தீபாவளிக்கு அறிமுகமாகும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவி!

By Saravana

இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய காம்பெக்ட் எஸ்யூவியான ஜிஎல்ஏ கிராஸ்ஓவர் கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனையில் ஏ கிளாஸ் ஹேட்ச்பேக் கார் முக்கிய பங்களிப்பை வழங்கியது. இதை போன்று, மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் ஜிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமிட்டுள்ளது.

முதல் தரிசனம்

முதல் தரிசனம்

இந்தியர்களுக்கு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜிஎல்ஏ எஸ்யூவி காட்சி தர இருக்கிறது. இத்துடன் சேர்த்து சிஎல்ஏ  உள்ளிட்ட பல புதிய கார் மாடல்களை பென்ஸ் காட்சிக்கு வைக்க இருக்கிறது. அதில், மிக முக்கியமான மாடலாக ஜிஎல்ஏ காம்பெக்ட் எஸ்யூவி இருக்கும்.

ஏ கிளாஸின் எஸ்யூவி அவதாரம்

ஏ கிளாஸின் எஸ்யூவி அவதாரம்

பென்ஸ் ஏ கிளாஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்களை எளிதாக கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும். பெட்ரோல் மாடலில் 156 பிஎச்பி வரை பவரை அளிக்கும் 1.6 லிட்டர் எஞ்சின், டீசல் மாடலில் 136 பிஎச்பி வரை பவரை அளிக்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 233 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 0-100 கிமீ வேகத்தை கடக்க 6.5 வினாடிகள் எடுத்துக் கொள்ளும்.

ஆல் வீல் டிரைவ்

ஆல் வீல் டிரைவ்

இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் மாடலில் 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வசதிகள்

வசதிகள்

அட்டென்ஷன் அசிஸ்ட், ஓட்டுனர் சோர்வடைவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, மோதல் தவிர்ப்பு நுட்பம் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் வர இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் பிரேக்

ஆட்டோமேட்டிக் பிரேக்

டிஸ்ட்ரோனிக் ப்ளஸ் என்ற பாதுகாப்பு வசதியை கூடுதலாக பென்ஸ் வழங்குகிறது. இந்த தொழில்நுட்பம் கார் 200 கிமீ வேகத்தில் செல்லும்போது மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தால் ஆட்டோமேட்டிக் பிரேக் மூலம் காரை நிறுத்திவிடும்.

போட்டி

போட்டி

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது பிஎம்டபிள்யூ எக்ஸ்1, ஆடி க்யூ3 போன்ற என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு இந்த புதிய ஜிஎல்ஏ கிளாஸ் கடும் போட்டியை கொடுக்கலாம்.

 
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+