ரூ.1.5 கோடி காரை சல்மான்கானுக்கு பரிசளித்த ஆடி!

By Saravana

பாலிவுட் நடிகர்களுக்கு கார்களை பரிசு கொடுத்து ஆதரவு திரட்டுவதில் ஆடி கார் நிறுவனத்துக்கு ஒரு ஆத்ம திருப்தி. விளம்பரமாகவும் அது அமைகிறது. இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பவர் நடிகர் சல்மான்கான்.

கடந்த 6ந் தேதி ஆடியின் புதிய ஆர்எஸ்7 கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அறிமுக விழாவிற்கு படு பிஸியாக இருந்த சல்மான்கானை வளைத்து பிடித்து கொண்டு வந்து காரை அறிமுகம் செய்தது. அத்தோடு, அங்கு மேடையில் நிறுத்தப்பட்டிருந்த MH 02 CT 2727 என்ற பதிவெண் கொண்ட அதே காரை சல்மான்கான் கையில் பரிசாக கொடுத்து அசத்தியது ஆடி.

இந்த புதிய காரில்தான் தற்போது சல்மான்கான் பறந்து வருகிறார். இந்த கார் அறிமுக தினத்துக்கு மறுநாள் மும்பை, பந்த்ரா பகுதியில் இதே காரில் சல்மான்கான் பறந்தை பார்க்க முடிந்தது. இந்த பாலிவுட் பம்மல் கே சம்பந்ததுக்கு இப்போது மிக நெருக்கமாக இருப்பது இந்த புதிய ஆடி கார்தான். இந்த காரை பற்றிய சில சிறப்புகளை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

ஆர்எஸ் குடும்பம்

ஆர்எஸ் குடும்பம்

சாதாரண மாடல்களின் கூடுதல் திறன் கொண்ட மாடல்களை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி என்ற பிராண்டிலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் எம் என்ற வரிசையில் வெளியிட்டு வருகின்றன. இதேபோன்று, பெர்ஃபார்மென்ஸ் கார்களை ஆடி நிறுவனம் ஆர்எஸ் வரிசையில் வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் வந்துள்ள புதிய கார் மாடல்தான் ஆடி ஆர்எஸ்7.

 அறிமுகம்

அறிமுகம்

ஆடியின் ஏ7 செடான் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல்தான் புதிய ஆர்எஸ்7. ஸ்போர்ட்பேக் ரகத்திலான இந்த கார் கடந்த ஆண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பல்வேறு மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்கு வந்த இந்த காரை இந்த புத்தாண்டில் இந்தியாவில் இறக்கியுள்ளது ஆடி.

கட்டுமானம்

கட்டுமானம்

ஆர்எஸ்7 காரின் பாடி 80 சதவீத உருக்கு மற்றும் 20 சதவீத அலுமினிய கலவையிலான பாகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், இலகு எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

ஆடி எஸ்6 காரில் பொருத்தியிருந்த அதே 4.0 லிட்டர் வி8 எஞ்சினை டியூனிங் செய்து இதில் பொருத்தியிருக்கின்றனர். இந்த சக்திவாய்ந்த எஞ்சின் 560 பிஎஸ் பவரையும், 700 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆடியின் பிரத்யேக குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த கார் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3.9 வினாடிகளில் கடந்துவிடும். இந்த காரின் உச்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.

 சிறப்பு தொழில்நுட்பம்

சிறப்பு தொழில்நுட்பம்

8 சிலிண்டர்கள் அமைப்பு கொண்ட இந்த காரின் எஞ்சினின் 4 சிலிண்டர்கள் தேவைக்கு ஏற்ப செயல்படும். சிலிண்டர் ஆன் டிமான்ட் என்ற இந்த நுட்பத்தின் மூலம், குறைந்த கார்பன் புகையை வெளியிடும் தன்மை கொண்டதாகவும், அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகவும் இருக்கும்.

அம்சங்கள்

அம்சங்கள்

இந்த காரில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன என்பதை முழுமையாக அறிந்துகொள்வதற்கு இங்கே கிளிக் செய்து உள்ளே வாருங்கள்.

 
English summary
Audi, the German premium carmaker has gifted an RS7 Sportback to Bollywood star Salmankhan.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+