டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு மினி எஸ்யூவியுடன் ஃபோக்ஸ்வேகன் ரெடி!

By Saravana

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கான்செப்ட் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2012ம் ஆண்டு சாவ் பாவ்லோ ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காம்பெக்ட் எஸ்யூவியின் கான்செப்ட்டை தயாரிப்புக்கு எடுத்துச் செல்ல ஃபோக்ஸ்வேகன் பச்சை கொடி காட்டிவிட்டது.

அடுத்த ஆண்டு இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி சர்வதேச அளவில் விற்பனைக்கு வர இருக்கிறது. 2016ம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டர் எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி இருக்கும்.

 காம்பெக்ட் மாடல்

காம்பெக்ட் மாடல்

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட அடக்கமான எஸ்யூவி மாடல் இது. 3.86 மீட்டர் நீளம், 1.73 மீ அகலம், 1.57 மீ உயரம் கொண்டதாக இருக்கும்.

இட வசதி

இட வசதி

4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருந்தாலும், 2.47 மீட்டர் வீல் பேஸ் கொண்டிருப்பதால், கேபினில் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும். தவிர, 280 லிட்டர் பூட் ரூம் கொண்டதாகவும், பின் இருக்கைகளை மடக்கினால், இதனை 987 லிட்டர் வரை அதிகரிக்கலாம்.

எஞ்சின்

எஞ்சின்

பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் எஸ்யூவியில் 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் அளிக்கும் 3 சிலிண்டர் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரியும். இந்தியாவில் வரும்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி டிரான்ஸ்மிஷனுடன் வரலாம்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த காம்பெக்ட் எஸ்யூவி 175 கிமீ உச்ச வேகம் கொண்டதாகவும், 0- 100 கிமீ வேகத்தை 8.2 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

985 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும் இந்த எஸ்யூவி லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

4 மீட்டருக்கும் குறைவான கார்களுக்கான வரிச் சலுகை தொடருமேயானால் நிச்சயம் ஈக்கோஸ்போர்ட்டுக்கு சவால் கொடுக்கும் விலையில் வரும். மேலும், விலை குறைப்புக்காக இந்தியாவில் ரூஃப் ரெயில்கள், ரியர் ஸ்கிட் பிளேட்டுகள் உள்ளிட்டவற்றை நீக்கி அறிமுகம் செய்யப்படலாம். போலோ, வென்ட்டோ கார்களுக்கு இடையில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

 
English summary
This news is not new, yet exciting. Yet another compact SUV model will arrive in India in the near future and it will be previewed for the first time in the country during next month's Auto Expo.
Please Wait while comments are loading...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+