அமெரிக்காவின் பிரபலமான மஸில் காரான ஃபோர்டு மஸ்டாங் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஃபோர்டு அதிகாரி ஒருவர் சூசகமாக தெரிவித்தார்.
கடந்த 1964ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் கார் அமெரிக்க சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 6ம் தலைமுறை புதிய மஸ்டாங் காரை உலகளாவிய அளவில் கொண்டு செல்வதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த ஆண்டு வலது புற டிரைவிங் அமைப்பு கொண்ட மஸ்டாங் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ஃபோர்டு நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவு சர்வதேச தலைவர் ராஜ் நாயர் கூறுகையில்," வலது புற டிரைவிங் கொண்ட மஸ்டாங் மாடல் மூலம் பல்வேறு புதிய மார்க்கெட்டுகளுக்கு செல்ல முடியும். இந்தியாவிலும் மஸ்டாங் காருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து தற்போது என்னால் உறுதி கூற முடியாது," என்று தெரிவித்தார்.
இந்தியா தவிர்த்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மார்க்கெட்டுகளிலும் புதிய மஸ்டாங் காருக்கு அதிக வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் மஸ்டாங் அறிமுகம் செய்யப்பட்டால், ஃபோர்டு பிராண்டு மதிப்பு வெகுவாக உயரும் என்றும் ஆட்டோமொபைல் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஃபோர்டு மஸ்டாங் பற்றிய சில விபரங்கள் ஸ்லைடரில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாடல்கள்
மூன்று வித எஞ்சினுடன் கிடைக்கும். 3.7 லிட்டர் வி6 எஞ்சின், 5.0 லிட்டர்வி8 எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இதில், 2.3 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அதிக எரிபொருள் சிக்கனத்தை தருவதாக இருக்கும்.
கன்வெர்ட்டிபிள்
கன்வெர்ட்டிபிள் மாடலில் புதிய கூரை அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் கேபின் நாய்ஸ் குறைவாக இருக்கும் என்பதோடு, தோற்றமும் மிகச் சிறப்பாக இருக்கும் என்கிறது ஃபோர்டு. மேலும், கூரையை மிக விரைவாக மடக்கி விரிக்கவும் முடியும்.
புதிய சஸ்பென்ஷன்
முதல்முறையாக இந்த காரின் பின்புறத்தில் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் அமைப்பு பொருத்தப்ப்டடுள்ளது. இதனால், மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும்.
பொன்விழா சின்னம்
மஸ்டாங் காரின் பொன்விழாவையொட்டி, ஒவ்வொரு 2015 மாடல் மஸ்டாங் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரிலும் குதிரை சின்னமும், Mustang - Since 1964 என்ற வாசகமும் பொறிக்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications