கண்ணி வெடி தாக்குதலுக்கும் அசங்காத புதிய ஆடி கார் அறிமுகம்

By Saravana

குண்டு துளைக்காத வசதி உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்ட புதிய ஏ8 காரை ஆடி அறிமுகம் செய்துள்ளது.

ஆடி ஏ8எல் காரின் அடிப்படையிலான இந்த நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட காருக்கு ஏ8 செக்யூரிட்டி என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

தோற்றம்

தோற்றம்

சாதாரண ஏ8எல் காரிலிருந்து இந்த காரின் புதிய கிரில், ஹெட்லைட் ஆகியவை வேறுபடுத்துகின்றன.

புல்லட் புரூஃப்

புல்லட் புரூஃப்

இந்த காரின் பாடி மற்றும் கண்ணாடிகள் புல்லட் புரூப் வசதி கொண்டவை.

 கண்ணி வெடி

கண்ணி வெடி

இந்த கார் ஆயுத தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் VR7 பாதுகாப்பு தரத்தை கொண்டது. இந்த காரின் அடிப்பாகம் கண்ணி வெடி தாக்குதல்களில் கூட சேதமடையாது.

 நச்சுக் காற்று

நச்சுக் காற்று

இந்த காரின் கேபினில் விஷவாயு அல்லது நச்சுக் காற்று புகாத விசேஷ தடுப்பு நுட்பம் கொண்டது.

கதவுகள் கழன்றுவிடும்

கதவுகள் கழன்றுவிடும்

விபத்துக்கள் அல்லது குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் சிக்கினால் இந்த காரின் கதவுகள் தானாகவே கழன்றுவிடும். இதன்மூலம், உள்ளே சிக்கியவர்களை எளிதாக வெளியேறவும், மீட்கவும் முடியும்.

 கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பாதுகாப்பு

கூடுதல் பணம் கொடுத்தால் இந்த காருக்கு தீப்பிடிக்காத எரிபொருள் டேங்க் மற்றும் விசேஷ பேட்டரியையும் பொருத்தி தருவதாக ஆடி கூறியுள்ளது.

தயாரிப்பு

தயாரிப்பு

ஆடி ஏ8எல் காரை இதுபோன்று ஏ8ல் செக்யூரிட்டி மாடலாக மாற்றுவதற்கு 450 மணிநேரம் பிடிக்கும் என்று ஆடி தெரிவிக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த கார் இரண்டு விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். ஒன்று 435எச்பி திறன் கொண்ட ட்வின் டர்போ 4.0 லிட்டர் வி8 எஞ்சின். மற்றொன்று 500 எச்பி ஆற்றலை அளிக்கும் 6.3 லிட்டர் W12 எஞ்சின்.

 விவிஐபிகளுக்கான கார்

விவிஐபிகளுக்கான கார்

அனுதினமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் மத்தியில் வாழும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த கார் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.

 
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+