ரூ.4.99 லட்சத்தில் ஃபோர்டு கிளாசிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியை சமாளிக்கும் விதத்தில் ஒரு லட்ச ரூபாய் வரை தற்போது கிளாசிக் காரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து, காம்பெக்ட் செடான் கார்களான மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ் கார்களுடன் கிளாசிக் போட்டியிடுகிறது.
பெட்ரோல் மாடல்
பெட்ரோல் மாடலில் 4 சிலிண்டர் 1.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சன் 101 பிஎஸ் பவரையும், 146 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
டீசல் மாடல்
டீசல் மாடலில் 69 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.
வசதிகள்
வேகத்துக்கு தகுந்தவாறு மியூசிக் சிஸ்டத்தின் ஒலியை கூட்டிக் குறைக்கும் வசதி, பனி விளக்குகள், இன்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள், வேகத்தை உணர்ந்து கதவுகள் பூட்டிக் கொள்ளும் வசதிகள் உள்ளன. ஏபிஎஸ், இபிடி மற்றும் ஏர்பேக்குகளுடன் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் கிளாசிக் செடான் கார் கிடைக்கிறது.
மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 13.9 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
விலை
ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.59 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோர்டு கிளாசிக் இனி விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications