ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 167 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ச

By Saravana Rajan

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை விபரங்களை விபரமாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

சில ஆண்டுகளுக்கு முன் மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 2015ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் நீண்ட காலமாக வெளிவந்த வண்ணம் இருந்தன. ஒருவழியாக புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியா வந்துவிட்டது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் அனைத்து வசதிகளும் கொண்ட மாடலாக ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இந்த புதிய மாடல் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை வெளிப்புறத்தில் முக்கிய அம்சங்களாக உள்ளன. இதன் முகப்பில் பிரம்மாண்ட ஏர் டேம் மற்றும் க்ரோம் பட்டைகள் வசீகரிக்கும் அம்சங்களாக இருக்கின்றன.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியின் மிக முக்கிய மாற்றமாக இருக்கை அமைப்பை கூறலாம். பழைய மாடல் 5 பேர் செல்வதற்கான இருக்கை அமைப்புடன் வந்த நிலையில், தற்போது வந்துள்ள புதிய மாடல் 7 பேர் செல்வதற்கான மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் வந்துள்ளது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 6.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. 710 வாட் ராக்ஃபோர்டு ஃபாஸ்கேட் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

இந்த பிரிமியம் எஸ்யூவியில் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி சீட்டுகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைடடுகள், பேடில் ஷிஃப்ட் வசதி, பார்க்கிங் பிரேக், எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட ஏராளமான பிரிமியம் அம்சங்களை பெற்றிருக்கிறது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 222 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஹைப்ரிட் மாடலையும் கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டு இருக்கிறது.

ரூ.31.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்தது புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி!!

இந்த எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட ப பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. பழைய மாடலைவிட மிகச் சிறந்த வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

ரூ.31.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய மிட்சுபிஷி அவுட்லேண்டர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். ஆனால், பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 21, 2018, 10:18 [IST]
English summary
All new Mitsubishi Outlander SUV launched In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+