இது ரொம்ப ஸ்பெஷலான போர்ஷே கார் தெரியுமா?

இதுவரை போர்ஷே அறிமுகம் செய்துள்ள 911 குடும்பத்தில் ரொம்ப ஸ்பெஷலான காராக வந்துள்ளது புதிய 911 தர்கா கன்வெர்ட்டிபிள் கார்.

டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய கார் போர்ஷேவின் பழமையான 911 தர்கா காரின் டிசைன் தாத்பரியங்களையும், ஒரு ஸ்பெஷலான தொழில்நுட்பத்துடன் கூடிய திறந்து மூடும் கூரையுடன் வந்துள்ளது.

மனதை மயக்கும் டிசைனும், சிறப்பான தொழில்நுட்ப வசதிகளுடன் வந்திருக்கும் இந்த புதிய கார் பற்றிய கூடுதல் தகவல்களையும், படங்களையும் வாசகர்களின் கண்களுக்கு விருந்தாக்குகிறோம்.

கன்வெர்ட்டிபிளுக்கு தடை விதிக்க முடிவு?

கன்வெர்ட்டிபிளுக்கு தடை விதிக்க முடிவு?

1960ம் ஆண்டுகளில் கன்வெர்ட்டிபிள் ரக கார்களை தீவிரமாக பரிசீலித்தது. கன்வெர்ட்டிபிள் ரக கார்கள் விபத்தில் சிக்கியபோது, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுதான் அதற்கு முக்கிய காரணம். மேலே, கூரை இல்லாததால் விபத்தில் சிக்கும்போது, உள்ளே இருப்பவர்களுக்கு அதிக காயங்களை ஏற்படுத்தியதுடன், அதிக உயிரிப்புகளையும் ஏற்படுத்தியது.

போர்ஷேவின் ஐடியா

போர்ஷேவின் ஐடியா

பல நிறுவனங்கள் கன்வெர்ட்டிபிள் தயாரிப்பை கைவிட எண்ணின. சில நிறுவனங்கள் கன்வெர்ட்டிபிள் ரக கார்களில் புதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த முனைந்தன. அப்போது, போர்ஷே நிறுவனம் சிம்பிளாக ஒரு ஐடியா செய்தது. கூடையில் இருக்கும் கைப்பிடி போல, காரின் மையப் பகுதியில் ரோல் ஓவர் பார் எனப்படும் உலோக பட்டையை கொடுத்தது. இதன்மூலம், கார் கவிழும்போது, அந்த பட்டை தாங்கிக் கொண்டு உள்ளே இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொடுக்கப்பட்டது.

பழைய தர்கா

பழைய தர்கா

1965ம் ஆண்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த பாதுகாப்பான தர்கா கேப்ரியோலெட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது பிரபலமாக இருந்த ஒரு கார் பந்தயத்தின் பெயர்தான் தர்கா என்பது குறிப்பிடத்தக்கது.

ஓல்டு இஸ் கோல்டு

ஓல்டு இஸ் கோல்டு

1965ம் ஆண்டு வெளியிடப்பட்ட அந்த 911 தர்கா காரின் டிசைன் தாத்பரியங்கள் அடிப்படையில், புதிய தொழில்நுட்ப வசதிகள் நிரம்பியதாக இந்த புதிய 911 தர்கா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன.

 சிறப்பம்சம்

சிறப்பம்சம்

புதிய 911 தர்கா காரின் மிக முக்கிய சிறப்பம்சமே அதன் திறந்து மூடும் கூரைதான். ஒரு மலர் விரிவது போன்று திறந்து மூடுகிறது. ஒருமுறை திறந்து மூடுவதற்கு 19 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். போர்ஷே எஞ்சினியர்களின் 3 ஆண்டுகள் கடின முயற்சியில் இந்த புதிய திறந்து மூடும் கூரை உருவாக்கப்பட்டுள்ளது.

 மலருடன் ஒப்பீடு

மலருடன் ஒப்பீடு

பி பில்லருக்கு பின்னால் இருக்கும் கூரை பகுதி மேலே தூக்கிக் கொள்கிறது. அப்போது, ஓட்டுனர் மற்றும் பயணிக்கு மேலே இருக்கும் கூரை அழகாக பின்புறம் சென்று உள்ளே அடங்கி விடுகிறது. அதன் பின்னர், பி பில்லருக்கு பின்னால் இருக்கும் கூரை மீண்டும் வந்து பொருந்திக் கொள்கிறது.

 மாடல்கள்

மாடல்கள்

புதிய 911 தர்கா கார் எஞ்சினை பொறுத்து இரண்டு மாடல்களில் வந்துள்ளது. தர்கா 4 மற்றும் தர்கா 4 எஸ் என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம் பெற்றுள்ளது.

தர்கா 4 எஞ்சின்

தர்கா 4 எஞ்சின்

தர்கா 4 மாடலில் 350 எச்பி ஆற்றலை அளிக்கும் 3.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் எட்டிவிடும். இது உச்சபட்சமாக மணிக்கு 281 கிமீ வேகத்தில் செல்லும் சக்தி கொண்டது.

 தர்கா 4 எஸ் எஞ்சின்

தர்கா 4 எஸ் எஞ்சின்

டாப் எண்ட் மாடலாக விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த தர்கா 4எஸ் மாடலில் 400 எச்பி ஆற்றலை அளிக்கும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 0- 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். இதன் உச்சபட்சமாக மணிக்கு 297 கிமீ வேகம் வரை செல்லும்.

விலை

விலை

தர்கா 4 மாடல் 86,281 பவுண்ட் விலையிலும், தர்கா 4எஸ் மாடல் 96,316 பவுண்ட் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
English summary
The new version of the Porsche 911 is the legendary Targa, which features a folding roof, a large rear window and a silver B-pillar.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+