நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பென்ஸ் காம்பெக்ட் எஸ்யூவியின் விபரங்கள்!!

By Saravana

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் காரின் அழகில் க்ளீன் போல்டான வாடிக்கையாளர்கள் ஏராளம். அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட காம்பெக்ட் கிராஸ்ஓவர்தான் பென்ஸ் ஜிஎல்ஏ. கடந்த ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் கான்செப்ட் மாடலாக வைக்கப்பட்டிருந்த இந்த காரின் தயாரிப்பு நிலைக்கு உயர்ந்துள்ளது.

ஏ கிளாஸ் காரைவிட சற்று உயர்த்தப்பட்ட கூரை, டிசைனில் சிறிய மாற்றங்களுடன் நச்சென்று இருக்கும் இந்த புதிய காரின் படங்களை பென்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏஎம்ஜி பாடி கிட்டுகளுடன் ஜிஎல்ஏ45 ஏஎம்ஜி என்ற நாமகரணத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த கார் மிக அட்டகாசமாக இருக்கிறது. இந்த காரின் படங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

ஏ45 ஏஎம்ஜி காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டிருக்கும்.

எஞ்சின் சிறப்பு

எஞ்சின் சிறப்பு

4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின்களில் இதுதாதன் உலகிலேயே மிக சக்திவாய்ந்த தயாரிப்பு நிலையில் உள்ள எஞ்சின் என மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

பவர்

பவர்

ஜிஎல்ஏ 45 ஏஎம்ஜி காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் 355 எச்பி பவரையும், 450 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

கியர் பாக்ஸ்

கியர் பாக்ஸ்

இந்த காரில் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் பிராண்டின் டிசிடி 7 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

 

 

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

ஏ கிளாஸ் காரின் ஏ45 ஏஎம்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின் என்றாலும், ஒப்பிடுகையில் பெர்ஃபார்மென்ஸ் சற்று குறைவுதான். இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். இதன் உச்ச வேகம் மணிக்கு 250 கிமீ.

மைலேஜ்

மைலேஜ்

ஏ45 ஏஎம்ஜி கார் லிட்டருக்கு 14.5 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஜிஎல்ஏ45 ஏஎம்ஜி கார் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

கான்செப்ட் மாடலுக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் தெரியவில்லை. புதிய டிசைன் கொண்ட ரிம், ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

நடப்பு ஆண்டு மத்தியில் இந்த கார் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
For those who like the A-Class, but love sporty crossovers Mercedes-Benz introduced the GLA Class, a slightly raised version of the hatchback. This was followed by the usual AMG treatment, resulting in the GLA45 AMG.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+