடைப்பை விலக்கி கொள்ளும். விமானத்தை ஹைஜாக் செய்பவர்கள் தப்பிக்காமல் இருக்க இந்த கருவி கொண்டு வரப்பட்டது. ஸ்கை டைவிங் செய்ய பயன்படும் சில விமானங்களில் மட்டும் இந்த கருவி பொதுருத்தப்படவில்லை

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

டிடபிள்யூஏ விமானம் 800

டிரான்ஸ் வோர்ல்டு ஏர்லைன்ஸ் விமானம் 800 என்ற போயீங் 747 ரக விமானம் கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி நடுவானில் வெடித்து சிதறியது. இதில் பயணித்த சுமார் 230 பயணிகள் நடுவானிலேயே உடல் சிதறி பலியாகினர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இந்த சம்பவத்தை பலர் தீவிரவாத தாக்குதல் என கூறினர். ஆனால் ஃஎப்பிஐ சுமார் 16 மாத விசாரணைக்கு பின்பு தீவிரவாத தாக்குதல் இல்லை என்ற முடிவுக்கு வந்தது. பின்னர் அமெரிக்க ராணுவம் ஏவுகனை சோதனையின் போது இந்த விமானத்தின் மீது ஏவுகனை மோதி இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என பேசப்பட்டது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

ஆனால் இறுதியாக கடந்த 2000ம் வது ஆண்டில் விமானத்தில் நடந்த சாட் சர்க்யூட் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என அறிக்கை அளிக்கப்பட்டு அத்துடன் இது குறித்த விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

உருகுவேயன் ஏர்ஃபோர்ஸ் விமானம் 571

கடந்த 1972ம் ஆண்டு சுமார் 40 பயணிகளுடன் பயணித்த உருகுவேயன் ஏர்ஃபோர்ஸ் விமானம் திடீர் என காணமல் போனது. விமானத்தில் சென்றவர்கள் எல்லோரும் இறந்திருப்பார்கள் என எல்லோரும் கருதிய நிலையில் சுமார் 72 நாட்களுக்கு பிறகு 16 பேர் மீட்கப்பட்டனர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இந்த சம்பவத்தின் போது துணை விமானி தனது அனுபவமின்மையால் தவறான தகவல் கொடுத்த நிலையில் விமானத்தை தரையிறக்க முயன்ற விமானி விமானம் இறக்கும் போது இது பனி மலை என்பதை உணர்ந்தார் உடனடியாக அவர் விமானத்தை திருப்பிய போது விமானத்தின் ரெறக்கைகள் மலையில் மோதியது. இந்த விபத்தில் சிலர் மட்டுமே பலியாகியிருந்தனர் சுமார் 27 பேர் உயிருடன் இருந்துள்ளனர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

அவர்களிடம் இருந்த டிரான்சிஸ்டர் மூலம் விமானத்தை மீட்க அரசு முயற்சிக்கும் செய்திகளை கேட்டு வந்துள்ளனர். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு தெரிந்தது. ஆனால் விபத்து நடந்து 10 நாட்கள் கழித்து விமானம் கிடைக்காததால் விமானத்தை தேடும் பணி நிறுத்தப்பட்டதாக அரசு அறிவித்தது. அதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் பலர் உணவின்றி ஒவ்வொருவராக உயிரிழக்க துவங்கினர்.

சுமார் 72 நாட்கள் கழித்து இந்த விமானத்தில் சென்றவர்கள் உயிரிருடன் இருப்பது தெரிந்து அவர்களை அரசு மீட்டது. மீட்கப்பட்ட 16 பேரும் இறந்தவர்களின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக உணவாக உண்டு உயிரிபிழைத்தது அவர்கள் மீட்கப்பட்ட பின்பு தெரியவந்தது. அதை மையமாக வைத்து அலைவ் என்ற ஆங்கிலப்படம் எடுக்கப்பட்டு கடந்த 1993ம் ஆண்டு வெளியாகியது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

ஏர் பிரான்ஸ் விமானம் 447

கடந்த 2009ம் ஆண்டு ஏர்பிரன்ஸ் விமானம் 447 பிரேசிலில் உள்ள ரியோவில் இருந்து பாரீஸிற்கு சென்றது. அதில் சுமார் 216ம் பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் கடலின் நடுவே சென்று கொண்டுடிருந்த போது திடீர் என ரேடாரில் இருந்து காணாமல் போனது. இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு இந்த விமானம் குறித்த எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

பலநாட்கள் கழித்தே இந்த விமானத்தின் உதிரி பாகம் ஒன்று கிடைத்தது. அதன் பின் தான் இந்த விமானம் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் நடுக்கடலில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

அப்பொழுதுதான் இந்த விமானத்தின் மீது இடி தாக்கியது. அதன் பின் 2012ம் ஆண்டு இந்த விபத்திற்கான காரணம் வெளியானது. இந்த விமானத்தின் பிடாட் டியூப் என்ற கருவி சரியாக வேலை செய்யாததால் விமானத்தின் ஆட்டோ பைலட் மோட் சரியாக இயங்கவில்லை இதை விமானிகளும் கவனிக்காமல் இருந்துள்ளனர். இந்த விமானத்தை ஓட்டிய விமானி விமானம் புறப்படுவதற்கு முன் சுமார் 1 மணி நேரம் மட்டுமே தூங்கியதாகவும் அதற்கு முன் தனது பெண் நண்பர்களுடன் பிரேசில் பகுதியில் சுற்றியதாகவும் தகவல்கள் வெளியானது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் 522

கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கிரீஸ் காட்டில் இருந்து புறப்பட்ட ஹெலியோஸ் ஏர்வேஸ் விமானம் சிறிது நேரத்தில் கிரீஸ் உடனான தொடர்பில் இருந்து தப்பியது. அதன் பின் சுமார் 1 மணி நேரம் ஏதேன்ஸ் ஏர்போர்ட் உடன் தொடர்பில் இருந்தது. அதன் பின் அரை மணி நேரத்தில் இந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டையும் இழந்து ஒரு மலையின் மீது மோதியது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இதில் சுமார் 121 பேர் பலியானர். கிரிஸ் நாட்டின் நடந்த மிக மோசமாக விமான விபத்து இது. இந்த விபத்து குறித்து நடந்த விசாரனையில் இந்த விமானத்திற்குள் இந்த பிரஷர் வேறுபாட்டின் காரணமாக இந்த விபத்து நகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் உண்மையான காரணம் மர்மமாகவே உள்ளது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

ஃபிளையிங் டைகர் லைன் விமானம் 739

இந்த விமானம் கடந்த 1962ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி 93 அமெரிக்க ராணுவத்தினர் 3 தெற்கு வியட்நாம் மக்களுடன் நடுவானில் பயணித்தபோது திடீர் என மாயமானது. அப்பகுதியில் வானிலையும் கிளியராக இருந்தது. இந்த விமானத்தை சுமார் 8 நாட்கள் 2 லட்சம் சதுர கி.மீ. தேடியும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இந்த விமானம் விபத்திற்குள்ளானதை ஒருவர்கள் பார்த்தாக கூறுப்படுகிறது. இதை வைத்து இந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இந்த விமானத்திற்கு என்னதான் ஆனது என்பதை எந்தவித ஆதாரத்துடனும் இன்று வரை நிரூபிக்க முடியவில்லை.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

பிஎஸ்ஏஏ ஏவிரோ லான்காஸ்டிரயன் ஸ்டார் டஸ்ட்

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் நாட்டிற்கு சொந்தமான ஸ்டார் டஸ்ட் விமானம் காணாமல் போனது. இந்த சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் எந்தவித தடையமும் கிடைக்கவில்லை. பலர் இந்த விமானத்தை ஏலியன்கள் கடத்தி சென்று விட்டனர் என்று எல்லாம் பேசினர்.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

சுமார் 1998ம் ஆண்டு மலையேற்றத்தில் ஈடுபட்ட இருவர் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15000 அடி உயரத்தில் உள்ள ஒரு மலையில் ரோல்ஸ் ராய்ஸ் விமான இன்ஜின் இருப்பதும் அப்பகுதில் சில துணிகள் கிடப்பதும் கண்டனர். இதையடுத்து அவர்கள் கீழே வந்து அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேடுதல் பணி நடந்தது. இதில் சுமார் 9-11 பேரின் எலும்புகூடுகள் கிடைத்தன. அதன் பின்னர் தான் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருப்பது தெரிந்தது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இந்த விமானம் விமானிகளின் தவறாலோ அல்லது தொழிற்நுட்பகோளாறாளோ மலையை கடந்ததை தெரியாமல் உயரத்தை குறைத்திருக்க கூடும் இதனால் விமானம் மலையில் மோதி விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.

உலகில் மர்மமான விமானங்களில் நடந்தது என்ன? ; அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள்

இது போல உலகில் பல்வேறு பகுதியில் களில் விமானங்கள் குறித்த மர்மமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து தான் வருகிறது. இதுவரை பல சம்பவம் ஏன் நடந்தது. என்பது கூட தெரியாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தொழிற்நுட்ப வளர்ச்சி மேலும் முன்னேற்றமடைய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்படும் செய்திகள்

  1. புத்தம் புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்!!
  2. ஜூலையில் விற்பனையான டாப் 10 பைக் பட்டியல்; ஆக்டிவா விற்பனையில் டாப்...
  3. பெங்களூர் கோ- கார்ட் ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த மினி கார்கள்!!
  4. இளைஞர்களை கவரும் புதிய டிசைன் உடன் 2019ல் மீண்டும் வருகிறது மாருதி சென் கார்
  5. ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!
Most Read Articles

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Ten of the world's biggest aviation mysteries. Read in Tamil
Story first published: Tuesday, August 21, 2018, 18:27 [IST]
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more