ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டி கொடுக்கும் விதத்திலான புதிய காம்பெக்ட் எஸ்யூவியை சாங்யாங்- மஹிந்திரா கூட்டணி தயாரிக்கிறது.
அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மிக ஸ்டைலான டிசைன் கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டு வரும் இந்த எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.
அடிப்படை
மஹிந்திராவின் அங்கமான தென்கொரியாவின் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தின் X100 கிராஸ்ஓவர் கான்செப்ட் மாடலின் அடிப்படையில்தான் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி தயாரிக்கப்படுகிறது.
குறியீட்டுப் பெயர்
எஸ்101 என்ற குறியீட்டுப் பெயரில் தற்போது ஒரு காம்பெக்ட் எஸ்யூவியை மஹிந்திரா சோதனை செய்து வருகிறது. இதற்கடுத்து வர இருக்கும் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி எஸ்102 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது.
புதிய டர்போ எஞ்சின்
ஈக்கோஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஈக்கோபூஸ்ட் எஞ்சினை போன்றே புதிய 1.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினை சாங்யாங்- மஹிந்திரா கூட்டணி தயாரிக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்பூஸ்டு எஞ்சின் போன்றே இதுவும் அதிக பவர் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாக இருக்கும்.
மஹிந்திரா உறுதி
மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்,' சாங்யாங் நிறுவனத்துடன் இணைந்து பல புதிய தயாரிப்புகளை ஒரே பிளாட்ஃபார்மில் உருவாக்கி வருகிறோம். இதன்மூலம், தயாரிப்பு செலவீனம் வெகுவாக மிச்சமாகும். இந்த கூட்டணியில் 6 புதிய எஞ்சின்களை உருவாக்கி வருகிறோம். மேலும், சாங்யாங் எக்ஸ்100 பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டு வரும் புதிய தயாரிப்பு மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் மாடலாக இருக்கும் என்று கூறினார்.
தயாரிப்பு
மஹிந்திராவின் நாசிக் ஆலையில் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி உற்பத்தி செய்யப்பட உள்ளது.
சாயல்
சாங்யாங் எக்ஸ்100 கிராஸ்ஓவர் கான்செப்ட்டின் பக்கவாட்டு டிசைன் லேண்ட்ரோவர் எவோக் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை ஒத்திருக்கிறது. ஆனால், தயாரிப்பு நிலைக்கு செல்லும்போது நிச்சயம் இதில் அதிக வேறுபாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications