புத்தம் புதிய மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்!!
டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் மிக குறைந்த பட்ஜெட்டில் புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த க்ராஸ்ஓவர் ரக கார் மாடலானது X455 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்ப
குறைந்த பட்ஜெட் எஸ்யூவிகளை களமிறக்குவதற்கு கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். இதன் தொடர்ச்சியாக, மாருதி கார் நிறுவனம் புத்தம் புதிய பட்ஜெட் க்ராஸ்ஓவர் ரக மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக இன்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் மிக குறைந்த பட்ஜெட்டில் புதிய க்ராஸ்ஓவர் ரக மாடலை களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கும் குட்டி க்ராஸ்ஓவர் ரக கார் மாடலானது X455 என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஹார்ன்பில் [Hornbill] என்ற பெயரில் மார்க்கெட்டில் களமிறக்கப்பட இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா 45X என்ற பிரிமியம் ஹேட்ச்பேக் கார் உருவாக்கப்பட்ட அதே மோடுலர் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக காரும் உருவாக்கப்பட இருக்கிறது.

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 என்ற டிசைன் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும். இதன் டிசைன் மிக அட்டகாசமாக அமையும் என்று தெரிகிறது.

இந்த புதிய பட்ஜெட் க்ராஸ்ஓவர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும், ஏஎம்டி எனப்படும் புதிய வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி ஆல்ட்டோ காரைவிட சற்றே கூடுதல் விலையில் இந்த புதிய காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கும் என்பது தகவலாக உள்ளது. வரும் 2021ம் ஆண்டு சந்தைப்படுத்துவதற்கான திட்டத்துடன் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் செயலாற்றி வருகின்றனர்.

மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 போன்ற மினி எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் போட்டியாளர்களைவிட குறைவான விலையிலும், அதிக சிறப்பம்சங்களையும் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்று நம்பலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு கிடைத்த பெரும் வெற்றியை தொடர்ந்து டாடா ஹாரியர் என்ற புதிய எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது. இந்த எஸ்யூவி பெரும் ஆவலைத் தூண்டிருக்கும் மாடல்களின் வரிசையில் இந்த புதிய மாடலும் வாடிக்கையாளர்களி


Click it and Unblock the Notifications








