ஆட்டோமேட்டிக் பஜேரோ ஸ்போர்ட் மாடலை களமிறக்கும் மிட்சுபிஷி!

By Saravana

மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மிட்சுபிஷியின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வருகிறது.

 2012ல் அறிமுகம்

2012ல் அறிமுகம்

கடந்த 2012ல் பஜேரோ பஜேரோ ஸ்போர்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலையில் இந்த எஸ்யூவியின் சிறப்பு பதிவு மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இறக்குமதி செய்து விற்கப்பட்ட இந்த கார் தற்போது சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 178 பிஎச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது.

4 வீல் டிரைவ்

4 வீல் டிரைவ்

இந்த காரில் மிட்பிஷியின் சூப்பர் செலக்ட் 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இது ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக இருக்கும். 215 கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட 7 சீட்டர் எஸ்யூவி மாடல் இது.

ஆட்டோமேட்டிக் மாடல்

ஆட்டோமேட்டிக் மாடல்

இந்தியாவில் 5 ஸ்பீடு ஸ்போர்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டதாக மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் வர இருக்கிறது.

 புதிய மாடல்கள்

புதிய மாடல்கள்

பஜெரோ ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் மாடலுடன் சேர்த்து 2014 அவுட்லேண்டர் எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது.

 
English summary
Hindustan Motors will be launching the Pajero Sport with an automatic transmission next fiscal. It was announced during an annual general body meeting.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+