2015ல் டொயோட்டாவின் ஹைட்ரஜன் கார் தயாரிப்பு துவங்குகிறது!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த டோக்கியோ சர்வதேச மோட்டார் ஷோவில் ஹைட்ரஜனில் இயங்கும் புதிய காரின் கான்செப்ட் ஒன்றை டொயோட்டா அறிமுகம் செய்தது. பார்வையாளர்களின் ஆவலைத் தூண்டுவதாக இருந்த இந்த கான்செப்ட் கார் தற்போது அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வரும் மின்னணு சாதனக் கண்காட்சியில் மீண்டும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக ஜப்பானிய நிறுவனங்களான டொயோட்டா, ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜனில் இயங்கும் காரை தயாரிக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர். கடந்த 1996ல் முதல் ஹைட்ரஜன் காரின் கான்செப்ட்டையும் அறிமுகம் செய்தது. ஆனால், தற்போதுதான் அது தயாரிப்பு நிலை மாடலாக வெளிவர இருக்கிறது. அத்துடன், இந்த காரின் தயாரிப்பு நிலை மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பினால் 480 கிமீ தூரம் வரை இந்த காரில் செல்ல முடியும்.

மிக எளிது

மிக எளிது

வெறும் 3 முதல் 5 நிமிடங்களில் இந்த காரில் ஹைட்ரஜன் எரிபொருளை நிரப்பிவிட முடியுமாம்.

ஆற்றல்

ஆற்றல்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் மின் மோட்டார் 0- 96 கிமீ வேகத்தை 10 வினாடிகளில் எட்டிவிடும் ஆற்றல் கொண்டது.

 வீட்டுக்கு மின்சாரம்

வீட்டுக்கு மின்சாரம்

இந்த காரிலிருந்து வீட்டிற்கு ஒரு வாரத்திற்கான மின்சார சப்ளையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பசுமை கார்

பசுமை கார்

ஹைட்ரஜன் மூலம் கிடைக்கும் மின் ஆற்றலில் இந்த கார் இயங்குகிறது. கழிவுப் பொருளாக நீராவி மட்டுமே வெளியாகும் என்பதால், நிசான் லீஃப், தெஸ்லா எஸ் போன்ற எலக்ட்ரிக் கார் மாடல்களைவிட இந்த கார் சுற்றுச்சூழலுக்கு மிக உகந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இந்த காரை முதலில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, அங்கு ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கலிஃபோர்னியா பல்ககலைகழகத்துடன் இணைந்து எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறது.

 நிதி உதவி

நிதி உதவி

ஹைட்ரஜன் எரிபொருள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக 200 மில்லியன் டாலர் நிதியை வழங்குவதற்கு கலிஃபோர்னியா மாகாண அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த ஆண்டு முதல்கட்டமாக 20 எரிபொருள் நிலையங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ முதல் சான்டியாகோ வரை மொத்தம் 68 ஹைட்ரஜன் நிலையங்களை அமைக்கப்பட உள்ளது.

முதல் பேட்ஜ்

முதல் பேட்ஜ்

முதல் லாட்டில் 10,000 டொயோட்டா எஃப்சிவி ஹைட்ரஜன் கார்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கு தகுந்த எண்ணிக்கையில் ஹைட்ரஜன் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 
Story first published: Wednesday, January 8, 2014, 10:45 [IST]
English summary
Toyota Fuel Cell Vehicle (FCV) concept, a hydrogen prototype car made its debut at the Tokyo Motor Show last year. On Jan 6, Monday, the Japanese auto giant showcased the FCV concept for the first time in North America at the Consumer Electronic Show in Las Vegas, with the announcement of bringing the first production vehicle in 2015.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+